Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

IRCTC இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 4.47% அதிகரிப்பு - கேட்டரிங் சேவையில் ரூ.481 கோடி வருவாய்!

2024-25 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனம் 4.47 சதவீதம் லாபம் கூடுதலடைந்து ₹307.86 கோடியை நிகரலாபமாக ஈட்டியுள்ளது.

IRCTC இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 4.47% அதிகரிப்பு - கேட்டரிங் சேவையில் ரூ.481 கோடி வருவாய்!

Wednesday November 06, 2024 , 1 min Read

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டுடன் ஒப்பிடுகையில், 4.47 சதவீதம் அதிகரித்து ரூ.307.8 கோடியாக உள்ளது. இதனையடுத்து, நிறுவனத்தின் வாரியம் ஒரு பங்கிற்கு ₹4 இடைக்கால டிவிடெண்ட்அறிவித்தது.

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு முடிவுகளை திங்களன்று அறிவித்தது. 2024-25 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனம் 4.47 சதவீதம் லாபம் கூடுதலடைந்து ₹307.86 கோடியை நிகரலாபமாக ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ₹294.67 கோடியாக இருந்தது என்று பங்குச்சந்தைத் தாக்கலில் தெரிவித்துள்ளது.

IRCTC
வெள்ளிக்கிழமை சந்தை முடிவில் ரூ.831.95 ஆக இருந்த ஐஆர்சிடிசி பங்குகள் திங்கள்கிழமை வர்த்தக அமர்வுக்குப் பிறகு 1.89 சதவீதம் குறைந்து ₹816.20 ஆக முடிந்தது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்திய ரயில்வே கேட்டரிங் ஆபரேஷன்ஸ் வருவாய் 7.2 சதவீதம் உயர்ந்து ரூ.1,063.99 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.992.40 கோடியாக இருந்தது.

மொத்த செலவுகள் 9.79 சதவீதம் அதிகரித்து ₹644.26 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்தில் ₹707.38 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கேட்டரிங் சேவைகளின் வருவாய் 11.68 சதவீதம் உயர்ந்து ₹481.95 கோடியாக உள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு ₹431.52 கோடியாக இருந்தது. இணைய டிக்கெட் வருவாய் முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ₹327.50 கோடியுடன் ஒப்பிடுகையில் 13.36 சதவீதம் அதிகரித்து ₹370.95 கோடியாக உள்ளது.