உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10ல் இடம்பெற்ற ஒரே இந்தியர்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
2022ம் ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் பட்டியலில், ஒரே ஒரு இந்திய தொழிலதிபராக முகேஷ் அம்பானி இடம் பிடித்துள்ளார். 2021ம் ஆண்டில் உலகிலேயே அதிக வருவாய் ஈட்டிய நபராக இந்தியாவின் கெளதம் அதானி உருவாகியுள்ளார்.
2022ம் ஆண்டிற்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில், டாப் டென்னில் ஒரே ஒரு இந்திய தொழிலதிபராக முகேஷ் அம்பானி இடம் பிடித்துள்ளார். 2021ம் ஆண்டில் உலகிலேயே அதிக வருவாய் ஈட்டிய நபராக இந்தியாவின் கெளதம் அதானி உருவாகியுள்ளார்.
2022ம் ஆண்டிற்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை 2022ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை ஹூருன் நிறுவனம், எம்3எம் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளது. இதில் எலான் மாஸ்க் முதல் கெளதம் அதானி வரையிலான பிரபல தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு, நிகர லாபம் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் உலக அளவில் நெம்பர் ஒன் பணக்காரராக எலான் மஸ்க் நீடிக்கிறார். ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 205 பில்லியன் டாலர் ஆகும். 188 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2வது இடத்தை அமேசான் செயல் தலைவர் ஜெஃப் பெசோஸ் பிடித்துள்ளார். 3வது இடத்தில் பிரான்ஸ் ஆடம்பர பொருட்கள் நிறுவனமான LVMH நிறுவனத்தின் சிஇஓவான பெர்னார்ட் அர்னால்ட் 153 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் உள்ளார்.
முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி:
ஹூருன் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக அளவிலான டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்தியராக முகேஷ் அம்பானி இடம் பிடித்துள்ளார். ரூ.7.7 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 9-ம் இடத்தை பிடித்துள்ளார்.
ஹூருன் நிறுவனம் இந்திய கோடீஸ்வரர்கள் குறித்து வெளியிட்டுள்ள பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். 2021ஆம் ஆண்டின் முடிவில் 24 சதவீத வளர்ச்சியடைந்து 103 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பு உடன் இந்தியாவிலேயே நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது முகேஷ் அம்பானியின் வளர்ச்சி 24 சதவீதம் அதிகரித்துள்ளது.
எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளிய கெளதம் அதானி:
இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, 6 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 2வது இடத்தில் உள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு மட்டும் கெளதம் அதானி அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாக ஹூருன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹூருன் நிறுவன அறிக்கையின் படி, ஒவ்வொரு வாரமும் கெளதம் அதானி 6000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார்.
ஒரே ஆண்டில் கெளதம் அதானியின் வருவாய் இரு மடங்காக உயர்ந்துள்ளது. அவரது நிகர சொத்து மதிப்பு உலகப் பணக்காரர்களான எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் ஆகியோரை விட அதிகம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு 313வது இடத்தில் இருந்த அவர், கிடுகிடுவென உயர்ந்து 12வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
டாப் 100 உலக செல்வந்தர்கள் பட்டியலில் இடம் பிடித்த இந்தியர்கள்:
உலக அளவில் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் பல இந்திய தொழிலதிபர்கள் இடம் பிடித்துள்ளனர். 26 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 55வது இடத்தில் உள்ள இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் சைரஸ் பூனவல்லா, 25 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன், ஆர்சிலர் மிட்டல் செயல் தலைவர் லட்சுமி மிட்டல் 60வது இடத்தைப் பிடித்துள்ளார். D-Mart நிறுவனர் RK தமானி 23 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 67வது இடத்தில் உள்ளார்.
இந்தியாவிலிருந்து 215 கோடீஸ்வரர்கள் இந்த பட்டியலில் உள்ளனர். அதில் நைக்கா நிறுவனர் ஃபால்குனி நாயர் உட்பட 58 பேர் புதியவர்கள். உலகளவில் பெரிய பணக்காரர்களை உருவாக்கும் நாடாக இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
72 கோடீஸ்வரர்கள் வசிப்பதால், கோடீஸ்வரர்களின் நகரமாக மும்பை விளங்குகிறது. 51 கோடீஸ்வரர்களுடன் டெல்லி இரண்டாவது இடத்திலும், 28 கோடீஸ்வரர்களுடன் பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் யார்?
முகேஷ் அம்பானி, கெளதம் அதானியை தவிர இந்திய அளவில் டாப் 10 இடத்தில் இடம் பிடித்துள்ள தொழிலதிபர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் ரூ.2 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். சீரம் மருந்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சைரஸ் பூனாவாலா சுமார் ரூ.1.9 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் நான்காம் இடம் பிடித்துள்ளார். மேலும், இப்பட்டியலில் லட்சுமி மிட்டல், டிமார்ட் நிறுவனர் தமானி, ஹிந்துஜா குடும்பத்தினர், குமார் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.
தொகுப்பு: கனிமொழி