60 ஆண்டுகால IKEA நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் தனித்து இருப்பது எப்படி?
IKEA நிறுவனம்..... ஒரு பார்வை!
IKEA நிறுவனம், வீட்டு அலங்காரப்பொருட்கள், பர்னிச்சர்கள், கிச்சன் பொருட்கள் என அனைத்துவகையான பொருட்களையும் விற்பனை செய்யும் முன்னணி நிறுவனம்.
உலக அளவில் IKEA மக்களை ஈர்த்துள்ளதற்கு அவர்கள் விற்கும் பொருட்கள்மட்டும் காரணமல்ல. அதையும் கடந்து முக்கியமான ஒன்று உள்ளது. IKEA- ஸ்டோர்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான உணவு மற்றும் புத்துணர்ச்சி அறைகள் அவர்களின் தனித்துவத்தை பறைசாற்றுகிறது.
"கடந்த 60வது ஆண்டுகால விற்பனை அனுபவம் எங்களுக்கு ஒன்றை மட்டும் அழுத்தமாக உணர்த்திருக்கிறது. வாடிக்கையாளர்களின் வயிறு நிறைந்தால், அவர்கள் எடுக்கும் முடிவு நல்லதாக இருக்கும் என்பது தான் அது,” என ஐ.கே.இ.ஏ-வின் இந்தியாவின் சந்தை மற்றும் விரிவாக்க மேலாளர் பெர் ஹார்னெல் கூறுகிறார்.
மேலும் அவர், "எங்கள் கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களின் குழப்பத்தையும், அவர்கள் என்ன வாங்குவது என்பது தொடர்பான அழுத்தத்தையும் குறைப்போம். அதில் உணவு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. வாடிக்கையாளரை உட்காரச் சொல்லி, அவர்கள் திட்டமிடுவதற்கும், பொருட்கள் வாங்குவதற்கும், முடிவெடுப்பதற்குமான நேரத்தை கொடுப்போம்,” என்கிறார்.
இன்று இந்தியாவில் உள்ள அனைத்து ஷாப்பிங் மால்களிலும், ஃபுட் கோர்ட்-கள் பரவிக்கிடக்கின்றன. ஃபுட் கோர்ட் இல்லாத ஷாப்பிங் மால்களே இல்லை. இதற்கு முன்னாடி IKEA நிறுவனம் தான்.
1960ம் ஆண்டு ஸ்வீடனில் IKEA நிறுவனத்தின் முதல் கடை தொடங்கப்பட்டபோது, கடைக்குள் உணவகத்தை அமைத்தார்கள். இன்றைய உணவக ஐடியாக்களுக்கு அவர்கள், முன்னோடிகளாகத் திகழ்ந்துள்ளனர்.
உணவுடன் ஐ,கே.இ.ஏ.வுடனான பந்தம் என்பது ஆழமானது. அவர்கள் அப்படித்தான் சிந்தித்தார்கள். பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பசியுடன் இருக்கக்கூடாது என்பது அவர்களின் நோக்கம். தற்போது கூட, அண்மையில் மும்பையில் திறக்கப்பட்ட IKEA கடையில் 1000 பேர் அமர்ந்து உண்ணும் வகையிலான ரெஸ்டாரண்ட் ஒன்றை அமைத்துள்ளார்கள்.
”வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு வரும்போது, அவர்களின் குடும்பத்துக்கு அன்றைய நாளை மறக்கமுடியாத நாளாக மாற்றுவது முக்கியம். வீட்டு அலங்காரம் என்பது ஒரு தனிப்பட்டவருடையது அல்ல. அது ஒட்டுமொத்த குடும்பத்துக்குமானது. வாடிக்கையாளர்களின் வீட்டின் ஒவ்வொரு அறைகளிலும், அவர்களை உத்வேகப்படுத்தும் பொருட்களை வழங்கு வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். வீட்டின் ஒவ்வொரு உறுப்பினரும் அதை அனுபவிக்கவேண்டும்.”
அதேபோல, குடும்பத்துடன் கடைக்கு வரும் குழந்தைகள் ஏமாற்றத்துடன் வெளியில் செல்லக்கூடாது என்பதற்காக, மும்பையின் ‘நவி மும்பை ஸ்டோர்’ உட்பட உலகின் பல பகுதிகளிலுள்ள ஐகேஇஏவின் கடைகளில் குழந்தைகளுக்கென தனி பகுதியையும் வைத்துள்ளோம்.
தற்போதுள்ள கொரோனா அச்சம் காரணமாக வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். அதன்காரணமாக ஆன்லைன் முன்பதிவுகளை அனுமதித்துள்ளோம். அதன்படி, நேரடியாக கடைக்கு வருபவர்களின் தனி மனித இடைவெளி உறுதி செய்யபடுகிறது.
எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கு மட்டுமல்லாமல் எங்கள் IKEA சக ஊழியர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வெப்பத் திரையிடல்கள், கைச் சுத்திகரிப்பான்கள், மாஸ்க் மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பயன்படுத்துகிறோம். உடல்நலம் மற்றும் நல்வாழ்வு எங்களுக்கு முக்கியம்,” என்று விரிவாக்க மேலாளர் பெர் ஹார்னெல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்துத் தெரிவித்துள்ளார்.
தொகுப்பு: மலையரசு