2019ல், BMW கார் விற்பனை 13% சரிவு!

BMW நிறுவனம் இந்த ஆண்டு, அடுத்த தலைமுறையைச் சேர்ந்த M-3 மற்றும் M-4 உள்ளிட்ட வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது.

15th Jan 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

ஜெர்மனி கார் தயாரிப்பு நிறுவனமான BMW, இந்தியாவில் விற்பனை 13.8 சதவீதம் குறைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. 2018ல் 11,105 ஆக இருந்த கார் விற்பனை 9,641 ஆக குறைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கார்


இந்த ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனம் 2019ல் 9,000 BMW மற்றும் 641 மினி கார்களை விற்பனை செய்துள்ளது. மேலும், BMW Motorrad  2,403 பைக் விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டு விற்பனையான 2,187 பைக் எண்ணிக்கையை விட இது அதிகமாகும்.


நிறுவனத்தின் மோட்டார்வாகன பிரிவு, அதன் பார்ட்னர் நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் G 310 R, G 310 GS, ஆகிய இரண்டு வாகனங்களால் விற்பனை உயர்வைக் கண்டுள்ளது. இவை இந்தியாவில், BMW Motorrad’ன் 85 சதவீத விற்பனைக்கு காரணமாக உள்ளன.


பல்வேறு பொருளாதார மற்றும் அமைப்பு சார்ந்த விஷயங்கள் பாதிப்பை ஏற்படுத்தியதால், இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு 2019 ஆண்டு கடினமானதாக இருந்தது என்று BMW குழும இந்தியா தலைவர் மற்றும் சி.இ.ஓ ருத்ரதேஜ் சிங் கூறியுள்ளார்.  

 இருப்பினும், BMW குழும இந்தியா நிறுவனம் புதிய தயாரிப்புகள் அறிமுகங்களின் மூலம் இந்த சவால்களை சந்தித்து விரும்பப்படும் பிராண்டாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"BMW 3 வரிசை மற்றும் BMW X1 மூலம் புதிய வாடிக்கையாளர்கள் இந்த பிரிவில் நுழைய வகை செய்துள்ளோம். அதே நேரத்தில், BMW X5, BMW 6 வரிசை மற்றும் BMW 7 வரிசை மூலம் இப்பிரிவு வாடிக்கையாளர்கள் அப்கிரேட் செய்து கொள்ளவும் வழி செய்துள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.


நிறுவனம்,  BMW X7 கார்களுக்கு சிறந்த ஆர்டர்களை பெற்றுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

"இந்தத் துறை இன்னமும் சவாலான சூழலை எதிர்கொண்டாலும், இந்த ஆண்டை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்துவதன் மூலம் போட்டித்தன்மையுடன் இருப்போம்,” என்று அவர் கூறியுள்ளார்.


கடந்த ஆண்டு நிறுவனம், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி பிரிவு வாகனங்கள் மூலம் 50 சதவீத விற்பனையை பெற்றது.  BMW X5, BMW X3 மற்றும் BMW X1 இதில் அடங்கும். BMW 5 வரிசை மற்றும் BMW 3 வரிசையும் நல்ல வரவேற்பை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்தி: பிடிஐ | தமிழ்ல்: சைபர் சிம்மன்


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
Report an issue
Authors

Related Tags

Our Partner Events

Hustle across India