கோவையில் தயாராகும் தங்கம், வெள்ளி முக மாஸ்க்: விலை என்ன தெரியுமா?

முகக்கவசம் அணியவேண்டும் என்கிற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவே இவ்வாறு வடிவமைத்துள்ளதாக ராதாகிருஷ்ணன் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
11 CLAPS
0

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவது அவசியமாகிறது. இந்த பெருந்தொற்று பரவத் தொடங்குவதற்கு முன்பு முகக்கவசம் என்பது பொதுமக்களிடயே பயன்பாட்டில் இல்லாத ஒன்று.

தற்போது முகக்கவசம் அவசியமானதும் பலர் இதைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். அதிலும் சில தயாரிப்பாளர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அதில் புதுமைகள் படைக்கத் தொடங்விட்டனர்.

ஆடைகளுக்கு மேட்சிங் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டன. அதேபோல் கோவையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் சுந்தரம் தங்கம் மற்றும் வெள்ளி இழைகள் கொண்டு முகக்கவசங்கள் தயாரித்துள்ளார்.

மாஸ்க் அணியவேண்டும் என்கிற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவே இவ்வாறு வடிவமைத்துள்ளதாக ராதாகிருஷ்ணன் சுந்தரம் ஏஎன்ஐ-இடம் தெரிவித்துள்ளார்.

18 கேரட் தங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ள முகக்கவம் ஒன்றின் விலை 2.75 லட்ச ரூபாய். அதேபோல் வெள்ளி முகக்கவசத்தின் விலை 15,000 ரூபாய். இதுவரை இவருக்கு 9 ஆர்டர்கள் வந்துள்ளன.

“சாதாரண மக்களால் இந்தத் தொகையைக் கொடுத்து வாங்க முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் பணக்காரர்கள் ஆடம்பரத் திருமணங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்,” என்றார்.

இதுபோன்ற விலையுயர்ந்த முகக்கவசங்களை யார் வாங்குவார்கள் என்றும் இத்தகைய முகக்கவசங்கள் எவ்வாறு நோய் தொற்று பரவாமல் பலனளிக்கும் என்றும் பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

"இதை யாராவது திருடிவிட வாய்ப்புண்டு என்றும் பயனற்ற பகட்டான தயாரிப்பு..." என்றும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
"பிளாட்டினம் முகக்கவசம் அறிமுகமாவதற்காக காத்திருப்பதாக," ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அவரது படைப்பாற்றலுடன்கூடிய முயற்சியை மதிக்கிறேன். இருப்பினும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் போராடி வரும் நிலையில் இதுபோன்ற முகக்கவசங்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதைக் காட்டிலும் பாதுகாப்பை கேள்விகுறியாக்கிவிடும் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

தகவல் உதவி: ஏஎன்ஐ

Latest

Updates from around the world