Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

StartupTN நடத்திய ‘ஃபிஷ் டேங்க்’ போட்டி; பரிசை வென்ற நாகை பொறியியல் மாணவர்!

StartupTN- இன் துறைசார் முயற்சிகள் ப்ளூ இகானமி சார்பாக தொடங்கப்பட்ட இந்தப் போட்டியில் பங்கேற்க நாடு முழுவதிலிருந்தும் 217 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன.

StartupTN நடத்திய ‘ஃபிஷ் டேங்க்’ போட்டி; பரிசை வென்ற நாகை பொறியியல் மாணவர்!

Friday August 16, 2024 , 2 min Read

சென்னையை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் 'Youth எனர்ஜி பிரைவேட். லிமிடெட்' மற்றும் நாகப்பட்டின மீன்வள பொறியியல் கல்லூரி மாணவருக்கும் ஸ்டார்ட் அப் டிஎன் மற்றும் சத்யபாமா டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் அளிக்கும் 'Fish Tank' விருது வழங்கப்பட்டது.

StartupTN- இன் துறைசார் முயற்சிகள் ப்ளூ இகானமி சார்பாக தொடங்கப்பட்ட இந்தப் போட்டியில் பங்கேற்க நாடு முழுவதிலிருந்தும் 217 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன.

ஆகஸ்ட் 13, 2024 அன்று சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு ஸ்டார்ட் அப் சென்னை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டார்ட் அப் டிஎன் மிஷன் இயக்குனர் மற்றும் CEO சிவராஜா ராமநாதன், Aquaconnect ஸ்பான்சர் செய்த ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசை வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்வில் நாகப்பட்டினம் மீன்வள பொறியியல் கல்லூரி மாணவர் கிறிஸ்பின் பினேஷ் என்பவருக்கு மீன்களை பெடல் மூலம் டீஸ்கேல் செய்யும் இயந்திரத்தின் கண்டுப்பிடிப்புக்காக ஃபிஷ் டேங்க் விருது வழங்கப்பட்டது.

Fish Tank

கூடுதலாக, ஐந்து பங்கேற்பாளர்கள் சிறப்பு விருதுகளைப் பெற்றனர். சிறப்பு விருது வென்றவர்கள் சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் கடலாராய்ச்சி மையத்தை 6 மாதங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்தலாம்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கிய ஸ்டார்ட் தமிழ்நாடு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சிவராஜ ராமநாதன் பேசும்போது,

"வளர்ச்சி கண்டு வரும் ஸ்டார்ட் அப் துறையில், தமிழ்நாடு ஒரு விரைவான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது, என்றார். மேலும், இந்தத் துறையில் தமிழ்நாடு தாமதமாக நுழைந்தாலும் இன்று ஒரு வலுவான ஸ்டார்ட் அப் சூழலை உருவாக்குவதில் ஸ்டார்ட் அப் டிஎன் முன்னணி வகிக்கிறது," என்றார்.

ஸ்டார்ட் அப் தமிழ்நாட்டின் துறை சார்ந்த அணுகுமுறையை அவர் குறிப்பிட்டு 30 வெவ்வேறு துறைகளில் ஸ்டார்ட் அப் முயற்சிகளில் கவனம் செலுத்துகிறது, என்றார். இவை ஒவ்வொன்றும் தனித்துவமானது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைய ஆதரவு தரும் அமைப்புகள் இவை, என்றார்.

மரைன் டெக்னாலஜீஸ் நிறுவனர் சந்தான கிருஷ்ணன் பேசுகையில்,

"ஸ்டார்ட் அப் என்பது ஏதோ தகவல் தொழில் நுட்பம் மற்றும் அது தொடர்புடையது மட்டுமே என்ற ஒரு பார்வை இளைஞர்களிடம் வேரூன்றி உள்ளது, இது தவறான பார்வை, உயிரியல் அறிவியலை எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கும் தொழில்முனைவோராகும் வாய்ப்பு உள்ளது, ஸ்டார்ட் அப் வாய்ப்பு உள்ளது," என்றார்.

மேலும், வலுவான நிதி பின்னணி இருந்தால்தான் தொழில் தொடங்க முடியும் என்பதும் தேவையற்ற ஒரு சிந்தனையே, இதிலிருந்து வெளியே வந்து யோசித்தால் வலுவான வர்த்தக யுக்தி, உற்பத்தி பற்றிய கருத்து கொண்டவர்கள் யாராக இருந்தாலும் ஸ்டார்ட் அப் தொடங்கலாம் என்றார்.