சென்னை மக்களுக்கு நற்செய்தி - இனி சர்வதேச விமான நிலையத்தில் கேப் சேவை வழங்கும் 'Ola Zone' அறிமுகம்!
சென்னை விமான நிலையத்தில் இதுவரை டாக்சி சேவை கிடைத்து வந்தது போல் இனி ஓலா கேப் சேவையை பயன்படுத்த Ola Zone அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இதுவரை டாக்சி சேவை கிடைத்து வந்தது போல் இனி 'ஓலா கேப் சேவை'யை பயன்படுத்த
Zone அமைக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் முன்னணி டாக்ஸி நிறுவனமான ஓலா, சென்னை சர்வதேச விமான நிலையத்துடன் இணைந்து ஓலா மண்டலங்கள் மற்றும் சேவை மையங்களை அமைத்துள்ளது.
ஓலா மண்டலம் (Ola Zone):
ஓலா மொபிலிட்டி (Ola Mobility) சார்பில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் Ola மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் பயணங்களுக்கு சவாரி தேவைப்படும் பயணிகளுக்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
விமான நிலையங்கள் வழியாக பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக தரைவழிப் போக்குவரத்தை மேம்படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் பல்வேறு வழிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் OLA கேப்ஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ஓலா மொபிலிட்டி தலைமை நிர்வாக அதிகாரி ஹேமந்த் பக்ஷி கூறுகையில்,
“விமான நிலைய சவாரி அனுபவத்தை மேம்படுத்துவதற்கான எங்கள் பார்வைக்கு ஏற்ப, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் எங்கள் சேவைகளை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த விரிவாக்கம், வசதியான விமான நிலைய போக்குவரத்து சேவைகளின் நாடு தழுவிய நெட்வொர்க்கை உருவாக்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது,” என்றார்.
Ola Zone, தற்போது விமான நிலையத்தில் உள்ள டாக்சி சேவைகளைப் போலவே உள்ளூர் பயணத்திற்கான சேவைகளை வழங்கும். இதன் வாயிலாக சென்னை விமான நிலையத்தில் உள்ள பயணிகள் இனி உள்நாட்டு மற்றும் சர்வதேச வருகை முனையத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள ஓலா சேவை மையங்களின் பிரதிநிதிகளின் உதவியுடன், டாக்ஸியை புக் செய்துகொள்ளலாம்.
ஒரே பில்லில் அனைத்து கட்டணங்களையும் பெறும் பயணிகளுக்கு பிரத்யேக கியோஸ்க்களில் முன்பதிவு உதவி வழங்கப்படும். அதே நேரத்தில், ஓட்டுநர்கள் ரொக்கமில்லா செக் அவுட் முறையை பயன்படுத்துவதன் மூலமாக விமான நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் போது பணம் செலுத்துவதைத் தவிர்க்கலாம்.
2022ம் ஆண்டு வரை 6 விமான நிலையங்களில் சேவை வழங்கி வந்த ஓலா மொபைலிட்டி நிறுவனம், தற்போது நாடு முழுவதும் 22 முன்னணி விமான நிலையங்களில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.