Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

ஜியோ-கூகுள் போன், ஜியோ டிவி+, ஜியோ கிளாஸ்: ரிலையன்ஸ் அறிமுகம்!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 43வது வருடாந்திரப் பொதுக்குழுக் கூட்டத்தில் 5ஜி சேவை, கூகுள் நிறுவன முதலீடு, அறிவிப்புகளோடு அறிமுகமான புதிய ப்ராடக்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஜியோ-கூகுள் போன், ஜியோ டிவி+, ஜியோ கிளாஸ்: ரிலையன்ஸ் அறிமுகம்!

Thursday July 16, 2020 , 2 min Read

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 43-வது வருடாந்திரப் பொதுக்குழுக் கூட்டம் நேற்று (15.7.2020) மெய்நிகர் வடிவில் நடைபெற்றது. இதில் பேசிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

Jio GM

ஜியோ பிளாட்பார்ம் இதுவரை 1,52,056 கோடி ரூபாயை பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து முதலீடாகப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஜியோ நிறுவனத்தின் 7.7% பங்குகளை கூகுள் நிறுவனம் 33,737 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்து வாங்குகிறது. இந்த அறிவிப்பு நேற்றைய கூட்டத்தில் வெளியிடப்பட்டது.


ஜியோ நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பங்களைக் கொண்டு 5ஜி சேவையை விரைவில் வழங்க உள்ளதாகவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.

ஜியோ- கூகுள் ஸ்மார்ட்போன்

jio phone

ஜியோ பிளாட்பார்ம் மற்றும் கூகுள் இணைந்து குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் தயாரிக்கவும் ஒப்பந்தம் போட்டது. இவர்கள் முற்றிலும் இந்தியாவிலே தயாரிக்கப் போகும் ஸ்மார்ட்போன்கள் மலிவான விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்தியர்கள் அனைவரின் கையிலும் மொபைல் போன்கள் கிடைக்கும் என்ற இலக்கை நோக்கி இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் எல்லாரிடமும் ஸ்மார்ட்போன்கள் இருக்கும். இது கூகுளுடன் இணைந்த திட்டம் என்பதால் அதன் பல அம்சங்கள் இந்த போனில் இடம்பெறும்,” என்று தெரிவித்துள்ளனர்.

ஜியோ கிளாஸ்

முகேஷ் அம்பானி நேற்றைய நிகழ்ச்சியில், 'ஜியோ கிளாஸ்’ என்கிற ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தினார். இதன் விலை உள்ளிட்ட மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த ஸ்மார்ட் கண்ணாடியின் கேபிளை மொபைலில் இணைத்து 3டி தொழில்நுட்பத்தில் வீடியோ அழைப்புகள் செய்யலாம்.


இந்த ஜியோ கிளாஸ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் மாணவர்கள் 3டி வர்ச்சுவல் ரூம் மூலம் பாடங்களை காணவும், படங்கள், வீடியோ மூலம் கற்றுக் கொள்ளவும் உதவும். Jio Glass எப்படி செயல்படும் என்று டெமோ செய்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் கிரன் தாமஸ்,

“ஹலோ ஜியோ, ஆகாஷ் மற்றும் ஈஷாவுக்கு (இருவரும் முகேஷ் அம்பானியின் மகன், மகள்) கால் செய்யுங்கள்.. என ஜியோ கிளாஸ்-க்கு உத்தரவிட்டார். உடனே கால் செய்த கிளாஸ், ஆகாஷை 3டி அவதார் வடிவிலும், ஈஷாவை 2டி வீடியோ காலில் இணைத்தது. இருவரும் ஜியோ கிளாஸ் போட்டுக்கொண்டு உரையாடினர்.”

ஜியோ மீட்

இந்தியாவின் முதல் க்ளவுட் சார்ந்த வீடியோ கான்ஃபரன்சிங் ஆப் ‘ஜியோ மீட்’. இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளதாக இந்த பொதுக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.


Zoom ஆப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள Jio Meet ஆப், அதன் அச்சாக இருப்பதாக பலர் கருத்து தெரிவிந்திருந்தனர். இருப்பினும் முற்றிலும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஜியோ மீட் ஆப்’க்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது.


இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உரையாடவும், ஆன்லைன் நிகழ்வுகள், பயிற்சி பட்டறைகள் நடத்தவும் ஏதுவான செயலி ஆக இருக்கிறது.

ஜியோ டிவி பிளஸ்

ஒரே மேடையில், டிவி சேனல்கள், ஓடிடி தளங்கள் மற்றும் இதர ஆப்’களை கொண்டு வருவதே Jio TV+ ஆகும்.

Jio Tv+

‘ஜியோ டிவி பிளஸ்’ சேவையானது நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், சோனி எல்ஐவி உள்ளிட்ட 12 முன்னணி ஓடிடி தளங்களை ஒன்றிணைக்கிறது. இதனால் பயனர்கள் நிகழ்ச்சிகளை, சினிமாக்களை எளிதாகப் பார்த்து மகிழலாம்.


ஒரே ஒரு லாக் இன் கொண்டு எல்லா ஆப்’களையும் இதில் திறக்க முடியும். அமேசான் ஃபயர்ஸ்டிக் போலவே வரும் ஒரு ரிமோட் கொண்டு இதை இயக்கமுடியும். ஜியோ டிவி+ இல் மேலும் பலர் பார்ட்னராக இணைவார்கள் என்றும் ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்.