கேரட்டில் இருந்து புதிய லேசர் தொழில்நுட்பம்: ஐஐடி மெட்ராஸ் கண்டுபிடிப்பு!
ஐஐடி மெட்ராஸ் ஆய்வாளர்கள் கேரட்டை பயன்படுத்தி லேசர் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்!
கேரட் கண் பார்வைக்கு நல்லது என்று பல ஆண்டுகளாக நாம் நம்பி சொல்லிவரும் ஓர் கூற்று. ஆனால் கேரட் சிறந்த தெளிவான பார்வையை தருவதோடு கண்ணுக்குதெரியாதவற்றை பார்க்க உதவுகிறது என ஓர் ஆய்வில் ஐஐடி மெட்ராஸ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஐஐடியைச் சேர்ந்த ஆய்வு குழு ஒன்று கேரட்டுகள் மூலம் போட்டோனிக்ஸ் பயன்பாடுகளில் இருந்து பையோ கம்பாட்டிபில் லேசர் உற்பத்தி செய்ய முடியும் என கண்டறிந்துள்ளனர்; அதாவது ஃபோடான்களுடன் (ஒளி அலகுகள்) தொடர்புடைய தொழில்நுட்பங்கள். கடந்த வெள்ளிகிழமையன்று ஐஐடி இயற்பியல் ஆய்வகத்தில் தனது ஆராய்ச்சியில் ஈடுப்பட்டிருந்த அறிஞர் வெங்கட சிவா, நீல லேசர் ஒளியை பதப்படுத்தப்பட்ட கேரட் மீது ஆழ்த்தியுள்ளார், அதிர்ச்சியளிக்கும் வகையில் அக்கேரட்டின் வழியே ஒளி பாய்ந்து பச்சை-சிவப்பு அலைவரிசையில் சிதறிய லேசர் ஒளி ஏற்பட்டுள்ளது.
இது போன்ற விளைவு நோபல் பரிசு பெற்ற இயற்பியல் வல்லுனர் சர். சி வி ராமன் 1922ல் கண்டுபிடித்து அதற்கு 1930ல் நோபல் பரிசையும் பெற்றார், ஆனால் இந்த முறை இதுப்போன்ற வெளிப்பாடு ஒரு காயில் இருந்து வந்திருப்பதே அதிர்ச்சியளிப்பதாக தெரிவிக்கின்றனர். இதனை கண்ட பேராசிரியர் விஜயனும் இந்த ஆய்வில் இணைந்துள்ளார்.
இந்த ஆராய்ச்சி பச்சை காய்கறிகளிலிருந்து ஃபோட்டானிக் தொழில்நுட்பத்தை உருவாக்க முதல் மற்றும் சிறிய படியாக அமையும் என தெரிவித்தார் விஜயன்.
"தற்போது லேசர் ஒளியை உருவாக்க உயிரியல் பொருளை எவரும் பயன்படுத்துவதில்லை. இது ஏற்கனவே உள்ள தொழில்நுட்பத்தை எந்தவிதத்திலும் மாற்றாது; ஆனால் கேரட் பயன்படுத்தி பயோ கம்பாட்டிபில் லேசர்கள் உருவாக்கும் சாத்தியம் உள்ளது,” என தெரிவிக்கிறார் விஜயன்.
இந்த ஆராய்ச்சிக்கு தேவையானது, எத்தனாலில் ஊறிய கேரட் மட்டுமே. எத்தனாலி+ல் ஊறிய கேரட்டின் வழியே நீல லேசர் ஒளியை செலுத்தினால் பச்சை சிவப்பு லேசர் அலைவரிசை ஏற்படும்.
ஆராய்ச்சி தொழில்நுட்பங்களில் மற்றும் நோயறிதல் கருவிகளில் பயன்படுத்தப்படும் நுண்ணோக்கிக்கு தேவைப்படும் ஒளிக்கதிர்களை இதன் மூலம் பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கேரட் லேசர்களை தெர்மோமீட்டரில் வெப்பநிலை உணரவும் பயன்படுத்தப்படலாம், ஏனெனில் ஒளி வெளிச்சம் வெப்பநிலைக்கு ஒரு நேர்கோட்டு பதிலைக் காட்டுகிறது.
“இந்த கேரட் லேசரின் பண்புகள் மரபுவழியில் இருந்து வேறுப்பட்ட ஒன்று, கேரட் லேசர் உமிழ்வு தற்போது உள்ள லேசர் தொழில்நுட்பங்களுடன் ஒத்துப்போகவில்லை,” என்கிறார் துணை பேராசிரியர் கிருஷ்ணன்.
கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின் | தகவல் உதவி: டைம்ஸ் ஆஃப் இந்தியா