'இந்தியாவின் முதல் ரோபோ டீச்சர்' - கற்பித்தலில் சாதனை படைத்த கேரளா!
இந்தியாவிலேயே முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI ஆசிரியையான IRIS ஐ அறிமுகப்படுத்துகிறோம். கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த ரோபோ டீச்சர் கவனம் சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்துள்ளார்
இந்தியாவிலேயே முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI ஆசிரியையான IRIS ஐ அறிமுகப்படுத்தியுள்ளனர். கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த ரோபோ டீச்சர் சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்துள்ளார்.
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்த்து வருகிறது. அனைத்து துறைகளிலும் ஏஐ (AI) பயன்பாடு விரிவடைந்து வருகிறது. AI அடிப்படையிலான ரோபோக்கள் ஊடகம் மற்றும் மாடலிங் என எல்லா இடங்களிலும் வேலை செய்கின்றன. சமீபத்தில், செயற்கை நுண்ணறிவு கல்வித் துறையிலும் நுழைந்துள்ளது. AI ஆசிரியர் ஒருவர் கேரளாவில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் AI டிவி ஆங்கர் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது AI ஆசிரியர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இது எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த ரோபோவின் அம்சங்கள் என்ன, இந்த அனைத்து தகவல்களையும் இங்கே தெரிந்து கொள்வோம்...
இந்தியாவின் முதல் ரோபோ டீச்சர்
ஆம், கேரளாவின் தென் மாநிலமான திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளி ஒன்றில், இந்தியாவிலேயே முதல் ரோபோ ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கேடிசிடி மேல்நிலைப்பள்ளி, 2021 நிதி ஆயோக் புத்தாக்க திட்டத்தின்கீழ் அடல் டிங்கரிங் சோதனை கூடத்தை பள்ளி வளாகத்தில் நிறுவியுள்ளது.
இங்கு செயற்கை நுண்ணறிவு (AI) ரோபோவை மேக்கர் லேப்ஸ் உருவாக்கியுள்ளதால், இது கல்வி முறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிறுவனம் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில்,
“கல்வியின் எல்லைகளைக் கடந்து. AI ஆல் இயக்கப்படும் இந்தியாவின் முதல் AI ஆசிரியரான IRIS ஐ அறிமுகப்படுத்துகிறோம். ஐரிஸ் மாணவர்களுக்கு நன்றாக பாடம் நடத்துகிறார். இந்த ரோபோ மூலம் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளோம்," எனத் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாணவரின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப பாடங்களை வடிவமைக்க ஐரிஸ் உதவும் என நிறுவனம் விளக்கியுள்ளது.
ரோபோவின் சிறப்பம்சங்கள்:
பாரம்பரிய புடவையில், பார்க்க அச்சு அசலாக பெண் போலவே இருக்கும் ஐரிஸ், மாணவர்களுக்கு பாடம் நடத்துவது மட்டுமின்றி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் அழகாக பதிலளிக்கிறது.
இதன் கீழ் பகுதியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருப்பதால் எளிதில் இடம்விட்டு இடம் நகர்ந்து செல்லும்.
இந்த வளர்ச்சி கேரளாவின் கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் குறிக்கிறது. ஐரிஸ் பாடத்திட்டத்தை கற்பிக்கும் திறன், பல்வேறு கற்றல் பாணிகள் மற்றும் மாணவர்களுக்கு கல்வியை அதிக ஈடுபாட்டுடன் சேர்க்கும் திறன் கொண்டது. நீண்ட கால தாக்கம் இருந்தபோதிலும், ஐரிஸ் நிச்சயமாக கல்வியின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது.