முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட்கள் உதவியுடன் 513 கோடி ரூபாய் நிதி திரட்டி ஐஐடி மெட்ராஸ் சாதனை!
சென்னை ஐஐடி 2023-24ம்நிதியாண்டில் முன்னாள் மாணவர்கள், தொழில்துறையினர், தனிப்பட்டநன்கொடையாளர்கள் ஆகியோரிடமிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு சாதனைத் தொகையான ரூ.513 கோடி நிதி திரட்டியுள்ளது.
சென்னை ஐஐடி 2023-24ம் நிதியாண்டில் முன்னாள் மாணவர்கள், தொழில்துறையினர், தனிப்பட்ட நன்கொடையாளர்கள் ஆகியோரிடமிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு சாதனைத் தொகையான ரூ.513 கோடி நிதி திரட்டியுள்ளது.
இது தொடர்பாக வெளியான செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
சென்னை ஐஐடி 2023-24-ம் நிதியாண்டில் முன்னாள் மாணவர்கள், தொழில்துறையினர், தனிப்பட்ட நன்கொடையாளர்கள் ஆகியோரிடமிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு சாதனைத் தொகையான ரூ.513 கோடி நிதி திரட்டியுள்ளது. இது தவிர முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட் கூட்டாளிகளிடம் இருந்து 2023-24ம் நிதியாண்டில்ரூ.717 கோடி நிதியுதவிக்கான புதிய உறுதிமொழிகளையும் ஈர்த்துள்ளது.
தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகவும் சமூகத்தேவைக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கும் ஐஐடி மெட்ராஸ் உள்ளிட்ட நாட்டில் செயல்படும் பல ஐஐடி தொழில் நுட்பக் கழகங்களில் செயல்படுத்தப்படும் தொழில்நுட்பத் திட்டங்களுக்காகவும் பயன்படுத்த இந்த நிதி திரட்டப்பட்டுள்ளது.
மேலும், தகுதியான மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கவும் வளர்ந்து வரும் உள்கட்டமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. இந்த நிதியாண்டில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான வாய்ப்பை ஐஐடி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து அவர்களுக்கும் ஆதரவு அளிக்கப்படும்.
எந்த ஒரு கல்விநிறுவனத்தையும் விட அதிகத் தொகையை நன்கொடையாகப்பெற்று தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, நிதி திரட்டுவதில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஆராய்ச்சிகள், மாணவர்களுக்கான புரோஜெக்ட்கள், அதி நவீன உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
2023-24 நிதியாண்டில் திரட்டப்பட்டுள்ள ரூ.513 கோடி நிதியானது 2022-23 நிதியாண்டில் திரட்டப்பட்ட ரூ.218 கோடியைக் காட்டிலும் 135% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட நன்கொடையாளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்த ஐஐடி இயக்குநரும் பேராசிரியருமான வி.காமகோடி கூறும்போது,
“மிக விரைந்த கல்வி வளர்ச்சிக்கு மிக அதிக அளவில் நிதி திரட்டப்பட வேண்டியது அவசியமாகிறது. முன்னெப்போதையும் விட அதிகளவில் நிதி திரட்டுவதற்கு ஆதரவளித்த சமூகப்பொறுப்புணர்வு நிதி கூட்டாளர்களுக்கும், ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவர்களுக்கும்நன்றி,” எனக்குறிப்பிட்டார்.
2023-24-ம்ஆண்டில் முன்னாள் மாணவர்கள் மூலம் மட்டும் திரட்டப்பட்ட மொத்தத்தொகை ரூ.367 கோடி. முந்தைய ஆண்டை விட இது 282% அதிகம்.
முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட்கள் பல்வேறு முக்கியத் திட்டங்களுக்கு நிதி ஆதரவளித்து வருகின்றனர்:
1.வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப்பள்ளி
2. சிறந்த விளையாட்டு வீரருக்கான மாணவர் சேர்க்கைத் திட்டம்
3. ஜெய்ஸ்ரீ மற்றும் வெங்கட் காற்றாலை திட்டம்
4. சங்கர் நீரிழிவு ஆராய்ச்சி மையம்
5. வால்மார்ட் செண்டர் ஃபார் டெக் எக்ஸலென்ஸ்
6. நிலையான சப்ளை செயின்களுக்கான ஃபெடக்ஸ் மையம்
7. மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இளங்கலை உடற்கூறியல் ஆய்வகம்
ஆகிய திட்டங்களுக்கு முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட்கள் நிதி ஆதரவளித்து வருகின்றனர்.
இவ்வாறு ஐஐடி சென்னை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.