'கொரோனா இரண்டாம் ஆண்டு பாதிப்பு மிக, மிக மோசமாக இருக்கும்’ - WHO கவலை!
கொரோனா இரண்டாம் அலைக்கு மத்தியில் இந்தியாவின் நிலை கவலை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பல மாநிலங்களில் பாதிப்பு அதிகரிப்பது, அதிகமானவர்கள் மருத்துவமனையில் அனுமதிப்பது மற்றும் அதிகரிக்கும் மரணங்கள் காரணமாக இந்தியாவில் கொரோனா நிலை கவலை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா முதல் ஆண்டை விட இரண்டாம் ஆண்டின் பாதிப்பு மோசமாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்தியா கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள உலக சுகாதார அமைப்பு உதவி வருவதகாவும், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருந்து பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"பல மாநிலங்களில் பாதிப்பு அதிகரிப்பது, அதிகமானவர்கள் மருத்துவமனையில் அனுமதிப்து மற்றும் அதிகரிக்கும் மரணங்கள் காரணமாக இந்தியாவில் கொரோனா நிலை கவலை அளிப்பதாக," அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்தியா கொரோனா இரண்டாம் அலை பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று 3,43,144 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 2,40,46,809 ஆக உள்ளது.
மேலும், 2,62,317 உயிரிழப்பு நிகழந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உண்டாகி இருக்கும் நெருக்கடி போன்ற நிலை இந்தியாவில் மட்டும் அல்ல, நேபாளம், இலங்கை, கம்போடியா, தாய்லாந்து, எகிப்து, உள்ளிட்ட பல நாடுகள் இதே போல மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கெப்ரியாசிஸ் தெரிவித்துள்ளார்.
சில ஆப்பிரிக்க நாடுகளிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு அனைத்துவிதமான உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
உலகம் முழுவதும் கொரோனா ஏற்கனவேன் 3.3 மில்லியன் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இரண்டாம் ஆண்டு பாதிப்பு மிகவும் மோசமாக இருகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி விநியோகம் சார்ந்த சவால்கள் முக்கியப் பிரச்சனையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
செய்தி- பிடிஐ