Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

2022 தொடங்கிய 2 மாதத்தில் யூனிகார்ன் அந்தஸ்து அடைந்த 10 ஸ்டார்ட்-அப்’கள்!

ஹசுரா நிறுவனம் சி சுற்றில் 100 மில்லியன் டாலர் நிதி திரட்டியதன் மூலம், யூனிகார்ன் அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த ஆண்டு யூனிகார்னாகும் 10 வது இந்திய தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்பாக விளங்குகிறது.

2022 தொடங்கிய 2 மாதத்தில் யூனிகார்ன் அந்தஸ்து அடைந்த 10 ஸ்டார்ட்-அப்’கள்!

Saturday February 26, 2022 , 4 min Read

கிராப்கியூஎல் (GraphQL) ஸ்டார்ட் அப் நிறுவனமான ஹசுரா, (Hasura), கிரினோக்ஸ் நிறுவனம் தலைமை வகித்த சி சுற்றில் 100 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.

இந்தி நிதி மூலம் ஹசுரா நிறுவனம், இதுவரை மொத்தம் 136.5 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து நிறுவனம், இந்த ஆண்டு யூனிகார்ன் அந்தஸ்து பெறும் பத்தாவது நிறுவனம் ஆகியுள்ளது.

2022ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலேயே இதுவரை பத்து இந்திய ஸ்டார்ட் அப்கள் யூனிகார்ன் அந்தஸ்து பெற்றுள்ளன.

மேம்பட்ட அனல்டிக்ஸ் நிறுவனமான பிராக்டல், கல்வி நுட்ப நிறுவனமான லீட், மனிதவள நுட்ப நிறுவனமான டார்வின்பாக்ஸ், சமூக காமர்ஸ் நிறுவனமான டீல்ஷேர், பிளாக் செயின் நிறுவனமான பாலிகன், உள் அலங்கார நிறுவனமான லைவ்ஸ்பேஸ், பி2பி காமர்ஸ் நிறுவனமான எலாஸ்டிக்ரன், லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான எக்ஸ்பிரஸ்பீஸ், உரையாடல் ஏஐ நிறுவனமான யூனிபோர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரு பில்லியன் டாலர் சந்தை மதிப்பு பெற்று யூனினார்ன் நிறுவனங்களாகியுள்ளன. இப்போது இந்த வரிசையில் பத்தாவது நிறுவனமாக ஹசுரா இணைந்துள்ளது.

Unicorns of India

யூனிகார்ன் ஆண்டு

2022ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலேயே இந்திய சூழலில் 10 தொழில்நுட்ப யூனிகார்ன்கள் உருவாகியுள்ளன. இதனிடையே, PwC அறிக்கை, இந்த ஆண்டு 50க்கும் மேற்பட்ட இந்திய ஸ்டார்ட் அப்கள் யூனிகார்ன் அந்தஸ்து பெறும் சாத்தியம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

2021ம் ஆண்டு, 44 ஸ்டார்ட் அப்கள் யூனிகார்ன் அந்தஸ்து பெற்றன. 2011 முதல் 2020 வரை மொத்தம் 33 யூனிகார்ன் நிறுவனங்களே உருவாகின.

2021ம் ஆண்டில் ஸ்டார்ட் அப்கள் நிதி திரட்டுவது சாதனை அளவை தொட்ட நிலையில், இந்த ஆண்டு ஸ்டார்ட் அப் சூழலில் உத்வேகம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு உருவான யூனிகார்ன் நிறுவனங்கள் பற்றி ஒரு அறிமுகம்:

ஸ்டார்ட்

Fractal

நியூயார்க், மும்பையை தலமையகமாகக் கொண்ட இந்த செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட அனல்டிக்ஸ் நிறுவனம் ‘ஃப்ராக்டல்’ (Fractal), ஜனவரியில் டிபிஜி கேபிடல் ஏசியாவிடம் இருந்து 360 மில்லியன் டாலர் நிதி திரட்டியதாக அறிவித்தது.

இந்த ஒப்பந்தம் காலாண்டில் இறுதியாகும் எனும் நிலையில், நிறுவனம் இந்த நிதிச்சுற்று மூலம் நிறுவனம் ஒரு பில்லியன் டாலருக்கு மேல் சந்தை மதிப்பை எட்டியுள்ளதாக கருதப்படுகிறது.

லீட்

LEAD

கல்வி நுட்ப ஸ்டார்ட் அப்பான லீட் (LEAD) ஜனவரியில், 1.1 பில்லியன் டாலர் சந்தை மதிப்பில் இ சுற்று நிதியாக 100 மில்லியன் டாலர் நிதி திரட்டியது. 2020ல் யூனிகார்ன் அந்தஸ்து பெறும் முதல் கல்வி நுட்ப மற்றும் பள்ளி நுட்ப நிறுவனமாக விளங்குகிறது.

வெஸ்ட்பிர்ட்ஜ் கேபிடல் தலைமை வகித்த இந்த சுற்றில் கி.எஸ்.வி வென்சர்ஸ் பங்கேற்றது. செயல்பாட்டு மற்றும் நிதி அம்சங்களால் கடந்த 9 மாதங்களில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு இரட்டிப்பானது.

நிறுவனம் இந்த நிதியை, 25 மில்லியன் மாணவர்களுக்கு செலவு குறைந்த கல்வியை வழங்கும் நோக்கத்தை நிறைவேற்ற பயன்படுத்திக்கொள்ள உள்ளது. பாடத்திட்ட புதுமை, வளர்ச்சி, ஊழியர்கள் நியமனம் ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளது.

டார்வின்

டார்வின்பாக்ஸ்

ஐதரபாத்தைச்சேர்ந்த மனிதவள நுட்ப ஸ்டார்ட் அப்பான, டார்வின்பாக்ஸ் 72 மில்லியன் டாலர் நிதி திரட்டியது. டெக்னாலஜி கிராஸோவர் வென்சர்ஸ் தலைமையிலான இந்த சுற்றில், சேல்ஸ்போர்ஸ் வென்சர்ஸ், செக்கோயா இந்தியா, லைட்ஸ்பீட் இந்தியா, எண்டியா பாட்னர்ஸ், 3ஒன்4கேபிடல், JGDEV,SCB 10 உள்ளிட்ட பழைய முதலீட்டாளர்களும் பங்கேற்றனர்.

இந்த டி சுற்று நிதிக்கு பிறகு நிறுவன சந்தை மதிப்பு ஒரு பில்லியன் டாலரை கடந்துள்ளது. இதுவரை 110 மில்லியன் டாலருக்கு மேல் திரட்டப்பட்டுள்ளது. 2015ல் சைதன்யா பெட், ஜெயந்த் பலேடி, ரோகித் சென்னாமனேனி ஆகியோரால் துவக்கப்பட்ட டார்வின்பாக்ஸ் இந்த நிதியை தனது மேடை புதுமையாக்கம், சேவை வலுவாக்கம், பொறியியல், வாடிக்கையாளர் வெற்றிக்குழு ஆகியவற்றுக்கு பயன்படுத்த உள்ளது.

மேலும் தெற்காசிய, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்காவில் தனது கோ டூ மார்கெட் செயல்பாட்டையையும் விரிவாக்க உள்ளது. நிறுவனத்தை 2025ல் பொதுப் பங்கு வெளியிட வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

டீல்ஷேர்

டீல்

சமூக காமர்ஸ் மேடையான டீல்ஷேர் இ சுற்று நிதியின் முதல் கட்டத்தில் டிராகனோவர் இன்வெஸ்ட்மண்ட்ஸ் குரூப், கோரா கேபிடல், யூனிலிவர் வென்சர்ஸ் ஆகியவற்றிடம் இருந்து 165 மில்லியன் டாலர் நிதி திரட்டியது. ஏற்கனவே உள்ள டைகர் குளோபல், ஆல்பா வேவ் குளோபல் ஆகிய நிறுவனங்களும் பங்கேற்றன.

இந்த நிதி மூலம், டீல்ஷேர் சந்தை மதிப்பு 1.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2018ல், வினீத் ராவ், சூரியனடு மேடா, சங்கர் போஸ்ம் ரஜத் ஷிகார் ஆகியோரால் துவக்கப்பட்ட டீல்ஷேர் சமூகம் சார்ந்த அணுமுறையை குறைந்த விலையிலான அதிக தரமான பொருட்களுக்கு பின்பற்றி வருகிறது. இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களில் கவனம் செலுத்துகிறது.

பாலிகன்

பாலி

எத்திரியம் ஸ்கேலிங் திட்டமான பாலிகன், (முன்னதாக மேடிக் நெட்வொர்க்), தனது முதல் பெரிய விசி நிதி திரட்டம் மூலமாக ரூ.450 மில்லியன் டாலர் திரட்டியுள்ளது. செக்கோயா கேபிடல் இந்திய தலைமையிலான சுற்றில், டைகர் குளோபல், சாப்ட் பாங்க், கேலக்ஸி டிஜிட்டல், ரிபப்ளிக் கேபிடல், மேக்கர்ஸ் ஃபண்ட், அலமேடா ரிசர்ச், அலான் ஹாவர்டு, அலெக்சிஸ் ஒஹானியான், ஸ்டீட் வியூ கேபிடல், எலிவேஷன் கேபிடல், அனிமோகா பிராண்ட்ஸ், ஸ்பார்டன் பண்ட், டிராகன்பிளை கேபிடல், வேரியண்ட் பண்ட், கெவின் ஓலியரி பங்கேற்றன.

பாலிகனின் மேடிக் டோகன் தனி விற்பனை வாயிலாக இந்த நிதி திரட்டப்படும். இந்த வலை 3 ஸ்டார்ட் அப்பின் சந்தை மதிப்பு 14.4 பில்லியன் டாலராக இருக்கிறது.

லைவ்ஸ்பேஸ்

லைவ்

உள் அலங்கார மற்றும் சீரமைப்பு மேடையான லைவ்ஸ்பேஸ், எப் சுற்றில் 180 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. கேகேஆர் முதன்மை முதலீட்டாளராக விளங்கியது. இந்த நிதிச்சுற்று மூலம், லைவ்ஸ்பேஸ் யூனிகார்ன் கிளப்பில் நுழைந்துள்ளது. இந்த சுற்றில் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள், Ingka குருப் இன்வெஸ்ட்மண்ட்ஸ், வென்சுரி பாட்னர்ஸ், Peugeot இன்வெஸ்ட்மண்ட்ஸ் பங்கேற்றன.

இந்த நிதியை லைவ்ஸேஸ் புதிய சந்தையில் விரிவாக்கம், இந்தியா, சிங்கப்பூரில் பிராண்ட் உருவாக்கம், தொழில்நுட்பத்தில் முதலீடு, டிஜிட்டல் சப்ளை சங்கிலி, திறன் வளர்ப்பு ஆகியவற்றுக்கு பயன்படுத்த உள்ளது.

எலக்டிரிக் ரன்

எலெக்ட்ரிக்

மளிகைக் கடைகளுக்கு பொருட்கள் அளிக்கும் பி2பி இ-காமர்ஸ் நிறுவனமான எலாஸ்டிக்ரன், இ சுற்றில் 1.5 பில்லியன் டாலர் சந்தை மதிப்பில் 300 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. சாப்ட் பாங்க் மற்றும் கோல்ட்மன் சாக்ஸ் தவிர, ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள் Prosus வென்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.

நிறுவனம் இந்த நிதியை விரிவாக்கத்திற்கு பயன்படுத்த உள்ளது. இந்த சுற்றில் மேலும் முதலீடு பெற வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. சந்தீப் தேஷ்முக், சவுரப் நிகம், ஷிட்ஸ் பன்சால் ஆகியோர் 2016ல் எலாஸ்டிக் ரன் நிறுவனத்தை துவக்கினர். இந்தியா முழுவதும் 300 நகரங்களில் 125,000 சில்லறை விற்பனை மையங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

பீஸ்

எக்ஸ்பிரஸ் பீஸ்

மூன்றாம் தரப்பு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான எக்ஸ்பிரஸ்பீஸ் எப் சுற்றில் 1.2 பில்லியன் சந்தை மதிப்பில் 300 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. இந்த சுற்றில், தனியார் சமபங்கு நிறுவனங்கள் பிலாக்ஸ்டோன் குரோத், டிஜிபி குரோத், கிரைஸ் கேபிடல் உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள இன்வெஸ்ட்கார்ப், நார்த்வெஸ்ட் வென்சர் பாட்னர்ஸ் பங்கேற்றன.

இதன் மூலம் நிறுவனம் 500 மில்லியன் டாலருக்கு மேல் நிதி திரட்டியுள்ளது. Avendus Capital நிறுவனத்திற்கான பிரத்யேக நிதி ஆலோசகராக செயல்பட்டது. இந்த நிதியை, முழு சேவை லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமாக உருவாக பயன்படுத்திக்கொள்ள இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

யூனி

யூனிபோர்

சென்னை மற்றும் கலிபோர்னியாவைச் சேர்ந்த உரையாடல் தானியங்கி ஸ்டார்ட் அப்பான யூனிபோர் ஈ சுற்றில் 400 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.

இதன் மூலம் மொத்தம் 610 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. இந்த சுற்றில் அமெரிக்காவின் வென்சர் கேபிடல் நிறுவனம் NEA தலைமை வகித்தது. $2.5 சந்தை மதிப்பில் இது நிகழ்ந்துள்ளது.

ஆங்கிலத்தில்: ஐஸ்வர்யா லட்சுமி, யுவர்ஸ்டோரி குழு