ரூ.341 கோடி வரி கேட்டு இன்போசிஸ் நிறுவனத்திற்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!
இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், 2020-21 மதிப்பீட்டு ஆண்டிற்கான ரூ.341 கோடி வரியைச் செலுத்துமாறு வருமான வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் பெற்றுள்ளது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், 2020-21 மதிப்பீட்டு ஆண்டிற்கான ரூ.341 கோடி வரியைச் செலுத்துமாறு வருமான வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் பெற்றுள்ளது.
இது குறித்து பங்குச் சந்தைகளில் தாக்கல் செய்த அறிக்கையில், இன்போசிஸ் நிறுவனம்,
“மார்ச் 31, 2024-ல் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகளில் வருமானவரித்துறையின் இத்தகு நோட்டீசின் தாக்கத்தை பரிசீலித்து வருகிறோம். இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் உத்தேசித்துள்ளோம்,” என்று தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் துணை நிறுவனம் வருமான வரித் துறையிடமிருந்து 2014-15 ஆம் ஆண்டிற்கான பணத்தைத் திரும்பப்பெறும் உத்தரவை பெற்றுள்ளதாக வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 154 இன் கீழ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. உத்தரவின்படி, திரும்பப்பெறும் தொகை ரூ.15 கோடி.
கடந்த ஞாயிறன்று இன்போசிஸ் தெரிவிக்கையில் வரி மீள்வரவுத் தொகை ரூ.6,329 கோடி என்றும் வரிப்பொறுப்பு ரூ.2,763 கோடி என்று அறிவித்ததையடுத்து வருமானவரித்துறை இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது. 2007-08 லிருந்து 2018-19 வரையிலான வரிக்கணக்கு மதிப்பீட்டாண்டுகளுக்கான மீள்வரவுத் தொகையின் வட்டியையும் உள்ளடக்கியது தொடர்பானதாகும்.
நார்டிக் நாடுகளில் வாடிக்கையாளர் திருப்தியில் டிசிஎஸ் நம்பர் 1:
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் வைட்லேன் ரிசர்ச்சின் உயர்மட்ட ஐடி செலவு செய்யும் நிறுவனங்களின் சுயாதீனமான கணக்கெடுப்பில் நார்டிக் நாடுகளில் (ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, டென்மார்க்) வாடிக்கையாளர் திருப்திக்கான முதல் ஐடி சேவை வழங்குநராக தரநிலையில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த இடத்தை 15வது ஆண்டாக தொடர்ந்து பிடித்து வருகிறது டிசிஎஸ்.
ஒயிட் லேன் ஆய்வு 2024 ஐடி ஆதார ஆய்வு (Whitelane Research 2024 IT Sourcing Study) ஆனது 450 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை பிராந்தியத்தின் சிறந்த ஐடி செலவின நிறுவனங்களில் இருந்து ஆய்வு செய்தது, 1,000க்கும் மேற்பட்ட தனிப்பட்ட ஐடி நிறுவன ஆதார உறவுகளை மதிப்பீடு செய்தது. கருத்துக் கணிப்பில் பதிலளித்தவர்களில் 28% பேர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தங்கள் நிறுவனம் மேலும் அவுட்சோர்ஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
2023-இல் 17 மில்லியன் இணைய அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட இந்தியா: காஸ்பர்ஸ்கி
சைபர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கி கூறுகையில், 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள நிறுவனங்களை குறிவைத்து 17 மில்லியனுக்கும் அதிகமான உள்ளூர் அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. அதாவது, கோப்புகள் அல்லது நீக்கக்கூடிய மீடியா மூலம் குறிவைத்த கணினியில் ஊடுருவி அல்லது சிக்கலான இன்ஸ்டாலர்கள், மறைகுறியாக்கப்பட்ட கோப்புகள் போன்றவற்றில் உள்ள புரோகிராம்கள் மற்றும் திறந்த வடிவில் கணினியில் நுழைந்த வைரஸ், ஹேக்கிங் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் அடங்கும்
"எப்போதும் அதிகரித்து வரும் அதிநவீன இணையத் தாக்குதல்கள் அச்சுறுத்தல்களுக்கு எதிராக சரியான சைபர் பாதுகாப்பு கருவிகள் மற்றும் சைபர் எதிர்ப்புக் காப்புச் சக்தி உத்திகளுடன் முழுமையான இணைய பாதுகாப்பை உருவாக்குவதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வணிகங்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்," என்று காஸ்பர்ஸ்கியின் ஆசியா பசிபிக் நிர்வாக இயக்குனர் அட்ரியன் ஹியா கூறினார்.