Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'தமிழகத்தில் தூய்மையான மருத்துவமனை' - மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ரூ.50 லட்சம் பரிசு!

தமிழ்நாட்டிற்கு மணப்பாறை அரசு மருத்துவமனை மாபெரும் பெருமையை தேடி தந்துள்ளது.

'தமிழகத்தில் தூய்மையான மருத்துவமனை' - மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ரூ.50 லட்சம் பரிசு!

Saturday April 30, 2022 , 2 min Read

அரசு மருத்துவமனைகள் என்றாலே சரியான மருத்துவ வசதி கிடைக்குமா? என்ற சந்தேகத்திற்கு முன்னதாக, சுத்தமாக இருக்குமா? என்பது தான் பலரது கவலையாகவும் உள்ளது.

அரசு மருத்துவமனைகள் என்றாலே அழுக்கு படிந்த குடோன்கள் போன்ற காட்சிகளே மக்கள் மனக்கண்ணில் மின்னி மறைகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு மணப்பாறை அரசு மருத்துவமனை மாபெரும் பெருமையை தேடி தந்துள்ளது.

கடந்த புதன்கிழமை மணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, 2021-2022 ஆம் ஆண்டுக்கான தேசிய சுகாதாரத் திட்டத்தில் காயகல்ப் திட்டத்தின் கீழ், மாநிலத்தின் தூய்மையான மருத்துவமனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக அம்மருத்துவமனைக்கு ரூ.50 லட்சம் பரிசாக வழங்கப்பட உள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து மருத்துவமனை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே மருத்துவமனை 2017ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான தமிழகத்திலேயே சுத்தமான மருத்துவமனைகள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது.

Hospital

அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வி மலைதுரை பேசுகையில்,

“எங்கள் மருத்துவமனையை பராமரிப்பதில் நாங்கள் கடுமையாக உழைத்தோம், இந்த விருதை வென்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கேஸ் பைல் முதற்கொண்டு மருத்துவமனையில் ஒவ்வொரு உருப்படியும் ஒழுங்காக இருக்க வேண்டும். எங்கள் ஊழியர்களுக்கு வழக்கமான பயிற்சி மற்றும் வகுப்புகளை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். பல ஆண்டுகளாக மருத்துவமனையின் தூய்மையை நாங்கள் பராமரித்து வருகிறோம்,” எனத் தெரிவித்தார்.

காயகல்ப் திட்டத்தின் கீழ், மருத்துவமனை பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் சுகாதாரம், கழிவு மேலாண்மை, தொற்று கட்டுப்பாடு, மருத்துவமனை ஆதரவு சேவைகள் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றின் கீழ் மருத்துவமனைகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. தேசிய மதிப்பீட்டாளர்கள் மார்ச் 2022ல் மருத்துவமனைகளைப் பார்வையிட்டனர்.

மணப்பாறை மருத்துவமனை மொத்தம் 92.86% மதிப்பெண்களும், இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 91.86% மதிப்பெண்களும் பெற்றுள்ளது. இதன் மூலம் ஈரோடு மருத்துவமனைக்கு பரிசுத் தொகையாக ரூ.20 லட்சம் கிடைக்கும்.

Hospital

டாக்டர் மலைதுரை பரிசுத் தொகை குறித்து பேசுகையில்,

“நாங்கள் தினமும் நிறைய நோயாளிகளைப் பார்க்கிறோம். கூடுதல் படுக்கைகள் இல்லாமல் சிரமப்படுகிறோம். மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் படுக்கைகள் மற்றும் வார்டுகள் தேவைப்படுகிறது. இந்தப் பரிசுத் தொகை மூலம் எங்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்துவோம் என்று நம்புகிறோம்.”

இந்த மருத்துவமனையில் தினமும் 200 உள்நோயாளிகளும், 1000க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும் வந்து செல்கின்றனர். பரிசுத் தொகையை மருத்துவமனை உள்கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுத்த நிர்வாகம் நம்புகிறது.