Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Tanseed 7.0 - ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதி உதவி பெற ஜனவரி 15ம் தேதி வரை விண்ணப்பிக்க StartupTN அழைப்பு!

ஸ்டார்ட் அப்'களை ஊக்குவிக்கும் தமிழ்நாடு அரசின் டான்சீட் திட்டத்தின் 7ம் பதிப்பின் கீழ் நிதி பெற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஜனவரி 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tanseed 7.0 - ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதி உதவி பெற ஜனவரி 15ம் தேதி வரை விண்ணப்பிக்க StartupTN அழைப்பு!

Thursday December 26, 2024 , 2 min Read

ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்கும் தமிழ்நாடு அரசின் டான்சீட் (TANSEED) திட்டத்தின் 7ம் பதிப்பின் கீழ் நிதி பெற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஜனவரி 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், தமிழ்நாடு புத்தொழில் ஆதார  நிதியின் (டான்சீட்) 7-வது பதிப்பிற்கான விண்ணப்பங்களை பெறத்  தொடங்கியுள்ளது.

"தமிழ்நாடு அரசின் டான்சீட் (TANSEED) திட்டம், தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவும் விதமாக தொடங்கப்பட்டு இதுவரை ஆறு  பதிப்புகளை கண்டுள்ளது. தற்போது 7 -ஆம்  பதிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக,தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், தமிழ்நாடு புத்தொழில் ஆதார  நிதியின்(டான்சீட்) 7-வது பதிப்பிற்கான விண்ணப்பங்களை பெறத்  தொடங்கியுள்ளது. தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க இயக்குனர் மற்றும் சி.இ.ஓ சிவராஜா ராமநாதன் தெரிவித்துள்ளார்.

டான்சீட் திட்டம் கீழ், இதுவரை 169 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது.

Startup TN

நிதி, பயிற்சி

இத்திட்டத்தின் வழியாக  பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரர்களாகக் கொண்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சமும், இதர துறை சார்ந்த புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஓராண்டு கால தொழில் வளர் பயிற்சி, தொழில்முனைவு வழிகாட்டுதல்கள், தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான புத்தொழில் நிகழ்வுகளில் பங்கேற்க முன்னுரிமை ஆகிய ஆதரவுகளும் வழங்கப்படும். இதற்காக, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமானது 3 சதவீத பங்குகளை உதவி பெறும் புத்தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும்.

நிபந்தனைகள்

புத்தாக்க சிந்தனையுடன் செயல்படக்கூடிய, வருங்காலங்களில் அதிகளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில் மாதிரிகளைக்  கொண்ட, சமூகத்தில் நன்மாற்றங்களை விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடிய புத்தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டினை தலைமையகமாகக் கொண்டிருக்க வேண்டும் மற்றும், ஒன்றிய அரசின் டி.பி.ஐ.ஐ.டி தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் நிறுவனம்  முன்பே செயல்பட்டு வந்த நிறுவனத்தில் இருந்து பிரிந்து வந்ததாகவோ அல்லது வேறு ஒரு  நிறுவனத்தின் கூட்டு அல்லது இணை நிறுவனமாகவோ இருக்கக் கூடாது. மேலும், எந்த ஒரு அரசு நிறுவனத்தாலும் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இடம்பெற்று இருக்கக் கூடாது. 

வாய்ப்புகள்

இந்தத் திட்டத்தின் முந்தைய பதிப்புகளில் பயன்பெற்ற நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களை வெற்றிகரமாக அடுத்த தளத்திற்கு கொண்டு சென்று பல்வேறு முதலீட்டு நிதியங்களின் வாயிலாக முதலீடுகளை திரட்டி இயங்கி வருகின்றன, என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற விரும்பும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் www.startuptn.in இணையதளத்தின் வழியே, ஜனவரி 15ஆம் தேதி, 2025க்குள்  விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்கள் அறிய இ-மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.: [email protected]


Edited by Induja Raghunathan