45-50 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ‘Kissflow’ நிறுவனம்!
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இந்தியா, அமெரிக்கா, யுஏஇ ஆகிய நாடுகளிள் பணியாற்றியவர்கள். பணி நீக்கங்களுக்கு முன்பாக நிறுவனத்தில் சுமார் 400 பேர் பணியாற்றி வந்தனர்.
SaaS பிரிவைச் சேர்ந்த சென்னையைச் சேர்ந்த
தனது விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் தயாரிப்பு மேம்பாடு போன்ற பல செயல்பாடுகளில் 45-50 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த பணிநீக்கங்கள், தயாரிப்பு பணிநிறுத்தம் மற்றும் அடுத்தடுத்த வருடாந்திர செயல்திறன் மதிப்புரைகள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக MoneyControl செய்தி கூறுகிறது.பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இந்தியா, அமெரிக்கா, யுஏஇ ஆகிய நாடுகளிள் பணியாற்றியவர்கள். பணி நீக்கங்களுக்கு முன்பாக நிறுவனத்தில் சுமார் 400 பேர் பணியாற்றி வந்தனர். இது தொடர்பான கேள்விகளுடன் யுவர்ஸ்டோரி தளம் கிஸ்ஃப்ளோ நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு வருகிறது.

2012 இல் சுரேஷ் சம்பந்தம் என்பவரால் நிறுவப்பட்டது கிஸ்ஃப்ளோ. சென்னையை தளமாகக் கொண்ட இந்நிறுவனம் கிளவுட்-அடிப்படையிலான வணிக செயல்முறை மேலாண்மை (BPM) மற்றும் நிறுவனங்களின் செயல்பாடுகளை நெறிப்படுத்த உதவும் வொர்க் ஃப்ளோ ஆட்டோமேஷன் தளத்தை வழங்குகிறது.
பார்ச்சூன் 500 பிராண்டுகளான பெப்சிகோ, மெக்டெர்மட், மோட்டோரோலா சொல்யூஷன்ஸ் மற்றும் டானோன் போன்ற வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாகும் கிஸ்ஃப்ளோ.
2022-ம் ஆண்டில் இந்நிறுவனம் தனது ஐந்து மூத்த நிர்வாகிகளுக்கு BMW 5 சீரிஸ் கார்களை பரிசாக வழங்கியது, அவை ஒவ்வொன்றும் சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ளவை. நிறுவனத்துடனான அவர்களது நீண்ட கால பங்களிப்பை அங்கீகரித்து வழங்கப்பட்ட பரிசாகும். இதற்காகவே அன்று கிஸ்ஃப்ளோ தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உள்ள பல SaaS நிறுவனங்கள், சந்தை சரிவு மற்றும் புதிய சந்தைகளை நோக்கிய கவனம் போன்ற பல்வேறு காரணிகளால் சமீபத்தில் பணிநீக்கங்களை செய்தன. கடந்த ஆண்டு, சார்ஜ்பீ தனது 10% பணியாளர்களை பணிநீக்கம் செய்தது, பல துறைகளில் 100 முதல் 120 பணியாளர்களை வேலையிழக்கச் செய்தது.