Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

ஐபோன் டு ஆண்ட்ராய்ட் போன் மாறுவது இனி சுலபம்: புதிய ஆப் அறிமுகம் செய்யும் கூகுள்!

ஆப்பிள் ஐபோன்களில் இருந்து ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு மாறுவதற்கு புத்தம் புதிய வழியை அறிமுகப்படுத்த கூகுள் தயாராகி வருகிறது.

ஐபோன் டு ஆண்ட்ராய்ட் போன் மாறுவது இனி சுலபம்: புதிய ஆப் அறிமுகம் செய்யும் கூகுள்!

Wednesday April 20, 2022 , 2 min Read

ஆப்பிள் ஐபோன்களில் இருந்து ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு மாறுவதற்கு புத்தம் புதிய வழியை அறிமுகப்படுத்த கூகுள் தயாராகி வருகிறது.

ஒரு ஆண்ட்ராய்டு போனிலிருந்து புதிய போனுக்கு நகரும் போது, ​​உங்கள் ஆப்ஸ், தொடர்புகள், செய்திகள், புகைப்படங்கள் மற்றும் பலவற்றை தடையின்றி நகலெடுக்க, இரண்டு ஃபோன்களையும் வயர்லெஸ் அல்லது USB கேபிள் ஒன்றாக இணைப்பது எளிது.

ஆண்ட்ராய்டு போன்களைப் பொறுத்தவரை தொடர்புகள், செயலிகள், மீடியாவில் உள்ள பைல்கள் உள்ளிட்ட 12 விஷயங்களை கேபிள் இணைப்பு மூலம் மின்னல் வேகத்தில் நகலெடுக்க முடியும். இதற்கு நேர்மாறாக, உங்கள் தரவை ஐ-போனில் இருந்து ஆண்ட்ராய்டுக்கு நகலெடுப்பது, Google Drive-யில் உள்ள தரவுகளை காப்பி செய்து, அதனை முறையாக மீட்டமைப்பது என்பது எளிதான செயல்முறை அல்ல.

Android

எதிர் எதிர் திசைகளில் பயணித்து வரும் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்காக மாற்றங்களை செய்து வருகின்றன. ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களில் ஆண்ட்ராய்டுக்கான பிரத்யேக "மூவ் டு iOS" என்ற பயன்பாட்டை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கி வருகிறது. இது ஆண்ட்ராய்டு போனில் இருந்து ஆப்பிளுக்கு மாற வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.

இதனிடையே, ஜூலை 2021ம் ஆண்டு, வாடிக்கையாளர்கள் தங்களது ஐபோனில் இருந்து ஆண்ட்ராய்டுக்கு எளிதில் மாற புதிய செயலியை கண்டுபிடிக்க முயன்றுவருவதாக அறிவித்தது. தற்போது கூகுள் நிறுவனம் , ‘ஸ்விச் டூ ஆண்ட்ராய்டு’ (Switch to android) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஐபோனில்-ல் இருந்து ஆண்ட்ராய்டு போனுக்கு தரவுகளை எளிதில் மாற்ற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவு பரிமாற்றத்தை எளிதாக்குவதற்காக 2015 ஆம் ஆண்டு கூகுள் ப்ளே ஸ்டோரில் ஆப்பிள் தனது முதல் செயலியை வெளியிட்ட நிலையில், உலகின் முன்னணி சர்ச் இன்ஜின் நிறுவனமான கூகுள் ஐபோனுக்கான ‘ஸ்விச் டூ ஆண்ட்ராய்டு’ என்ற செயலியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி உங்கள் மொபைல் ஃபோனில் (ஐபோன் பயனர்கள் உட்பட) Google Play Store இலிருந்து ‘ஸ்விச் டூ ஆண்ட்ராய்டு’ பயன்பாட்டை நிறுவினால், உங்கள் தொடர்புகள், காலண்டர் நிகழ்வுகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை ஆண்ட்ராய்டுக்கு எளிதாக நகர்த்த முடியும். உங்கள் தரவுகள் அனைத்தும் எவ்வித சிக்கலும் இன்றி அப்படியே ஆண்ட்ராய்டு போனுக்கு மாற்றப்படும்.
iphone12

Switch to android app பயன்படுத்துவது தொடர்பான வழிமுறைகள்:

  • ஆப் ஸ்டோரைத் ஓபன் செய்து, அதில் உள்ள சர்ச் பாரில் Switch to android என்பதைத் தேடவும்.

  • Switch to android பயன்பாட்டை நிறுவி, அதனை துவக்கவும்.

  • உங்கள் Android மொபைலில் காட்டப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

  • உங்கள் Android மொபைலில் தோன்றும் ஐபோன் பட்டியலிலிருந்து உங்களுடைய மாடலைத் தேர்வு செய்யவும்.

  • இப்போது தொடர்புகள், கேலெண்டர் நிகழ்வுகள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் போன்ற பல விருப்பங்கள் தோன்றுவதை காணலாம். அதில் எதனை ஐபோனில் இருந்து ஆண்ட்ராய்டுக்கு நகர்த்த வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துவிட்டு, continue என்பதை க்ளிக் செய்யவும்

  • தரவுகள் காப்பி செய்யப்பட்டதும், உங்கள் iPhone இல் iMessage மற்றும் FaceTime பயன்பாட்டை Disable செய்து வைக்கவும்.

  • இப்போது அதே Google கணக்கில் உங்கள் புதிய மொபைலில் உள்நுழைந்து உங்கள் Android சாதனத்திற்கான செட் அப்புகளை செய்து கொள்ளலாம்.

தொகுப்பு - கனிமொழி