பதிப்புகளில்
’வாவ்’ வாசல்

நீளமாக முடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த இந்தியாவின் ‘ராபுன்செல்’!

மிக நீளமாக முடி வளர்த்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார் குஜராத்தைச் சேர்ந்த 16 வயதான நிலான்ஷி படேல்.

Chitra Ramaraj
11th Jan 2019
13+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

ஆண், பெண் என்ற பேதமின்றி அனைவருக்கும் பிடித்தமானது கூந்தல். பெரும்பாலானோர்க்கு வயதாக வயதாக முகத்தில் சுருக்கம் விழுவதைப் பற்றிக் கூட கவலை இருக்காது. ஆனால், கூந்தல் உதிர்ந்து வழுக்கை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் கட்டாயம் இருக்கும். அந்தளவுக்கு கூந்தல் அழகைக் கூட்டும் முக்கிய ஒன்றாகக் கருதப்படுகிறது.

இத்தகைய கூந்தலை அழகிற்காக மட்டுமல்ல, ஆரோக்கியமாக, நீளமாக வளர்த்து சாதனை புரிந்துள்ளார் இளம்பெண் ஒருவர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் நிலான்ஷி படேல். 16 வயதாகும் அவரது கூந்தலின் நீளம் 5 அடி 7 அங்குலம் ஆகும். உலகிலேயே நீளமான முடி என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார் நிலான்ஷி.


கடந்த 10 ஆண்டுகளாக இவர் முடியே வெட்டியதில்லையாம். சாதனைக்காக இந்த முயற்சி ஆரம்பிக்கப்படவில்லை எனும் நிலான்ஷி, கூந்தல் வளர்த்த கதை சுவாரஸ்யமானது.

“எனக்கு ஆறு வயது இருக்கும் போது கடைசியாக முடி வெட்டினேன். அப்போது எனக்கு பாப் கட் பண்ணி விட்டனர் என் பெற்றோர். ஆனால், அது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. என் முடியைப் பார்த்து நான் மிகவும் மனவேதனை அடைந்தேன். எப்போது அந்த ஹேர்ஸ்டைல் மாறும் எனக் காத்திருந்தேன். அப்போது முடிவு செய்தேன், இனி முடியே வெட்டக்கூடாது என. இதனால் தொடர்ந்து 10 ஆண்டுகளாக முடி வளர்க்கத் தொடங்கினேன்,” என்கிறார் நிலான்ஷி.

கார்ட்டூன் கதையில் வரும் ராபுன்ஷல் சிறுமியின் கதாபாத்திரத்திற்கு பார்ப்பவர்களைக் கவரும் வகையில் நீளமான கூந்தல் இருக்கும். அந்தக் கதையில் வருவதுபோல், நிலான்ஷிக்கு நிஜத்தில் நீளமான முடி இருப்பதால், அவரது தோழிகள் அவரை ‘ராபுன்ஷல்’ என்று தான் செல்லமாக அழைக்கிறார்கள். இதனாலேயே நிலான்ஷியை இந்தியாவின் ராபுன்ஷல் என்கிறார்கள்.


நீண்ட கூந்தல் இருந்தாலும் அதனை பராமரிப்பதில் தனக்கு எந்தவிதமான அசவுகரியமும் இல்லை எனக் கூறுகிறார் நிலான்ஷி.

‘‘நீண்ட கூந்தல் இருப்பதால் நிச்சயம் நான் நிறைய பிரச்சினைகளை சந்திப்பேன் என்பது தான் என்னைப் பார்க்கும் பலரது நினைப்பு. ஆனால் அப்படி எந்தவிதமான பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை. வாரம் ஒருமுறை தலை முடியை தண்ணீரில் அலசுகிறேன். எனது அம்மா சிகை அலங்காரம் செய்வதற்கு உதவி செய்கிறார். நீண்ட தலைமுடி எனக்கு தனி ஸ்டைலை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. முடியால் எந்த அசவுகரியமும் எனக்கு ஏற்படுவதில்லை. இது தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்,’’ என்கிறார் அவர்.

டேபிள் டென்னிஸ் விளையாட செல்லும்போது மற்றும் வேறு முக்கிய வேலைகளின் போது மட்டும் தனது நீளமான முடியை சடையாக பின்னல் போட்டுக் கொள்வது நிலான்ஷியின் வழக்கமாம். மற்றபடி முடிக்கு என அவர் வேறு எந்த சிறப்பு உணவுகளோ அல்லது பழக்கவழக்கங்களோ மேற்கொள்வதில்லையாம்.


நிலான்ஷியின் கூந்தல் தான் உலகிலேயே நீளமானது என கின்னஸ் சாதனை புத்தகம் அங்கீகரித்துள்ளது. அதற்கான சான்றிதழையும் அது நிலான்ஷிக்கு வழங்கியுள்ளது.

13+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags