Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

வறுமை; குடிசை வாழ்க்கையில் இருந்து, பல கோடி மதிப்பு Web3 ஸ்டார்ட்-அப் உருவாக்கிய இளைஞர்!

Polygon நிறுவன இணை நிறுவனர் சந்தீப் நைல்வால் தொழில்முனைவோராக வேண்டும் என திட்டமிடவில்லை. எனினும், இன்று பல கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனத்தின் இணை நிறுவனராக இருக்கிறார்.

வறுமை; குடிசை வாழ்க்கையில் இருந்து, பல கோடி மதிப்பு Web3 ஸ்டார்ட்-அப் உருவாக்கிய இளைஞர்!

Monday December 05, 2022 , 5 min Read

தில்லியில், யமுனை நதியின் கிழக்கு கரைப்பக்கம் உள்ள பகுதிகள் 'ஜமுனா பார்' (Jaamna Paar) என அழைக்கப்படுகின்றன.

வசதி படைத்தவர்கள் மேற்குக் கரைப்பகுதியில் குடியேறிய நிலையில், கிழக்குப் பகுதி பெரும்பாலும் குடிசைகளில் வசிப்பவர்களைக் கொண்டிருந்தது. பலகோடி டாலர் மதிப்புள்ள Web3 (வெப்3) சேவையான ’பாலிகன்’ (Polygon) நிறுவன இணை நிறுவனர் சந்தீப் நைல்வால் இத்தகைய குடியிருப்புகளில் வளர்ந்தவர் தான்.

வலை
“நைனிடாலில் ரான்நகரில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன், பின்னர் தில்லிக்கு குடியேறினோம். குடிசைப்பகுதி சூழலில் வளர்ந்த நிலையில், எங்களைப்போன்ற ஏழை குடும்பங்கள் சொற்ப வருமானம் தரும் வேலையை செய்து வந்தோம். என் தாத்தா வீட்டு வேலை செய்து வந்தார்,” என்கிறார் சந்தீப்.

அவரது சுற்றுப்பகுதியில் பிள்ளைகள், பள்ளிப்படிப்பை முடிக்காமல் பாதியில் நிறுத்துவதும் வாடிக்கையாக இருந்தது. ஒரு சிலர் மதுப்பழக்கம் மற்றும் சூதாட்டத்திற்கும் அடிமையானது உண்டு.

தனது தந்தையே இத்தகைய சூழலுக்கு அடிமையான போது, இதிலிருந்து மீண்டு வெற்றி பெற வேண்டும் எனும் வேட்கை சந்தீப்பிற்கு உண்டானது. தனது வீட்டிலேயே குடும்ப வன்முறையை கண்டிறிந்த நிலையில், பத்தாவதுக்கு மேல் படிக்கும் உறுதியும் கொண்டிருந்தார்.

”நான் வளர்ந்து பெரிய ஆளாக வருவேன் எனச் சொல்லிக்கொள்வேன். சிறிய அளவில் இருப்பதோ, தோல்வி அடைவதோ எனக்கு பிடிக்கவில்லை. எனினும், வெற்றிக்கான வழி தெரிந்திருக்கவில்லை. எல்லோரும் என்னை கேலி செய்தனர்,” என்கிறார்.

இதுவே சந்தீப்பின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.

“வெற்றி பெற வேண்டும், மேம்பட்ட வாழ்க்கையை பெற்று, பெரிய மனிதராக வேண்டும் எனும் உறுதி வலி மற்றும் துன்பங்களில் இருந்து உண்டானது. நான் எந்த மாதிரியான மனிதராக வரக்கூடாது என்பதற்கு என் குடும்பம் மற்றும் சுற்றுப்புறத்திலேயே நிறைய உதாரணங்கள் இருந்தன. என் தந்தையின் பிரச்சனை பற்றி அறிந்த போது  பலரும் என்னை அலட்சியம் செய்தனர்.

தொழில்முனைவுப் பயணம்

மார்க் ஜக்கர்பர்க் மற்றும் அவரது ஃபேஸ்புக் நிறுவனத்தில் இருந்து சந்தீப் தனது தொழில்முனைவுப் பயணத்திற்கான ஊக்கம் பெற்றார். இன்று, சந்தீப் ஒரு வழிகாட்டி, ஏஞ்சல் முதலீட்டாளர் என பல விதங்களில் செயல்பட்டு வருகிறார்.

ஒரு கட்டத்தில் சந்தீப் வாழ்க்கையில் தொழில்முனைவு திட்டம் ஒன்றும் இருக்கவில்லை. அவரால் ஐஐடி நுழைவுத்தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. அவர் வர்த்தகக் கடற்படையில் சேரும் வாய்ப்பை பெற்றிருந்தார். கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் எம்பிஏ படிப்பிற்காக கடன் வாங்கியிருந்த நிலையில், அந்த கடனை அடைக்க மற்றும் வீடு வாங்க வேலையில் சேர்ந்தார்.

“திருமணம் ஆனதும் சொந்த வீடு இருக்க வேண்டும் எனக் கருதப்பட்டதால் நானும் வீடு வாங்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டிருந்தேன். என் வருங்கால மனைவி தான் சொந்த வீடு இல்லை என்றால் பிரச்சனை இல்லை வாடகை வீட்டில் வசிக்கலாம் என்றார். என் தொழில்முனைவு கனவை பின்பற்ற ஊக்கம் அளித்தார்,” என்கிறார் சந்தீப்.

தொழில்முனைவு ஆர்வத்தால் சந்தீப் வேலையை விட்டுவிட்டு, 2016ல் ’ஸ்கோப்வீவர்’ எனும் பிளாக்செயின் சேவை ஸ்டார்ட் அப்பை துவக்கினார்.

இதனிடையே, ஹவுசிங்.காம் நிறுவனத்தின் டேட்டா சயிண்டிஸ்ட் ஜெயந்தி ஜேடி கனானி எத்திரியம் பிளாக்செயினில் பழுது ஒன்றை கண்டறிந்தார். இவர் தான் சந்தீப்பின் இணை நிறுவனராக அமைந்தார்.

sandeep nailwal

திருப்பு முனை

எத்திரியம் நிறுவனர்கள், தங்கள் சேவை அந்த அளவு வரவேற்பை பெறும் என எதிர்பார்த்திருக்கவில்லை. எனவே, நொடிக்கு ஆயிரக்கணக்கான பரிவர்த்தனைகளை கையாளும் வகையில் அவர்கள் புரோகிராம் செய்திருக்கவில்லை.

இந்த நேரத்தில் தான் ’கிரிப்டோகிட்டிஸ் என்.எப்.டி’ திட்டம் சுமையை ஏற்படுத்தியது. எத்திரியம் சேவையை மேம்படுத்த வேண்டும் என்பதை ஜேடி உணர்ந்தார்.

“அப்போது இனிஷியல் காயின் ஆபரிங் திட்டமும் பிரபலமாக இருந்தது. பிளாக்செயின் திட்டங்கள் எந்த சேவையும் இல்லாமல், வெள்ளை அறிக்கை வெளியிட்டு நிதி திரட்டி காணாமல் போய்க்கொண்டிருந்தன,” என்கிறார் சந்தீப்.

சந்தீப் மற்றும் ஜேடி சந்தித்த போது, இருவர் பார்வையும் ஒன்றாக அமையவே இணைந்து செயல்படத்துவங்கினர். இருவரும் அனுராக் உடன் இணைந்து 2017ல் ’MATIC Network' துவக்கினர்.

மும்பையில் பதிவு அலுவலக முகவரியுடன், பெங்களூருவில் இருந்து செயல்பட்டனர். ஜேடி புரோகிராமிங்கில் ஈடுபட்டிருந்த நிலையில், சந்தீப் மற்றும் அனுராக் மற்ற விஷயங்களை கவனித்துக்கொண்டனர்.

MATIC நிறுவனம், பிளாக்செயின் அலையை கொண்டு 20 மில்லியன் டாலர் நிதி திரட்டும் வாய்ப்பை பெற்றிருந்தும் நிறுவனர்கள் அதை விரும்பவில்லை. எளிய வழியில் தற்காலிக சேவையை உருவாக்குவதை சந்தீப் விரும்பவில்லை.

“மேட்டிக் நீண்ட கால பிரச்சனையை தீர்த்துக்கொண்டிருந்தது. எனவே, வளர்ச்சிக்கான மெதுவான வழிகளை தேர்வு செய்ய வேண்டியிருந்தது. என்னைப் பொருத்தவரை எல்லையில்லா வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்து கொண்டேன். துவக்க ஆண்டுகளில் வெளியில் இருந்து அதிக நிதி திரட்டினால், எங்கள் வாய்ப்புகள் மற்றும் பார்வையை கட்டுப்படுத்தும் என நினைத்தேன்,” என்கிறார்.

அந்த கட்டத்தில் நிறுவன சேவையையும் தயாராக இருக்கவில்லை. எனவே, மிகக் குறைந்த அளவில், Binance நிறுவனத்திடம் இருந்து 5 மில்லியன் டாலர் மட்டும் நிதி திரட்ட தீர்மானித்தனர். இதன்படி, மேட்டிக் டோக்கன்களின் ஒரு பகுதியை விற்றனர்.  

MATIC தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு என்னிடம் இருந்தது. அதிக நிதி வேண்டாம் எனும் முடிவை எடுத்த போது நடுக்கமாக உணர்ந்தேன்,” என்கிறார் சந்தீப்.

இந்திய நிறுவனர்களின் சவால்

இந்த கட்டத்தில் மோசமானது நிகழ்ந்தது. மேட்டிக் சேவை முன்னேறி வந்தாலும், 2018 சந்தை நிலை காரணமாக நிதி திரட்டுவது சிக்கலானது. ஆனால், சிலிக்கான் வேலி ஸ்டார்ட் அப்கள் நிதி திரட்டுவதை சந்தீப் பார்த்தார்.

“ஸ்டான்போர்டு போன்ற கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் இன்னமும் நிதி திரட்ட முடிந்தது. இந்தியர்களால் மென்பொருள் உள்கட்டமைப்பு நிறுவனத்தை உருவாக்க முடியாது எனும் கருத்து இருந்தது. இந்திய நிறுவனர்கள் பற்றி கீழ்த்தரமான பார்வை கொண்டிருந்தனர்,” என்கிறார் சந்தீப்.

மேட்டிக் முதலீட்டாளர்களை அணுகினாலும் பலன் இல்லை. இந்திய நிறுவனர்கள் பற்றி மோசமான எண்ணம் கொண்டிருந்த சில முதலீட்டாளர்கள், எதையும் கேட்கும் முன்னரே முதலீடு செய்வதில்லை என தீர்மானித்திருந்தனர் என நினைவு கூர்கிறார் சந்தீப்.

மேட்டிக்கின் பார்வையில் நம்பிக்கை வைத்து இணை நிறுவனராக செர்பியா பொறியாளர் Mihailo Bjelic இணைந்த பிறகு நிலைமை மாறியது. தொடர்ந்து கடின முயற்சி காரணமாக நிலைமை மாறியது.

2021ல் நிறுவனர்கள் மேட்டிக்கின் சேவை குறித்து விரிவான பார்வை கொண்ட அறிக்கையை உருவாக்கினர். பிஓஎஸ் செயினை மட்டும் உருவாக்குவதற்கு பதிலாக, எத்திரியம் சார்ந்த வலைப்பின்னல்களை சுற்றி மேம்பாடு அளிக்க இந்த யோசனையை பயன்படுத்திக் கொண்டனர். அதே ஆண்டு அமெரிக்க முதலீட்டாளர் மார்க் கியூபன் கவனத்தை ஈர்த்து நிதியும் திரட்டியது.

அதன் பிறகு, மேட்டிக் நிறுவனம் 'Polygon' என பெயர் மாறி வெற்றிப் பாதையில் பயணித்தது.

2021 ஆண்டு பலவிதங்களில் முக்கியமாக அமைந்தது. எத்திரியன் சார்ந்த வலைப் பின்னல்களில் வேகத்துடன் செயல்படக்கூடிய எஸ்டிகே கார்டை அறிமுகம் செய்தது.

மேலும், செக்கோயா இந்தியா கேபிட்டல் தலைமை வகித்த முதல் விசி சுற்றில், 450 மில்லியன் டாலர் திரட்டியது. சந்தை மூலதன மதிப்பு 14.4 பில்லியன் டாலராக இருந்தது.

பாலிகன் தாக்கம்

2021 காலத்தில் பாலிகன், 400க்கும் மேற்பட்ட மையமில்லாத சேவைகளை செயல்படுத்திக் கொண்டிருந்தது. இன்று இது 40 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது.

மெட்டா, ஸ்டார்பக்ஸ், ரெட்டிட் மற்றும் ஃபிளிப்கார்ட்டுடனும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. Web3 சேவைகளை வெகுமக்களுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

முக்கிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பதால் சந்தீப் பெரிய இடத்தை அடைந்து விட்டதாக சொல்லலாம். ஆனால், அவர் அப்படி நினைக்கவில்லை.

“சிகரத்தில் கூட சிறியவனாக உணர்கிறேன். இது என்னை இயக்குகிறது. எனக்கு இன்னமும் பூஜ்ஜியம் நிலை மனநிலை உள்ளது, என் குழுவும் அப்படி தான் உணர்கிறது. பிட்காயின் மற்றும் எத்திரியம் உடன் மூன்றாவது பெரிய திட்டமாக வர வேண்டும்,” என்கிறார்.

“வெற்றியை உணரவில்லை. தொலைவாகவும் பார்க்கவில்லை. இந்திய சமூகத்தின் எதிர்பார்ப்பு இருப்பதை பொறுப்பாக உணர்கிறேன். இங்கிருந்து தோல்வி அடைய முடியாது,” என்கிறார்.

வலை

சிறுவயது பாதிப்பு

சந்தீப் யமுனை நதிக்கரை வாழ்க்கையில் இருந்து வெகு தொலைவு வந்துவிட்டார். எனினும், அவர் வளர்ந்த சூழல் இன்னமும் தாக்கம் செலுத்துவதாகக் கூறுகிறார். வெற்றிக்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது, என்கிறார்.

அண்மைக்காலம் வரை அவர் மன அழுத்தத்திற்காக மருந்து எடுத்துக்கொண்டார். மகிழ்ச்சிக்கான மருந்து எடுத்துக்கொள்ளவில்லை எனில் தின்சரி வாழ்வு சிக்கலானது, என்கிறார்.

“இப்போது மெல்ல மகிழ்ச்சிக்கான வழியை காண்கிறேன். அண்மையில் எனக்குக் குழந்தை பிறந்தது. இது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தியானம் செய்து வருகிறேன். என் அகப்பயணம், வலி மிகுந்தது. அதன் எதிர்மறைத்தன்மை கற்பித்தலாக அமைகிறது,” என்கிறார்.

தானே சோதனைகளை எதிர்கொண்ட நிலையில் அவர் மனநலம் சார்ந்த பிரச்சனைகள் பற்றி வெளிப்படையாக பேசி வருகிறார்.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், Crypto Relief எனும் நிறுவனம் மூலம், இந்தியர்களுக்கு உதவுவதற்காக 475 மில்லியன் டாலர் நிதி திரட்டினார். இதுவரை, 58 மில்லியன் டாலர் மானியம் அளித்துள்ளது.

பொருளாதார நோக்கில் பின் தங்கிய பல சமூகங்களுக்கு உதவியிருக்கிறார். இந்த மக்களில் தன்னைப் பார்ப்பதாக உணர்கிறார்.

“இந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு உதவ நன்கொடை அளிக்கிறோம். திருமணத்திற்கு பணம் போதவில்லை எனில் உதவுகிறோம். என் பெற்றோர்கள் சிறப்பு விருந்தினர்களாக செல்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் மாறியிருக்கிறது,” என்கிறார் சந்தீப் பெருமையுடன்.

சந்தீப் இப்போது முன்னோக்கி சிந்திக்கிறார். Polygon முதல் மூன்று இடத்தில் கொண்டு வரும் இலக்கைக் கொண்டுள்ளார். எனினும், வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொண்டு அனுபவிக்க வேண்டும் என அம்மா வலியுறுத்தி வருவதாக சொல்கிறார்.

ஆங்கிலத்தில்: ரிஷப் மன்சூர் | தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan