Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

‘பாடை முதல் டெத் சர்டிபிகேட் வரை’ - காலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் ஸ்டார்ட்அப்!

பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, வேலை, தொழில் சார்ந்த எத்தனையோ திட்டமிடலுக்குத் துணைபுரியும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு மத்தியில், ஒருவரின் இறுதிச் சடங்குக்கு உதவி கண்ணியத்துடன் வழியனுப்பும் சேவையை செய்கிறது இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம்.

‘பாடை முதல் டெத் சர்டிபிகேட் வரை’ - காலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் ஸ்டார்ட்அப்!

Saturday December 03, 2022 , 3 min Read

எத்தனையோ புதுமைகளைச் சார்ந்த ஸ்டார்ட்அப்-கள் பற்றி கேள்விப்பட்டிப்போம். ஒவ்வொரு மனிதரும் நிச்சயம் சந்திக்கக் கூடிய இறுதி நிகழ்வுக்கு ஒத்தாசை புரியவும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாகியிருப்பது நம் கவனத்தை மட்டுமல்ல, கருத்தையும் ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது.

இறுதிச் சடங்கு சேவைக்காக உருவாக்கப்பட்டு செயலாற்றி வரும் ’சுகந்த் ஃப்யூனரல் மேனேஜ்மென்ட் பிரைவட் லிமிடெட்’ (Suganth Funeral Management Pvt Ltd) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம்தான் அது.

மும்பையைச் சேர்ந்த இந்த நிறுவனம், ஒற்றை ட்வீட் மூலம் இந்தியர்கள் பலரின் பார்வையிலும் பட்டுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடந்த ஸ்டார்ட்அப் சார்ந்த கண்காட்சி ஒன்றில் இந்த நிறுவனத்திலும் ஸ்டாலும் இடம்பெற்றுள்ளது.

Funeral Service

அந்த ஸ்டாலின் முன்பு சடலங்களை சுடுகாட்டுக்கும் இடுகாட்டுக்கும் எடுத்துச் செல்வதற்கான ‘பாடை’ போன்ற அமைப்பு, அந்தப் பக்கம் சென்ற பலருக்கும் முதலில் பகீர் அனுபவம் தந்திருக்கிறது. பிறகுதான், அந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நோக்கமும் சேவையின் தன்மையும் புரிந்திருக்கிறது.

அந்த ஸ்டாலின் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண், “இதுபோன்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஏன் தேவை?” என்று கேள்வியையும் தட்டிவிட, அதன் ரிப்ளை பகுதியில் கருத்துகள் குவிந்தன. குறிப்பாக, நூற்றுக்கணக்கான கருத்துகள் பாசிட்டிவாக அணுகப்பட்டிருந்தது. அவற்றில் சில:

“என் குடும்ப நபர் ஒருவர் முன்பு ஒருமுறை என்னிடம் கூறும்போது, ‘எதிர்காலத்தில் இறுதிச் சடங்குகள் ஏற்பாடு செய்யும் தொழிலைச் செய்யவும் ஆட்கள் வருவார்கள்’ என்று சொன்னார். அவரது அப்போது கூறியது இப்போது உண்மையாகிவிட்டது. இது ரொம்பவே ஆச்சரியமான விஷயம்தான்.”
“இந்தியாவில் இப்போது நியூக்ளியர் ஃபேமிலிதான் அதிகம். எனவே, இதுபோன்ற நிறுவனங்களின் தேவையும் சேவையும் தவிர்க்க முடியாத ஒன்றாகிறது.”
“இத்தகைய இறுதிச் சடங்கு சேவைகளைச் செய்ய அமெரிக்காவில் ஏற்கெனவே நிறைய நிறுவனங்கள் உள்ளன. ஆனால், இதுபோன்ற நிறுவனம் என்பது இந்தியாவுக்கு புதிதுதான். அதனால்தான் மக்கள் இதை ஆச்சரியமாக பார்க்கின்றனர்.”
“நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் பலருக்கு உறவுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இறுதிச் சடங்குக்கு எப்படி ஏற்பாடு செய்வது என்று தெரியாதவர்களுக்கு இதுபோன்ற நிறுவனங்களில் அத்தியாவசியம் ஆகிறது.
“ஒருவருக்கு இறப்பு நேரிடும்போது இறந்தவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாதபோது இதுபோன்ற சேவை அவசியம்தான்.”
“பிள்ளைகள் இல்லாத தம்பதி முதலானோருக்கு இது மிகவும் பயனுள்ள நிறுவனம்.”

இப்படி பல காரணங்களை நெட்டிசன்கள் அடுக்கியிருந்தனர். இவற்றைப் படிக்கும்போது, ‘சுகந்த் ஃப்யூனரல்’ நிறுவனம் உருவானதன் பின்னணியில் உண்மையிலேயே இருந்த காரணங்களை விட, இன்னும் கூடுதல் காரணங்கள் மக்களிடம் மிகுதியாக இருந்ததை கவனிக்க முடிந்தது.

Funeral Service Startup

என்ன செய்கிறது ‘சுகந்த் ஃப்யூனரல்’

ஒருவரது வீட்டில் யாரேனும் மரணம் அடையும்போது, அவரது இறுதிச் சடங்குகளை ஏற்பாடு செய்வது முதல் அவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெற்றுத் தருவது வரை அத்தனை இறப்புச் சான்ற விஷயங்களையும் நடைமுறைகளையும் செய்கிறது ‘சுகந்த் ஃப்யூனரல்’ நிறுவனம். இதற்காக ரூ.38,000 அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இறுதிச் சடங்குகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேலைகளையும் அந்த நிறுவன ஊழியர்கள் முன்னின்று சிறப்பான முறையில் செய்து தருகின்றனர்.

“பிள்ளைகள் இல்லாத தம்பதி முதலானோருக்கு இது மிகவும் பயனுள்ள நிறுவனம்,” என்ற மேற்கண்ட கருத்துக்கு ஏற்ப, இறுதிச் சடங்குக்கு அட்வான்ஸ் புக்கிங் ஆப்ஷனும் இங்கே உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

ஆம்புலன்ஸ் சேவை அளித்தல், இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு உதவுதல், மரணம் அடைந்தவரின் குடும்பப் பின்புலனுக்கு ஏற்ப சடங்குகளை ஏற்பாடு செய்தல், தகனத்துக்கு பின்னர் அஸ்தியை தண்ணீரில் கரைப்பதற்கும் ஏற்பாடு செய்தல் என அத்தனை பணிகளையும் செய்கிறது சுகந்த் ஃப்யூனரல் மேனேஜ்மென்ட் நிறுவனம்.

எப்படி உதித்தது யோசனை?

புதுப்புது பிசினஸ் ஐடியாக்களுக்கு மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் இந்தக் காலக்கட்டத்தில், இந்திய சமூகத்தில் யாரும் யோசிக்காத ஒரு ஏரியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்குவதற்கு யோசனை உதித்தது எப்படி?

Funeral Service Startup

இது குறித்து சுகந்த் ஃப்யூனரல் மேனேஜ்மென்ட் நிறுவனர் சஞ்சய் ராம்குடே பகிரும்போது,

"ஒரு படப்பிடிப்புக்காக வாரணாசிக்கு சென்றிருந்தேன். அங்கே தினம் தினம் கங்கை நதிக்கரையோரம் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகளுக்காக இறுதிச் சடங்கு செய்வதைப் பார்த்தபோது சில எண்ணங்கள் தோன்றின."

இப்போது கூட்டுக் குடும்பம் என்ற முறையை மிக மிக குறந்துவிட்டது. தனிக் குடும்பத்தில் வாழும் பலரும் தங்கள் பெற்றோர்களை கவனிக்க முடியாத நிலை. இதனால், முதியோர் இல்லங்கள் அதிகரித்துவிட்டன. இந்தச் சூழலில் இறுதிச் சடங்கு ஏற்பாடு செய்வதற்கு பலரும் திணறுவதைப் பார்க்க முடிகிறது.

"ஒரு குழந்தை பிறக்கும்போது எப்படி கொண்டாட்டங்கள் களை கட்டுமோ அதுபோலவே ஒருவர் இறக்கும்போது சம்பந்தப்பட்டவரின் குடும்பம் அவரை எந்தக் குறையுமின்றி வழியனுப்பி வைக்க வெண்டும். அப்போதுதான் ஒருவரின் வாழ்க்கை என்பது நிறைவான ஒன்றாகும். இதற்கு உதவுவதுதான் எங்கள் நிறுவனத்தின் நோக்கம்,” என்கிறார்.

இந்த நிறுவனத்தைப் பற்றி அறிந்துகொள்ள முற்பட்டபோது, அதன் டேக்லைன் நம் கவனத்தை ஈர்க்கிறது. அதுவே, இந்த சேவையின் மேன்மையையும் நமக்குச் சொல்கிறது. அது...

“கண்ணியத்துடன் வாழ்வை நிறைவு செய்வோம்”.


Edited by Induja Raghunathan

(Disclaimer: The views and opinions expressed in this article are those of the author and do not necessarily reflect the views of YourStory.)