1% விதி: 2025ல் உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகும் சிறிய மாற்றங்கள்!
1% விதி என்பது, தினசரி அன்றாட விஷயங்களை 1% அளவுக்கு அதிகரிப்பது ஆகும். இதன் மூலம் குறிப்பிடத்தக்க விளைவுகளை காணமுடியும்.
வாழ்க்கையில் சிலர் ஏன் சிரமமின்றி மேலே வந்து விடுகிறார்கள், மற்றவர்கள் உலகின் வேகத்துக்கு ஈடுகொடுக்க போராடுகிறார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
இதற்கான பதில் பெரும்பாலும் மாபெரும் பாய்ச்சல்களில் இல்லை. சிறிய அதே நேரம் நிலையான அடிகளின் சக்தியில் உள்ளது. இதற்குத்தான் ‘1% விதி (Rule)’ கைகொடுக்கிறது.
அதாவது, சிறிய, நீடித்த மாற்றங்கள் காலப்போக்கில் குறிப்பிடத்தக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்ற எண்ணத்தில் வேரூன்றிய ஓர் உத்தி.
இந்த எளிமையானதும், ஆழமானதுமான விதி, புதிய ஆண்டில் உங்கள் திறனைத் வளர்ப்பதற்கு மிக முக்கியமாகும். பெரிய விளைவுகளுக்கான சிறிய மாற்றங்களைச் செய்யத் தயாரா?
அதென்ன 1% விதி?
இந்த 1% விதி என்பது, தினசரி அன்றாட விஷயங்களை 1% அளவுக்கு அதிகரிப்பது ஆகும். இதன் மூலம் குறிப்பிடத்தக்க விளைவுகளை காணமுடியும். இது புகழ்பெற்ற பிரிட்டிஷ் சைக்கிளிங் பயிற்சியாளரான டேவ் பிரெய்ஸ்ஃபோர்ட் என்பவரால் பிரபலமான ஒரு கோட்பாடு. அவர் தன்னுடைய சைக்கிளிங் குழுவின் திறனை சிறிய அளவில், அதாவது, 1% தினமும் அதிகரித்ததன் மூலம் மிகப் பெரிய வெற்றியை ஈட்டினார்.
தினமும் உங்கள் வாழ்க்கையின் ஒரு அம்சத்தை 1% அதிகரிப்பதை கற்பனை செய்து பாருங்கள். ஒரே வருடத்தில் அந்தச் சிறிய வளர்ச்சி என்பது 37% மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.
சிறிய மாற்றங்கள் ஏன் முக்கியம்?
பெரிய இலக்குகளை நிர்ணயிப்பது பய உணர்வை தரலாம். ஆனால் சிறிய, கையாளக்கூடிய மாற்றங்கள் குறைந்த அச்சுறுத்தலையும், நேர மேலாண்மைக்கு சுலபமானதாகவும் இருக்கும்.
வேகத்தை கட்டமைத்தல்:
நிலைத்தன்மை என்பது ஒரு ரகசிய பொருள் ஆகும். சிறிய வெற்றிகள் உங்களுக்கு சாதனை உணர்வை உருவாக்கி, தொடர்ந்து இயங்க உங்களை ஊக்குவிக்கும்.
நிலையான வளர்ச்சி
1% விதி என்பது மிகப் பெரிய மாற்றங்களைப் கொண்டது அல்ல. இது நிலையான, நீண்ட கால முன்னேற்றத்தைப் பற்றியது.
1% விதியை பின்பற்றுவது எப்படி?
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் மாற்றியமைப்பதற்குப் பதிலாக, உடற்பயிற்சி, உறவுகள், உற்பத்தித் திறன் அல்லது மன ஆரோக்கியம் போன்றவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு பகுதியை மட்டும் அடையாளம் காணவும்.
உதாரணமாக உடற்பயிற்சி என்றால், தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரை மட்டும் கூடுதலாகச் சேர்க்கவும் அல்லது உங்கள் உடற்பயிற்சியை ஒரு நிமிடம் நீட்டிக்கவும். இது போன்ற சிறிய மாற்றமே நீடித்த மாற்றத்துக்கு வழிவகுக்கும்.
உங்கள் முன்னேற்றத்தை கண்காணியுங்கள்:
கண்காணிக்கப்படாத சிறிய மாற்றங்கள் முக்கியமற்றதாக தோன்றலாம். உங்கள் தினசரி 1% முன்னேற்றத்தை அளவிட, செல்போன் செயலிகள், டைரி குறிப்புகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக, உங்கள் தினசரி நடைபயிற்சியை பதிவு செய்வது அல்லது ஒவ்வொரு சிறிய உணவு மாற்றங்களையும் குறித்து வைத்துக் கொள்வது என்பது உங்களை ஊக்குவிக்கும்.
சிறிய வெற்றிகளைக் கொண்டாடுங்கள்:
ஒவ்வொரு சிறிய மைல்கல்லையும் அங்கீகரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வெற்றியும் உங்கள் பழக்கத்தை வலுப்படுத்தி, உங்களை உற்சாகப்படுத்துகிறது. ஒரு வார சீரான முன்னேற்றத்திற்குப் பிறகு உங்களுக்குப் பிடித்த செயலில் ஈடுபடுங்கள்.
தினமும் ஒரு பக்கத்தைப் படிப்பது பெரிதாகத் தெரியாது. ஆனால், ஒரு வருடத்தில், ஒரு முழு புத்தக அலமாரியையும் படித்திருப்பீர்கள்.
உங்கள் 1% பயணத்தைத் தொடங்கவும்
1. வாழ்க்கையில் நீங்கள் மேம்படுத்த விரும்பும் விஷயங்கள் எதுவென்று சிந்தியுங்கள்.
2: உங்கள் இலக்குகளை சிறிய, செயல்படக்கூடிய பகுதிகளாக பிரிக்கவும்
3: ஒவ்வொரு நாளும் 1% மட்டுமே மேம்படுத்த உறுதி ஏற்றுக் கொள்ளுங்கள்.
மாற்றத்திற்கான திறவுகோல்
நீங்கள் தினமும் எடுக்கும் சிறிய முயற்சிகளில் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 1% விதி என்பது கச்சிதமான விஷயங்களை கோரவில்லை. அதற்கு தேவையெல்லாம் விடாமுயற்சி மட்டுமே. உங்கள் தொழில், உறவுகள் அல்லது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நீங்கள் இலக்காகக் கொண்டாலும், இந்தக் கொள்கையானது உங்களின் நிலையான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இது பெரும் பாய்ச்சல் அல்ல, ஆனால், நிலையான மாற்றத்தை உருவாக்கும் சிறிய முன்னேற்றங்களே.
சிறியதாக தொடங்குங்கள். சீராக இருங்கள். 2025-ல் உங்கள் வாழ்க்கை மாறுவதைப் பாருங்கள்.
- மூலம்: சானியா அகமது கான்
Edited by Induja Raghunathan