மின் வாகன தீர்வுகளுக்கான புதிய மேடையை அறிமுகம் செய்யும் myTVS!
3 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட டிவிஎஸ் மொபிலிட்டி குழுமத்தின் அங்கமான இந்த மேடை, மின் வாகன சூழல் சார்ந்த அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைத்து, மொத்த மின்வாகன தேவைகளுக்குமான பல வகை சேவைகளை ஒரே குடையின் கீழ் வழங்க உள்ளது.
ஆட்டோமொபைல் வாகனங்களுக்கு சந்தைக்கு பிறகான சேவைகளை வழங்கும் மேடையான 'மைடிவிஎஸ்' (myTVS) இந்தியா முழுவதும் ’மொபிலிட்டி ஆஸ் ஏ சர்வீஸ்’ (MaaS) மேடையை அறிமுகம் செய்துள்ளது.
3 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட டிவிஎஸ் மொபிலிட்டி குழுமத்தின் அங்கமான இந்த மேடை, மூலத் தயாரிப்பு நிறுவனங்கள் (OEMs ) உள்ளிட்ட சூழல் சார்ந்த அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைத்து, மொத்த மின்வாகன தேவைகளுக்குமான பல வகை சேவைகளை ஒரே மேடையில் வழங்க உள்ளது.
நிகழ்நேர வாகனங்கள் நிர்வாக சேவைக்கான குத்தகை, உதிரி பாகங்கள் நிர்வாகம், சார்ஜிங் தீர்வுகள், காப்பீடு, டயர் நிர்வாகம் உள்ளிட்ட சேவைகளை இந்த மேடை வழங்கும் என நிறுவனம் தெரிவிக்கிறது. வாகனங்கள் ஆயுள் காலம் மற்றும் செயல்திறனை அதிகரிப்பதற்கான புதுப்பிப்பு சேவையையும் வழங்கும்.
தனிநபர் போக்குவரத்து சேவையில் இருந்து மொத்த வாகனங்கள் (fleet mobility) போக்குவரத்து சேவை தீர்வுகளில் நிறுவனம் கவனம் செலுத்தும் நிலையில் இந்த அறிமுகம் நிகழ்கிறது. வேகமாக வளர்ந்து வரும் குவிக் காமர்ஸ் சேவையை மனதில் கொண்டு, இந்த மேடை மின்மயமாக்கலுக்கு உதவும் பிளக் அண்ட் பிளே தீர்வுகளை வழங்கும்.
“மாஸ் (‘MaaS’ ) மேடை, தனிநபர் மற்றும் மொத்த வாகனங்கள் என இரு தரப்பு தேவைகளையும் நிறைவேற்றி, செயல்திறன் மற்றும் நீடித்த தன்மையை வழங்கும் நோக்கம் கொண்டுள்ளது. குவிக் காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் செலவுகளை கட்டுப்படுத்தி, நீடித்த தன்மை இலக்கை அடைய மின்வாகன தீர்வுகளை நாடுகின்றன. இந்த மாற்றத்தை முன்னெடுத்துச்செல்லும் நல்ல நிலையில் மைடிவிஸ் உள்ளது,” என்று மைடிவிஸ் நிர்வாக இயக்குனர் ஜி.ஸ்ரீனிவாச ராகவன் கூறியுள்ளார்.
இந்த அறிமுகத்தின் ஒரு பகுதியாக நிறுவனம், மின் வாகனம் சார்ந்த லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் MoEVing உடன் இணைந்து செயல்பட உள்ளது.
”இந்தியாவில் மின் வாகன ஏற்பை மேலும் விரைவுபடுத்த சரியான சூழல் கூட்டு முயற்சி தேவை என MoEV-ing நம்புகிறது. மைடிவிஎஸ் சார்பாக மாஸ் மேடை அறிமுக சந்தையின் முக்கிய தேவையை நிறைவேற்றுகிறது. எங்கள் நோக்கத்துடன் பொருந்தும் ஒருங்கிணைந்த தீர்வுகளை வழங்குகிறது,” என MoEVing சி.இ.ஓ. விகாஸ் மிஸ்ரா கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில்: சாய் கீர்த்தி, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan