வருமான வரி செலுத்துபவரா நீங்கள்? ஏப்ரல் 1 முதல் புதிய நடைமுறைகள் என்ன?
புதிய நிதியாண்டில் புதிய நடைமுறைகள்!
இந்த நிதியாண்டி நிறைவடைய இன்னும் ஒருவாரம் மட்டுமே இருக்கிறது. இதையடுத்து தொடங்க உள்ள புதிய நிதியாண்டில் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன. அது என்ன என்பதை பார்ப்போம்.
ஏப்ரல் மாதத்திலிருந்து வருமான வரியில் புதிய மாற்றங்கள் வர இருக்கின்றன. இந்த புதிய மாற்றங்கள் யாருக்கு ஏற்றத்தை கொடுக்கும், யாருக்கு பாதகத்தை கொடுக்கும் என்பதை பார்க்க வேண்டியிருக்கிறது.
இதை கவனிங்க!
பொதுவாக வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும்போது, சம்பள வருமானம், வங்கிக் கணக்கு, வரி செலுத்திய தகவல், டிடிஎஸ் விபரம் ஆகியவை முன்கூட்டியே பதிவிட்டு இருக்கும். இந்நிலையில், தற்போது மூலதன ஆதாயங்கள், டிவிடெண்ட் வருமானம், வங்கியில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி வருமானம், போஸ்ட் ஆபீஸ்-ல் இருந்து கிடைத்த வருமானம் ஆகியவற்றையும் நேரடியாக வருமான வரி அறிக்கையில் சேர்க்கப்படும்.
எனவே மேற்கண்ட விவரங்கள் துல்லியமாக இருப்பதை வருமான வரி செலுத்துவோர் உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. இந்த விஷயத்தில் வருமான வரி செலுத்துவோர் கவனமாக இருக்க வேண்டும். மேலும், வருமான வரி செலுத்துவோர் இனி முன்கூட்டியே வருமான வரியை செலுத்தும்போது, அவர்களுக்கு, கிடைக்கும் ஈவுத்தொகை (Dividend) வருமானத்தை முன்கூட்டியே கணக்கிட்டு வரி செலுத்தத் தேவையில்லை.
இது முக்கியம்!
நிதியாண்டில் ஒரு ஊழியரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தால், அதற்கும் வரி விகிதம் உண்டு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தத் திட்டம் ஏன் அனைவரையும் ஈர்க்கிறது என்றால், ஒரே காரணம் தான்.
வரிச் சலுகை உண்டு என்பதால் தான் பலரையும் ஈர்க்கிறது. எனவே சம்பளதாரர்கள் இதனை கவனத்தில் கொண்டு செயல்படலாம். இதில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு வேளை நீங்கள் அதிகத் தொகையை செலுத்த விரும்பினால், அதற்கு தகுந்தாற்போல வரி செலுத்த வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதேபோல், மத்திய பட்ஜெட் அறிவிப்பின் படி, மூத்த குடிமக்கள், அதாவது 75 வயது அல்லது அதற்கு அதிகமாக வயதுடைய மூத்த குடிமக்கள், பென்ஷன் மற்றும் வங்கி வட்டி வருமானம் மட்டுமே வருடாந்திர வருமானமாக இருக்கும் பட்சத்தில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யத் தேவையில்லை. எனினும் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வருமான வரி தாக்கலை அதிகரிக்க முடிவு செய்யபட்டது. அதன்படி, வருமான வரி தாக்கலை அதிகரிக்க பட்ஜெட்டில் டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் ஆகியவற்றை பற்றி நிதியமைச்சர் அறிவித்தார். இந்த நடைமுறையானது வரும் நிதியாண்டு முதல் அமலுக்கு வர இருக்கிறது. இதன் மூலம் புதியதாக வருமான வரிச் சட்டத்தில் 206AB மற்றும் 206CCA என்ற புதிய பிரிவுகள் அமலுக்கு வரவுள்ளன.
அப்படி பார்க்கும்பது, வருமான வரி தாக்கல் செய்யாத நபர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே 50,000 ரூபாய் டிடிஎஸ்(TDS) அல்லது டிசிஎஸ் (TCS) விலக்கு பெற்றிருந்தால், டிடிஎஸ்(TDS) அல்லது டிசிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.