Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

‘இந்தியா Zoom-ன் இரண்டாவது பெரிய சந்தை’ - ஜூம் நிறுவனர் எரிக் யுவான்

கொரோனா பாதிப்புக்குப் பிறகு உலகளவில் பிரபலமான Zoom; கல்வி, பணி, சுகாதாரம், திருமணம் என பல செயல்பாடுகளுக்கு சேவை அளித்து வருகிறது.

‘இந்தியா Zoom-ன் இரண்டாவது பெரிய சந்தை’ - ஜூம் நிறுவனர் எரிக் யுவான்

Wednesday August 12, 2020 , 3 min Read

முன்னணி வீடியோ சந்திப்பு சேவையான Zoom நிறுவனர் எரிக் யுவான், டி.ஐ.இ தில்லி கிளை நடத்திய 'இந்தியா இண்டெர்நெட் தினம் 2020’ நிகழ்ச்சியில் செக்கோயா இந்தியா நிர்வாக இயக்குனர் ராஜன் அனந்தனுடன் பேசிய போது, அமெரிக்காவை அடுத்து, ஜூம் நிறுவனத்தின் 2வது பெரிய சந்தையாக இந்தியா விளங்குவதாக தெரிவித்தார்.  


டி.ஐ.இ தில்லி பகுதியின் தலைவராகவும் விளங்கும் அனந்தன், மக்கள் அதிக நேரத்தை செலவிடும் சேவையை எரிக் உருவாக்கியிருப்பதாக குறிப்பிட்டார்.


சிஸ்கோ நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட வீடியோ சந்திப்பு சேவையான வெப் எக்ஸ் நிறுவனத்தின் முதல் 20 உழியர்களில் ஒருவரான எரிக், வீடியோ சந்திப்பு சேவையை மாற்றி அமைக்கும் வகையில் ஜூம் சேவையை உருவாக்கிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

ஜூம்
‘சிஸ்கோ வெப் எக்ஸ் நிறுவனத்தில் 2011 வரை இருந்தேன். அப்போது ஒரு மகிழ்ச்சியான வாடிக்கையாளரை கூட நான் சந்திக்கவில்லை. வெப் எக்ஸ் அருமையான வீடியோ அனுபவமாக இல்லை. எதிர்காலத்தில் வாடிக்கையாளர்கள் எளிமையான வீடியோ சந்திப்பு சேவையை விரும்பினர்,’ என்று அவர் தெரிவித்தார்.

எரிக், செல்போன் சார்ந்த ஒரு வீடியோ சந்திப்பு யோசனையை சிஸ்கோவிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

“இந்த சந்தையில் ஏற்கனவே நிறுவனங்கள் நிரம்பியிருந்ததால் என் நண்பர்கள் வீடியோ சந்திப்பு சேவை தவிர எதையாவது துவக்குமாறு கூறினார்கள். ஆனால் அடுத்த தலைமுறை சேவையை உருவாக்க விரும்பினேன். எனவே, உள்ளுணர்வை நம்பி செயல்பட்டேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.

2011ல் சிஸ்கோவில் இருந்து வெளியேறியவர், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளிக்கும் நோக்கத்துடன் ஜூம் சேவையை துவக்கினார்.

"Zoom சேவையை துவக்கிய போது, வீடியோ சார்ந்த நுட்பம் எதிர்காலத்தில் பிரபலமாகும் என அறிந்திருந்தோம். எனவே கட்டமைப்பை சரியாக உருவாக்க விரும்பினோம். இதை சரியாக செய்துவிட்டால், AWS அல்லது ஆரக்கிள் கிளவுட் சேவை மூலம் வளரலாம் என நினைத்தோம்,” என்கிறார்.

நாஸ்டக் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஜூம், இந்த ஆண்டு துவக்கத்தில், சிலிக்கான் வேலியின் இரண்டாவது ஈர்ப்பு மிகு ஸ்டார்ட் அப் ஆன போது, அதன் நிறுவனரான எரிக், தனிப்பட்ட சொத்து மதிப்பு 10 பில்லியன் டாலராக உயர்ந்தது. புளூம்பர்க் கோடீஸ்வரர்கள் பட்டியல் அவரது மதிப்பு 13.6 பில்லியன் டாலர் என்கிறது.

ஜூம்

கொரோனா வாய்ப்பு

ஒன்பது ஆண்டுகளாக ஜூம், வர்த்தக வாடிக்கையாளர்களிடம் கவனம் செலுத்தியது. எனினும், கொரோனா பாதிப்புக்கு பின் நிலைமை மாறியது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வீடியோ சந்திப்புக்கான தேவை பெருகியது.

"முன்னதாக வர்த்தக நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தினோம். ஆனால் கொரோனா தொற்று நிலைமையை மாற்றியது. புதிய பயன்பாடுகளை அறிந்து கொண்டு அதற்கேற்ப வேகமாக மாறி வருகிறோம்,” என்கிறார் எரிக்.

நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், வாடிக்கையாளர் சொல்வதை காது கொடுத்து கேட்டால் தான் அவர்கள் உங்கள் சேவையை எதற்காக பயன்படுத்துகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடியும் என்கிறார் அவர்.


துவக்கத்தில் தனது மேடையில் பிரைவசி மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் சில தவறுகளை செய்ததாகவும் அவர் ஒப்புக்கொள்கிறார்.

"நிறுவன வாடிக்கையாளர்களுக்காக நிறைய பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கியிருந்தோம். ஆனால், பள்ளி மாணவர்களுக்கு இதற்கு முன் சேவை அளித்ததில்லை. பள்ளிகளில் ஐடி குழு இல்லை. அவர்கள் Zoom-ல் இருந்த பாதுகாப்பு அம்சங்களை அறிந்திருக்கவில்லை. சேவை அளித்தால் மட்டும் போதாது, முதல் முறை ஜூம் வாடிக்கையாளர்களுக்கு ஐடி குழுவின் சேவையையும் அளிக்க வேண்டும் என புரிந்து கொண்டோம்,” என அவர் விளக்குகிறார்.

"நீங்கள் சிறிய தவறு செய்யலாம் ஆனால் அது தொடர்பான புரிதலை மாற்ற நீண்ட காலம் ஆகும் எனும் பாடம் கற்றதாகவும் அவர் கூறுகிறார். கொரோனா தொற்றுக்குப்பிறகு ஜூம் இந்தியா உள்ளிட்ட 25 நாடுகளில் தனது சேவையை இலவசமாக வழங்கியதாவும் தெரிவிக்கிறார்.

வீடியோவின் எதிர்காலம்

தொழில் துறையின் அனைத்து பிரிவுகளிலும், நோய்த் தொற்று முடிந்த பிறகும் வீட்டியில் இருந்தே பணியாற்றும் தொலை தூர பணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஜூம் ஏற்கனவே, கல்வி, பணி, சுகாதாரம், திருமணம் என அனைத்து பயன்பாடுகளுக்கும் பயன்படுவதாக அனந்தன் கூறுகிறார்.

"ஒவ்வொரு பத்தாண்டிலும், வாடிக்கையாளர்கள் விரும்புவதை அளிக்கும் எளிய எண்ணத்தால் பிறந்த ஒரு மகத்தான நிறுவனம் ஒரு தலைமுறை நிறுவனமாக உருவாவதை பார்க்கிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் வீடியோவின் எதிர்காலம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.
ஜூம்

ராஜன்

எதிர்காலத்தில் வீடியோ மேலும் நெருக்கமாகி, பெளதீக அனுபவத்திற்கு நிகராக அமையும் என்றார். ஜூம் புதிய அம்சங்களில் கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

"செயற்கை நுண்ணறிவு சார்ந்த உடனடி மொழிபெயர்ப்பு வசதி எதிர்காலத்தில் உண்டாகும். நெருக்கம், கைகுலுக்கல், கட்டித்தழுவல், காபியின் மணம் ஆகியவை வீடியோ சந்திப்பில் உருவாகும். நாம் அதை இன்னும் நெருங்கிவிடவில்லை. ஆனால், நேரடி சந்திப்புக்கு நிகரான அல்லது மேம்பட்ட அனுபவத்தை ஜூம் மூலம் வழங்க முற்படுகிறோம் என்றும் எரிக் விளக்கினார்.

ஜூமின் விரிவாக்கத்தில் உள்ளூர் உத்தியும் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார். ஜூம் அண்மையில் தனது இந்திய செயல்பாடுகளுக்காக பெங்களூரில் மையம் துவக்கியுள்ளது.


ஜூம்; இந்தியாவுக்கான பிரத்யேக சேவைகளை அறிமுகம் செய்ய இருக்கிறதா என அனந்தன் கேட்டதற்கு, நாங்கள் மேலும் சர்வதேச தன்மையை பெற விரும்புகிறோம். இதை எங்களால் மட்டுமே முடியாது என்பதால், ஜூம் சந்தையில் சேவைகளை உருவாக்க மூன்றாம் தரப்பினரை அழைக்கிறோம் என்று எரிக் பதில் அளித்தார். உள்ளூர் உத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.


ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில்: சைபர்சிம்மன்