அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் 6,000 கோடி ரூபாய் முதலீடு: ஒன்பிளஸ் நிறுவனம் திட்டம்!
இந்தியாவில் தயாரிப்பு கண்டுபிடிப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்காக 'புராஜெக்ட் ஸ்டார்லைட்' திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.2,000 கோடி முதலீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ், அடுத்த மூன்று ஆண்டுகளில் தனது இந்திய வர்த்தகத்தில் ரூ.6,000 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தயாரிப்பு கண்டுபிடிப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்காக 'ப்ராஜெக்ட் ஸ்டார்லைட்' திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.2,000 கோடி முதலீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
"ஒன்பிளஸ் இந்தியாவில் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் புதுமைகளை விரைவுப்படுத்துவதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ. 2,000 கோடி வருடாந்திர முதலீட்டை வியாழன் அன்று அறிவித்தது.
"இந்த முதலீட்டுத் திட்டம் ப்ராஜெக்ட் ஸ்டார்லைட் என்ற பெயரில் தொடங்கப்பட்டது," என்று நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
ப்ரோஜெக்ட் ஸ்டார்லைட் முதலீடு மூன்று முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. அவையாவன: இன்னும் நீடித்த சாதனங்களை உருவாக்குதல், தனித்துவமான வாடிக்கையாளர் சேவை மற்றும் இந்தியாவுக்கென்றே பிரத்யேகமான அம்சங்களை மேம்படுத்துதல் ஆகியவையாகும்.
"ப்ராஜெக்ட் ஸ்டார்லைட் என்பது எங்கள் பயனர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க மேற்பரப்பிற்கும் அப்பால் செல்வதற்கான எங்கள் அர்ப்பணிப்பின் நிரூபணமாகும். உலகளாவிய ரீதியில் இந்தியா எங்களுக்கு முதன்மையான முன்னுரிமையாக உள்ளது, மேலும், எங்கள் இந்திய சமூகத்தின் நம்பிக்கையையும் நேயத்தையும் பெற நாங்கள் தொடர்ந்து பாடுபடுகிறோம்," என்று OnePlus India, CEO, ராபின் லியூ கூறினார்.