தண்ணீருக்கு அடியில் செயல்படும் ரோபோ வாகனம்: சென்னை நிறுவனம் அறிமுகம்!
தண்ணீருக்கடியில் செயல்படும் சோதனை வாகனச் சேவையை அளிக்கும் சென்னையைச்சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ’பிளான்ஸ் டெக்னாலஜிஸ்’ (Planys Technologies) மிகவும் மேம்பட்ட ரோபோ வாகனமான மைக்ரோசை (MIKROS) அறிமுகம் செய்துள்ளது.
பதப்படுத்தும் துறை, பெட்ரோகெமிக்கல் ஆலைகள் மற்றும் உப்புநீர் சுத்திகரிப்பு மையங்களுக்கு தண்ணீருக்குடியிலான பரிசோதனை சேவையை இது வழங்கும்.
சென்னை ஐஐடி பட்டதாரிகள் மற்றும் பேராசிரியர்களால் நிறுவப்பட்ட ஸ்டார்ட் அப்பான பிளான்ஸ் டெக்னாலஜிஸ்; ஆழ்கடல் நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தால் உந்துதல் பெற்ற இந்த நிறுவனம், ஆழ்கடல் ரோபோ சேவை, நீருக்கடியிலான பரிசோதனைச் சேவைகள் ஆகியவற்றில் புதுமையான தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வினீத் உபாத்யா இதன் இணை நிறுவனராகவும். சி.டிஒ.வாகவும் இருக்கிறார். பிரபு ராஜகோபால் (இயக்குனர்), தனுஜ் ஜுன்ஜுன்வாலா (சி.இ.ஒ), ராகேஷ் சிரிகோண்டா (உற்பத்தி தலைவர்) ஆகியோர் இணை நிறுவனர்களாக உள்ளனர்.
இந்நிறுவனம், இதுவரை ஆறு ரிமோட்லி ஆப்பரேடட் வெஹிகில்ஸ் எனப்படும் ரோபோ சோதனை வாகனங்களை உருவாக்கியுள்ளது. பெட்ரொலியம், துறைமுகங்கள், மின்சாரம், உப்பு நீர் சுத்திகரிப்பு, பதப்படுத்தல் துறை ஆகிய துறைகளில் 50 க்கும் மேற்பட்ட திட்டங்களில் இவை பயன்பட்டு வருகின்றன. தற்போது நிறுவனம் மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் தனது செயல்பாடுகள் விரிவாக்கம் செய்து வருகிறது. நெதர்லாந்து நாட்டில் திட்டம் ஒன்றுக்காகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கடலுக்கடியில் சோதனை செய்யும் ரோபோ சேவையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இது உருவாகி வருகிறது.
இந்நிறுவனம் அண்மையில் மைக்ரோஸ் எனும் மிகவும் மேம்பட்ட ரோபோ வாகனமான மைக்ரோசை அறிமுகம் செய்துள்ளது. பதப்படுத்தும் துறை, பெட்ரோகெமிக்கல் ஆலைகள் மற்றும் உப்புநீர் சுத்திகரிப்பு மையங்களுக்கு தண்ணீருக்குடியிலான பரிசோதனை சேவையை இது வழங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஸ்டார்ட் அப் ஆதரவு திட்டமான அங்கூர் திட்டத்தின் கீழ் மைக்ரோஸ் உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த வாகனத்தை பாரத் பெட்ரோலியம் இயக்குனர் ராம்சந்திரன் அறிமுகம் செய்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ராமசந்திரன்,
“இந்திய ஸ்டார்ட் அப் சூழலுக்கு பாராட்டு தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று கூறியவர் பிளானிஸ் டெக்னாலஜிஸ் உருவாக்கியுள்ள தொழில்நுட்பம் ஏற்கனவே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட துறைகளில் அதிகம் பயன்படுவதாக தெரிவித்தார்.”
பிளான்ஸ் நிறுவன சி.டி.ஒ வினீத் உபாத்யா, இந்த பிரிவில் மைக்ரோஸ் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்டது என தெரிவித்தார்.
சந்தை சூழல் மற்றும் தேவைகளை புரிந்து கொண்ட பிறகு தங்கள் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இதை உருவாக்கியதாக அவர் தெரிவித்தார். இந்தியா தவிர மற்ற நாடுகளுக்கும் இதைக் கொண்டு செல்ல இருப்பதாக தெரிவித்தார்.
மைக்ரோஸ் அதி நவீன தொழில்நுட்பம் கொண்டதாக உருவாக்கப் பட்டுள்ளது. குறைந்த எடையுடன், கடின சூழலிலும் செயல்படக்கூடியதாக, பொறியியல் அற்புதமாக இது அமைந்துள்ளது என நிறுவனம் தெரிவிக்கிறது. அதிக ஆழத்தில் கூட தரவுகளை சேகரிக்கக் கூடிய திறன் கொண்டதாக இது உள்ளது. பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பில் இது மிகவும் உதவியாக இருக்கும்.