‘ஒரே இந்தியா; ஒரே தங்கம் விலை’ - இந்தியாவில் முதலில் அமல்படுத்திய கேரளா!
ஒரே இந்தியா ஒரே தங்கம் என்ற கொள்கையின் படி, முதன் முறையாக கேரள அரசு தமது மாநிலத்தில் தங்கத்திற்கு ஒரே விலையை அமல்படுத்தியுள்ளது.
ஒரே இந்தியா ஒரே தங்கம் என்ற கொள்கையின் படி, முதன் முறையாக கேரள அரசு தமது மாநிலத்தில் தங்கத்திற்கு ஒரே விலையை அமல்படுத்தியுள்ளது.
தங்கத்திற்கான தேவை, பணவீக்கம், தங்கம் கொள்முதல் மற்றும் விற்பனை, உலகளாவிய புவிசார் அரசியல் நடைமுறைகள் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தினந்தோறும் மாறக்கூடியதாக உள்ளது.
அதேபோல், மாநிலத்தில் உள்ள தங்கச் சங்கங்கள் நிர்ணயிக்கும் விலை காரணமாகவும், நாணய மாற்று விகிதங்கள், கலால் வரி, மாநில வரிகள் மற்றும் நகைக்கடைகளின் மேக்கிங் கட்டணங்கள் ஆகியவை காரணமாகவும் தங்கத்தின் விலை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. எனவே, தான் இந்தியாவில் ‘ஒரே இந்தியா ஒரே தங்கம்’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒரே இந்தியா ஒரே தங்கம் திட்டம்:
இந்தியாவைப் பொறுத்தவரை ரத்தினங்கள் மற்றும் நகை சந்தையின் கடந்த ஆண்டு வருமானம் $78.50 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், இந்தியாவில் தங்கம் ஆடம்பர பொருளாக மட்டுமின்றி, சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் நடுத்தர மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
ஆனால், கடைக்கு கடை தங்கத்தின் விலை மாறுபடுவது மற்றொரு தரப்பினருக்கு அழுத்தமாக மாறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
எனவே, தான் இந்தியாவில் ‘ஒரே இந்தியா ஒரே தங்கம்’ என்ற கொள்கையைக் கொண்டு வந்துள்ளது. இதனால் மக்களுக்கு சரியான விலையில் தரமான தங்கம் கிடைக்கக்கூடும் என்பதால், அனைத்து மாநிலத்திற்கு முன்மாதியாக கேரளாவில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலமாக நாட்டிலேயே இத்திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலம் கேரளா மாறியுள்ளது. இதனால் கேரளாவைச் சேர்ந்த தங்க டீலர்கள் நாட்டிலுள்ள எந்த ஷோரூமிலிருந்தும் தங்கம் ஒரே விலையில் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பல்வேறு மாநிலங்களின் தங்கம், சங்கங்கள் நிர்ணயம் செய்யும் விலையின் அடிப்படையில் வர்த்தகம் நடந்து வருகிறது. உதாரணமாக, அகமதாபாத்தில் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.4,805 ஆக இருந்தது. அதேசமயம், சென்னையில் ஒரு கிராம் ரூ.4,960 ஆகவும், டெல்லியில் ரூ.4,815 ஆகவும் இருந்தது. அதே சமயம், கேரளாவில் ரூ.4,800 ஆக இருந்தது. தற்போது ‘ஒரே இந்தியா ஒரே தங்கம்’ திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டால் மக்களுக்கு ஒரே விலையில் தங்கம் கிடைக்கும்.
முன்மாதிரி மாநிலமான கேரளா:
கேரள மாநிலத்தில் இனி ஒரே மாதிரியான விலையில் தங்கம் கிடைக்கும். வங்கி விகிதங்களின் அடிப்படையில் ஒரு நிலையான விகிதம் வசூலிக்கப்படும். ந்த முடிவு பயனர்களுக்கு இரட்டை நன்மையைத் தருகிறது. வங்கி தங்கத்தின் விலை பொதுவாக சந்தை விலையை விட 100-150 ரூபாய் குறைவாக கிடைக்கும்.
தற்போது பெரும்பாலான மாநிலங்களில் தங்கம் வர்த்தகம் வங்கி விலையை விட ரூ.150-300 அதிகமாக உள்ளது. இதற்கு மாநிலங்களுக்கு இடையேயான விலை மாறுபாடுதான் காரணம். இந்த மாற்றத்தால், சில சங்கங்கள் மற்றும் நகை வியாபாரிகள் விலையை உயர்த்துகின்றனர்.
தங்கத்தின் விற்பனை விகிதத்தை நிர்ணயம் செய்யும் அனைத்து கேரள தங்கம் மற்றும் வெள்ளி வணிகர்கள் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களான மலபார் கோல்டு அண்ட் டயமண்ட்ஸ், ஜாய் ஆலுக்காஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ் போன்றவர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மலபார் கோல்டு அண்ட் டயமண்ட்ஸ் நிறுவனம் ‘ஒன் இந்தியா ஒன் கோல்ட் ரேட்’ திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர் 2020 இல் அறிமுகப்படுத்தியது. மலபார் கோல்டுக்கு இந்தியாவில் சுமார் 200 கடைகள் உள்ளன. ஜாய் ஆலுக்காஸ் 85 கடைகளையும் கல்யாண் 120 கடைகளையும் கொண்டுள்ளது
இனிமேல் இந்தக் கடைகளில் தங்கத்தின் விலை ஒரே விலையில்தான் இருக்கும். கேரளாவின் இந்த நடவடிக்கையை மற்ற மாநிலங்களும், வர்த்தகர்களும் விரைவில் பின்பற்றலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், மற்ற மாநிலங்களில் நகை வியாபாரிகளுக்கு அதிக தேவை ஏற்பட, கேரளாவின் இந்த நடவடிக்கை உதவும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலக தங்க கவுன்சில் முன்பு நாட்டிற்கு ஒரு விலையை நிர்ணயிக்க ஸ்பாட் கோல்ட் எக்ஸ்சேஞ்ச் அமைக்க முன்மொழிந்தது. ஷாங்காய் கோல்டு எக்ஸ்சேஞ்சைப் போலவே இந்தியாவும் ஒரே இடத்தில் பரிமாற்றம் செய்ய வேண்டும், இது விலையை மிகவும் வெளிப்படையானதாக மாற்றும் என்றும் WGC கூறியது. சங்கங்களுக்கு இடையிலான போட்டிகள் பெரும்பாலும் தங்கச் சந்தையைப் பாதிக்கின்றன. விலையில் சீரான நிலை ஏற்பட்டால், இதுபோன்ற பிரச்னைகள் மறைந்துவிடும்.
திருமண சீசன் நெருங்கி வரும் நிலையில், கேரள நகைக்கடைக்காரர்களின் இந்த அதிரடி நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு மேலும் பலத்தை அளிக்கும். ஒட்டுமொத்த உலகமும் பணவீக்கத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், தங்கத்தின் பாதுகாப்பான முதலீடு என்ற நற்பெயரும் மக்களை கேரள நகைச் சங்கிலிக்கு ஈர்க்கும்.
இதற்கிடையில், மாநிலத்தில் தங்கத்தின் விலை இந்த மாதத்தின் அதிகபட்ச விலையில் தொடர்கிறது. தங்கம் சவரனுக்கு நேற்று ரூ.600 அதிகரித்து ரூ.39,000 ஆக இருந்தது. ஒரு கிராம் ரூ.4,875 ஆக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கோவிட் காலத்தில், நாட்டில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.42,000 வரை அதிகரித்திருந்தது.
கேரளாவில் சீரான விலையை அமல்படுத்தும் போது, நாட்டின் மொத்த தங்க நுகர்வில் 40% தென்னிந்தியாவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் தங்க நகைகள் மீதான தனிநபர் செலவினம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு - கனிமொழி
Gold Rate Chennai: தங்கம் விலை உயர்வு; இருந்தாலும் நகை வாங்க காத்திருப்போர் மகிழ்ச்சி!