இன்ஸ்டா ஹீரோ: மாதம் ரூ.75 ஆயிரம் சம்பாதிக்கும் ஒரு வயது குழந்தையின் வைரல் கதை!
இன்ஸ்டாகிராமால் சாத்தியமான தாயின் சுற்றுலா கனவு!
இன்றைய காலகட்டத்தில் முன்னணி சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் உண்மையில் மெய்நிகர் உலகில் தங்களுக்கென ஒரு முக்கிய இடத்தை உருவாக்கியுள்ளனர் என்றால் மறுப்பதற்கில்லை.
சமூக ஊடங்களில் பயணம் மற்றும் உணவு முதல் ஆரோக்கியம் மற்றும் அழகு வரை பல துறைகளில் செல்வாக்கு செலுத்துபவர்கள் உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் பதின்பருவத்தினர் முதல் வயது முதிர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், இப்போது ஒரு வயது குழந்தை சமூக ஊடகத்தில் பிரபலமாக இருப்பதோடு யாரும் நினைக்க முடியாத அளவு மாத வருவாய் ஈட்டி வருகிறது.
பேபி பிரிக்ஸ் என்ற பெயர் கொண்ட குழந்தைதான் இன்றைய இணைய உலகின் செல்வாக்கு மிகுந்த நபர் போல. இன்ஸ்டாகிராமில் பேபி பிரிக்ஸ்க்கு ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். ஜெஸ் என்ற அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட தாய்க்கு கடந்த ஆண்டு தான் பிறந்த குழந்தை பிரிக்ஸ். இந்த ஜெஸ் தான் பிரிக்ஸ் இன்ஸ்டாகிராம் கணக்கை நிர்வகித்து வருகிறார்.
கிட்டத்தட்ட 31 ஆயிரம் ஃபாலோயர்கள் பிரிக்ஸை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள். இதன்மூலமாக, மாதம் அமெரிக்க மதிப்பில் 1,000 டாலர் வருவாய் ஈட்டுகிறது குழந்தை பிரிக்ஸ். இதன் இந்திய மதிப்பு மட்டும் ரூ.75 ஆயிரம் ஆகும்.
எப்படி இவ்வளவு வருவாய்?
பிரிக்ஸின் தாய் ஜெஸ் இயற்கையாகவே ஒரு சுற்றுலா விரும்பி. இதனால் குழந்தையையும் தன்னைப்போல் டிராவலராக மாற்றினார். கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி பிறந்த பிரிக்ஸ், அதற்கடுத்த மூன்று வாரங்களில் இருந்து தாயுடன் இணைந்து அமெரிக்கா முழுவதும் சுற்றி வருகிறது.
இதுவரை, 45 விமானங்களில் பயணம் செய்ததுடன், அலாஸ்கா, கலிபோர்னியா, புளோரிடா, உட்டா மற்றும் இடாஹோ உள்ளிட்ட 16 அமெரிக்க மாநிலங்களை சுற்றி பார்த்துள்ளான் குழந்தை பிரிக்ஸ்.
ஜெஸ், தனது திருமணத்திற்கு முன்பு பகுதி நேர சுற்றுலாப் பயணிகள் என்ற வலைப்பதிவைத் தொடங்கி சுற்றுலா மேற்கொள்வதற்கான பணத்தை திரட்டி வந்துள்ளார். இதனிடையே, தான் கர்ப்பம் தரிக்க, சுற்றுலா செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.
“கர்ப்பம் தரித்த பிறகு எனது சுற்றுலா வாழ்க்கை முடிந்துவிடும், பழையபடி ஊர் சுற்ற முடியாது என நினைத்து கொண்டிருந்தபோதுதான் நானும் என் கணவரும் ஒன்றாக ஒரு யோசனையை வெளிப்படுத்தினோம். குழந்தையையும் அழைத்துகொண்டு சுற்றுலா செல்வது தான் அந்த யோசனை.”
அதன்படி, பிரிக்ஸ் உடன் சுற்றுலா செல்லும்போது, பிரிக்ஸின் பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கினோம். எங்களை போன்று குழந்தைகளுக்கு என்று யாரும் இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருக்கிறார்களா எனத் தேடினோம். அப்படி எதையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து, குழந்தையின் சுற்றுலா அனுபவங்களுடன் முதல்முறை குழந்தை பெற இருப்பவர்களுக்கு பெற்றோருக்கு உதவ, நான் கற்றுக்கொண்ட அனைத்தையும் பகிர்ந்து கொள்வதற்காகவும் இந்த கணக்கை திறந்தேன்.
எங்கள் சுற்றுலா மற்றும் பிரிக்ஸின் வாடிக்கையான நிகழ்வுகளை பதிவிடத் தொடங்கினோம். கொரோனா முன்னெச்சரிக்கையுடன் பயணம் மற்றும் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றினோம். நாங்கள்
“பெரிய நகரப் பயணத்தைத் தவிர்த்துவிட்டோம், அதனால் நாங்கள் நியூயார்க் நகரம் போன்ற இடங்களுக்குச் செல்லவில்லை. அதற்கு பதிலாக, வெளியில் பயணம் செய்வதிலும் நாங்கள் கவனம் செலுத்தினோம். பேபி பிரிக்ஸுக்கு ஒரு ஸ்பான்சரும் இருக்கிறார், அவர் அவர்களுக்கு இலவச டயப்பர்கள் மற்றும் துடைப்பான்களை வழங்குகிறார்," என்றுள்ளார்.
ப்ரிக்ஸுடன் பயணம் செய்வதை நிறுத்த வேண்டும் என்று எந்த நேரத்திலும் ஜெஸ் நினைக்கவில்லை. மாறாக இப்போது அமெரிக்காவை மற்றும் சுற்றும் இந்த குடும்பம் அடுத்த ஆறு மாதங்களில் லண்டன் உட்பட மொத்த ஐரோப்பாவையும் சுற்றி பார்க்கும் வகையில் ஒரு பயணத்தைத் திட்டமிட்டு வருகிறது.