‘ஐபோன், நிலவுக்கு சுற்றுலா; தொழில் தொடங்க 1 கோடி’ – மதுரை வேட்பாளரின் அதிரவைத்த தேர்தல் வாக்குறுதிகள்!
வித்தியாசமான வாக்குறுதிகளில் கவனம் பெறும் சுயேச்சை வேட்பாளர்!
நீங்கள் ஒருவேளை மதுரை தெற்கு தொகுதியைச் சேர்ந்தவராக இருந்தால் மினி ஹெலிகாப்டரில் குடும்பத்துடன் பறக்கலாம். அதுமட்டுமல்ல, நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டே, ஐபோன் மூலமாக நண்பர்களுடன் பேசிக்கொள்ள ஒரு வாய்ப்பு இருக்கிறது.
வியப்பாக இருக்கிறதா? ஆம்! இந்த வாக்குறுதிகள் அனைத்தும் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் சுயயேட்சை வேட்பாளர் துலாம் சரவணன் கொடுத்தது தான்.
“நான் தேர்தலில் வெற்றி பெற்றால் மேற்கண்ட அனைத்தையும் தொகுதி மக்களுக்காக செய்வேன் என்று அவர் உறுதியளித்துள்ளார். அவரது இந்த தேர்தல் வாக்குறுதிள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவருடைய தேர்தல் சின்னமான குப்பைத் தொட்டியை குறிப்பிட்டு, ’நேர்மையின் சின்னம் குப்பைத்தொட்டி’, என்கிறார் துலாம் சரவணன்.
ஐபோன், ஹெலிகாப்டர் தவிர, நீச்சல் குளத்துடன் கூடிய அடுக்குமாடி வீடு, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.1 கோடி பணம், வீட்டு வேலைகள் செய்ய ரோபோட், பெண்கள் திருமணத்துக்கு 100சவரன் தங்கம், தொழில் தொடங்க இளைஞர்களுக்கு ரூ.1 கோடி பணம், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் 10லட்சம் ரூபாய் நிதியுதவி, நிலவுக்கு செல்ல 100 நாள் சுற்றுப்பயணம், தொகுதியை குளிர்ச்சியாக வைத்திருக்க 300 அடி செயற்கை பனிப்பாறை மற்றும் ராக்கெட் ஏவுதளம்... என அவரது வாக்குறுதிகள் நீண்டு கொண்டே செல்கிறது.
33 வயதான துலாக் சரவணன் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரிடம், கையில் 10ஆயிரம் ரூபாயும், வங்கியில் 2 ஆயிரமும் உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.
’தமிழ்நாடு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’ என்பதே தனது நோக்கம் எனவும் கூறுகிறார் துலாம் சரவணன். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சாத்தியமற்றது அல்ல, ஆனால் நீங்கள் நிறைய பணம் செலவழிக்க வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது நோக்கம், என்கிறார்.
தேர்தல் நேரத்தில், அரசியல் கட்சிகள் இதற்கும், வாக்குகளைப் பெறுவதற்கும் உறுதியளிக்கின்றன. ஆனால் வெற்றி பெற்ற பின்னர் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றுவதில்லை. தமிழக மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நான் இந்த வாக்குறுதிகளை அளித்துள்ளேன், என்று அவர் கூறுகிறார்.
தனியார் செய்திதாள் ஒன்றில் நிருபராக பணியாற்றும் சரவணன், ஏன் குப்பைத்தொட்டியை சின்னமாக தேர்ந்தெடுத்தேன் என்பதையும் விளக்குகிறார்.
“நான் குப்பைத்தொட்டியை தேர்தல் சின்னமாக தேர்வு செய்தேன். காரணம், ஊழல், லஞ்சம் போன்றவற்றை குப்பைத்தொட்டில் தூக்கி வீசி, அகற்ற வேண்டும் என்பதே அதன் நோக்கம்,” என்கிறார்.
அவரது தேர்தல் வாக்குறுதிகள் இணைய வைரலாக மாறியிருந்தாலும், அவற்றின் பின்னணியில் உள்ள காரணம் பெரும்பாலானோருக்கு புரியவில்லை என்பதே வருத்தமான விஷயம்.