'சுதந்திர தின ஆஃபர்’ - 15ம் தேதி ஒரு ரூபாயில் பஸ் பயணம்; Neugo சிறப்பு சலுகைத் திட்டம் அறிவிப்பு!
தேசத்தின் 77 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், நியூகோ ஏசி மின்சாரபஸ் சேவை நிறுவனம் ஒரு ரூபாய் பயண சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி நகரங்களுக்கு இடையிலான ஏசி மின்சார பஸ் சேவையான நியூகோ (
), சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.கிரீன்செல் மொபிலிட்டி நிறுவனத்தின் மின்சார பஸ் சேவை பிராண்டான, நியூகோ, 10 முதல் 15ம் தேதி வரை, வாடிக்கையாளர்கள் நிறுனம் சேவை கொண்டுள்ள எந்த மார்கத்திலும் ஒரு ரூபாய்க்கு டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது.
இந்த குறுகிய கால சலுகை அறிவிப்பு, தேசத்தின் 77வது சுதந்திர தினமான 15ம் தேதி மட்டும் பயணம் செய்ய பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசதி மற்றும் பாதுகாப்பை முக்கிய அம்சங்களாகக்கொண்ட, நியூகோ, இந்தூர்-போபால், தில்லி- ஆக்ரா, தில்லி- டேராடூன், தில்லி- ஜெய்பூர், சென்னை- திருப்பதி, பெங்களூரு- திருப்பதி, சென்னை- புதுச்சேரி, ஐதராபாத்- விஜயவாடா ஆகிய மார்கங்களில் போக்குவரத்து சேவையைக் கொண்டுள்ளது.
நீடித்த நிலையான போக்குவரத்து சேவை முன்னோடியான நியூகோ பயணத்தை வசதியானதாக சுற்றுச்சூழல் நட்பானதாக மாற்ற விரும்புகிறது. ‘#Bus1RupeeMein' பிரச்சாரத்தின் மூலம், அனைவரும் நகரங்களுக்கு இடையிலான ஏசி பஸ் சேவையை நம்ப முடியாத விலையில் அனுபவிக்க வழி செய்கிறது.
"இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த நம்ப முடியாத சலுகையை அறிவிப்பதில் உற்சாகம் கொள்கிறோம். ஒரு ரூபாய் கட்டணத்தில் டிக்கெட் இருப்பதால், நியூகோ சேவையை மக்கள் அனுபவிக்க அழைப்பு விடுக்கிறோம்,” என்று கிரீன்செல் மொபிலிட்டி சி.இ.ஓ மற்றும் நிர்வாக இயக்குனர் தேவேந்திர சாவ்லா கூறியுள்ளார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள 15ம் தேதி காலை 8 மணி வரை பதிவு செய்யலாம் அல்லது டிக்கெட் தீரும் வரை இந்த சலுகை பொருந்தும். நிறுவன இணையதளம் மற்றும் செயலி மூலம் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Induja Raghunathan