பிரமாண்ட தொழிற்சாலை அமைக்க 1000 ஏக்கர் நிலம் தேடும் ஓலா- 6 மாநிலங்களிடையே கடும் போட்டி!
செல் ஜிகாபேட்டரி, எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை அமைக்க நிலம் கேட்டு மாநிலங்களுடன் ஓலா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் செல் ஜிகாபேட்டரி மற்றும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க 1000 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும் இதற்கு ஓலா நிறுவனம் குறிப்பிட்ட மாநிலங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன்மூலம் ரூ.10,000 கோடி வரை முதலீடு ஈர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நான்கு சக்கர வாகனத்துக்கான இலக்கப் பணி தீவிர நடவடிக்கையில் இருக்கிறது. இதற்கான கான்செப்ட் டிசைன் காரை ஏறக்குறைய தயாராக்கி விட்டது.
ஓலா எலக்ட்ரிக் ஆனது செல் ஜிகாபேட்டரி மற்றும் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலைகளை அமைக்க நிலம் தேடி வருவதாகவும், இதற்கு பல மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.
எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான பேட்டரி தட்டுப்பாடு மற்றும் குறைகளைப் போக்க ஓலா நிறுவனம் செல் ஜிகா பேட்டரியை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறது. ரூ.10,000 கோடி வரை முதலீட்டை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படும் செல் ஜிகாபேட்டரி மற்றும் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலையை அமைக்க ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு 1000 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் பல மாநிலங்கள் இடையே போட்டி நிகழ்வதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய மாநில அரசுகளிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாத தொடக்கத்தில் இதுதொடர்பான பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.
ஓலா நிறுவனம் முன்னதாகவே தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் இருசக்கர வாகனத் தொழிற்சாலையான பியூச்சர் பேக்டரியை அமைத்திருக்கிறது. டிசம்பர் 2020 முதல் ஓலான நிறுவனம் தனது மின்சார ஸ்கூட்டர்களை இங்கு உற்பத்தி செய்ய தொடங்கியது. ஆனால் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்த கூடுதல் தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.