தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை: எங்கு அமைந்துள்ளது தெரியுமா?
பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் போன்றவற்றைத் தொடர்ந்து இந்திரா குழுமம் இந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைத் தொடங்கி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்திரா கல்விக் குழுமம் திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரியைத் திறந்துள்ளது.
ஒரு சிறிய குடிசையில் 25 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருடன் தொடங்கப்பட்டது இந்திரா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை, நிலையான வளர்ச்சியுடன் மாணவர்களுக்கு மிகச்சிறந்த கற்றல் மையங்களை உருவாக்கி வருகிறது.
பிரியதர்ஷினி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, இந்திரா நர்சிங் பள்ளி, இந்திரா காலேஜ் ஆஃப் எஜுகேஷன், இந்திரா மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இந்திரா ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்திரா குழுமம் இந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைத் (Indira Medical College and Hospitals – IMCH) தொடங்கி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்த ஆண்டு 75 மாணவர்கள் மற்றும் 68 மாணவிகளுடன் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு தரமான சுகாதார வசதிக்கான தேவை இருக்கும் சூழலில் இந்தக் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது.
IMCH சென்னையின் கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்துள்ளது. டெல்லியில் உள்ள தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதி பெற்றுள்ளது.
மாணவர்கள் சிறந்த முறையில் கற்க உதவும் வகையில் அமைதியான, பசுமையான சூழலில் இந்தக் கல்லூரி அமைந்துள்ளது. 20 வெவ்வேறு துறைகளுடன் அடுத்த தலைமுறை மருத்துவ வல்லுநர்களுக்கு சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில் IMCH கவனம் செலுத்தும்.
நவீன ஆய்வகங்கள், பயிற்சிக்கு உதவும் சாதனங்கள், ஜிம், கேஃபடேரியா, ஆடியோ-வீடியோ தகவல்களுடன் நூலகம், மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான தனித்தனி ஹாஸ்டல்கள், முறையான போக்குவரத்து வசதி ஆகியவற்றுடன் மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற IMCH உதவும் என அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனமாக உயர்ந்து மிகச்சிறந்த கற்றல் சூழலையும் ஈடு இணையற்ற தரமான கல்வியையும் வழங்கவேண்டும் என்பதே இந்த மருத்துவக் கல்லூரியின் நோக்கம் எனச் சொல்லப்பட்டுள்ளது.
சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு இங்கு பயிலும் மாணவர்களின் கல்வியறிவு உதவவேண்டும் என்று இந்தக் கல்வி நிறுவனம் விரும்புகிறது. இந்திரா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை தலைவர் வி.ஜி. ராஜேந்திரன் கூறும்போது,
“இந்திரா கல்விக் குழுமம் திருவள்ளூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதியினரின் நல்வாழ்வில் கவனம் செலுத்துகிறது. அத்தகைய குழுமத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. மக்கள் மனதில் இருக்கும் அச்சத்தைப் போக்குவதே இந்தப் புதிய முயற்சியின் நோக்கம். நோய் குறித்த பயத்தையும் சிகிச்சைக்காக செலவினை சமாளிக்க முடியாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தையும் போக்க விரும்புகிறோம். உண்மையான வெற்றி என்பது குறுகிய கால இலக்குகளை எட்டுவது அல்ல. மக்களின் நல்வாழ்விலும் சமூக நலனிலும் பங்களிப்பதே உண்மையான வெற்றி,” என்று குறிப்பிட்டார்.
இந்திரா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் நிர்வாக டிரஸ்டீ இந்திரா ராஜேந்திரன் கூறும்போது,
“மருத்துவத் துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. எங்கள் மாணவர்கள் மாறி வரும் சூழலைத் திறம்பட எதிர்கொண்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவார்கள் என்று உறுதியளிக்கிறோம்.”
அறிவார்ந்த, கருணையுள்ளம் கொண்ட நிபுணர்களின் முழுத் திறனையும் வெளிப்படுத்தி உலகத் தரம் வாய்ந்த வல்லுநர்களாக அவர்கள் உருவெடுக்கத் தேவையான தளத்தை IMCH அமைத்துக் கொடுக்கும்.
மாணவர்களின் கற்றல் அனுபவத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வெளிப்படையான தகவல் பரிமாற்றம் மிகவும் முக்கியம். மாணவர்களிடையே நன்மதிப்பை விதைக்கக்கூடிய கல்வி அமைப்பிற்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம்,” என்றார்.
இந்திரா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் டீன் ராஜேந்திரன் விழாவில் பார்வையாளர்களை வரவேற்றார். பிரியதர்ஷினி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தலைவர் டாக்டர் எஸ். பாலசுந்தரம் முக்கிய உரையாற்றினார்.
கவிதா ராமு, ஐஏஎஸ், இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள், டாக்டர் மயில்வாகனன் நடராஜன், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஆகியோர் மருத்துவக் கல்லூரியின் திறப்பு விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
நிர்வாக டிரஸ்டி இந்திரா ராஜேந்திரன், இயக்குநர்களான டாக்டர் பிரியதர்ஷினி ராஜேந்திரன் வருண், அத்வைத் ராஜேந்திரன், வருண் கல்யாணசுந்தரம் ஆகியோருடன் இணைந்து வி.ஜி. ராஜேந்திரன் IMCH திறப்பு விழாவிற்கு தலைமை வகித்தார்.
திறமைமிக்க மாணவர்களை உருவாக்க நாட்டின் மிகச்சிறந்த ஆசிரியர்கள் இந்தக் கல்வி நிறுவனத்துடன் இணைந்துள்ளனர். சிறந்த கட்டமைப்பு வசதி மட்டுமல்லாது மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவன ஊழியர்களுக்கான தங்குமிட வசதியும் கல்வி நிறுவன வளாகத்தினுள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரியதர்ஷினி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அடுத்த கல்வியாண்டிற்காக மீண்டும் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பும் இந்த விழாவில் வெளியிடப்பட்டது.
அடுத்த கல்வியாண்டுக்கு செல்ல உள்ள மாணவர்களையும் எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பில் புதிதாக 14-வது பேட்சில் இணையும் மாணவர்களையும் பிரியதர்ஷினி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தலைவர் டாக்டர் எஸ். பாலசுந்தரம் வரவேற்றார்.