Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

2020ம் ஆண்டின் 11 சிறந்த 'டேட்டிங் ஆப்’ஸ் ஒரு பார்வை!

இந்த பொது முடக்கத்தின் போது, சரியான டேட்டிங் செயலியை தேர்வு செய்வதற்காக பிளேஸ்டோரில் உள்ள பல்வேறு டேட்டிங் செயலிகளை பரிசீலித்தேன். மற்றவர்களுக்கு உதவும் என்பதற்காக என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

2020ம் ஆண்டின் 11 சிறந்த 'டேட்டிங் ஆப்’ஸ் ஒரு பார்வை!

Monday September 28, 2020 , 4 min Read

இந்தியாவில் ஆன்லைன் டேட்டிங் போக்கு மாறிக்கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக, இப்போது பெரும்பாலானோர் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலையில், ஆன்லைனில் பணியாற்றி, ஆன்லைன் கற்றலில் ஈடுபட்டிருக்கும் நிலையில், நண்பர்களை ஆன்லைனில் சந்திக்கும் நிலையில், ஆன்லைன் டேட்டிங்கும் பொருத்தமானது தானே!


இந்த காலகட்டத்தை படிப்பது மற்றும் நெட்பிளிக்சில் படம் பார்ப்பது என்று மட்டும் கழிப்பது சரியல்ல. மனம் விட்டு பேச யாரேனும் இருந்தால் நல்லது, அதிலும் குறிப்பாக நீங்கள் வீட்டிற்கு வெளியே, தனிமையில் வசித்தால் இது இன்னும் பொருந்தும். வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படாத சூழலில், தனிமையில் இருப்பது என்பது மன அழுத்தத்தை உண்டாக்கலாம். பலரும் வீட்டிலேயே பல மணி நேரம் இருப்பதால், மனச்சோர்வு உள்ளிட்ட பாதிப்பு ஏறபடலாம்.


ஆக, நம்மை நாமே உற்சகமாக்கிக் கொள்ள என்ன செய்யலாம். பேசலாம். அதை செய்து கொண்டிருக்கிறோம். பழைய நண்பர்கள், விளையாட்டு தோழர்கள் என எல்லோரையும் அழைத்து பேசியிருக்கிறோம். தினமும் பெற்றோர்களை பல முறை அழைத்து அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்கிறோம்.


இருப்பினும், வெளியே சென்று, மனிதர்களை சந்தித்து பேச முடியாததால் சில நேரங்களில் தனிமையை உணர்கிறேன். என் தோழி ஒருவர், டேட்டிங் செயலிகளை முயன்று பார்க்க பரிந்துரைத்தார். முதலில் நான் இதைக்கேட்டு சிரித்தேன் என்றாலும், வெளியே செல்லாமல் புதியவர்களை சந்தித்துப்பேச இது நல்ல வழி என்று தோழி கூறினார். 

செயலிகள்

சிறிது யோசித்துவிட்டு பிளேஸ்டோரில் கீழ்கண்ட செயலிகளை முயன்று பார்த்தேன். உங்களுக்கு ஏற்ற செயலியை தேர்வு செய்ய, இவற்றின் விமர்சனங்களை படியுங்கள்:

1. ஓகே கியூபிடு -OkCupid ( (2010 முதல் உள்ளது)

ஒரு சில வாரங்கள் இந்த செயலியை பயன்படுத்தினேன். எளிமையான ஆனால் நீண்ட லாகின் செயல்முறையை கொண்டுள்ளது. கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விரும்பினேன்.

  • பதில்களுக்கு ஏற்ப பரிந்துரைகள் அமைகின்றன.
  • எளிமையான மேசேஜிங் வசதி
  • இணைய டேட்டிங் வசதி இருக்கிறது.
  • உள்ளூர் டேட்டிங் வசதி இருக்கிறது. உங்கள் அருகாமையில் உள்ளவர்களை கண்டறியலாம்.

கட்டணச்சேவை: மேம்பட்ட தேடல் வசதி, விளம்பரம் இல்லை, யாரையும் லைக் செய்யாமல் உங்களை லைக் செய்பவரை அறியலாம்.

OKCupid டவுன்லோட் செய்ய:

2.  டிண்டர்- Tinder ( 2013 முதல் உள்ளது)

இந்த ஆப் பல காலமாக தெரியும். லாகின் செய்ய குறைந்த பட்ச தகவல்களை மட்டும் கேட்கிறது. அதன் பிறகு செயலியை பயன்படுத்தத் துவங்கலாம். எண்ணற்ற அம்சங்கள் இருப்பது குழப்பமாக இருக்கலாம்.

  • உங்கள் அறிமுக சித்திரத்தை மேம்படுத்திக்கொள்ளலாம்.
  • தனித்து தெரிய சூப்பர் லைக் வசதி
  • ஹூக் அப் வகை உறவுக்கு ஏற்றது, அனால் தீவிர உறவுக்கான வாய்ப்பு குறைவு,
  • போலியான மற்றும் மென்பொருள்கள் (பாட்) உருவாக்கிய அறிமுக சித்திரங்கள் சிலவற்றை பார்த்தேன். இத்தகைய தவறான பயன்பாடு மற்றவர்கள் அனுபவத்தை பாதிக்கலாம்.

கட்டணச்சேவை: டிண்டர் பிளஸ், டிண்டர் கோல்ட்

டிண்டர் பாஸ்போர்ட்: உலகில் எந்த இடத்தில் இருப்பவருடனும் சாட் செய்யலாம்.  

Tinder டவுன்லோடு செய்ய

3. ஹேப்பன் - Happn  (2014 முதல் உள்ளது)

உங்கள் அருகாமையில் உள்ளவர்கள் மீது ஆர்வம் இருந்தால் இந்த செயலியை அவசியம் பயன்படுத்தி பார்க்க வேண்டும். ஆனால், நான் முயற்சி செய்த நபர் இந்த செயலியை பயன்படுத்தவில்லை.

  • உங்கள் பகுதியில் உள்ளவவர்களின் அறிமுக சித்திரத்தை இந்த செயலி காண்பிக்கிறது.
  • ஒருவரின் அறிமுக பகுதியை நீங்கள் லைக் செய்யலாம். பதிலுக்கு லைக் செய்தால் மட்டுமே இது அவர்களுக்குத்தெரியும்.
  • மேசேஜ் அனுப்பினால் அவர்களுக்கு நோட்டிபிகேஷன் செல்லும்.

கட்டணச்சேவை: உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற அறிமுகங்கள் காண்பதற்கான மேம்பட்ட வடிகட்டல் வசதி.

Happn டவுன்லோடு செய்ய

4. டான்டான் Tantan (2014 முதல் உள்ளது)

டிண்டர் போன்ற இடைமுகம் கொண்டுள்ளது Tantan. இதன் பிரைவசி அம்சம் எனக்கு பிடித்திருக்கிறது. நான் தொடர்பு பட்டியலை பகிர்ந்ததும் அவர்கள் என் அறிமுக பகுதியை பார்க்க முடியாது.

  • முக்கிய அம்சம்: பொருத்தமானவர்களை தேர்வு செய்து கொள்ள சுவாரஸ்யமான கேள்விகளை கேட்கும் வாய்ப்பு.
  • உங்கள் பொருத்தத்தின், வாழ்க்கை தருணங்களை பின் தொடரலாம்.
  • பல அம்சங்கள் இருந்தாலும், உங்களுக்கு ஏற்றவை சில மட்டுமே.

கட்டணச்சேவை: வரம்பில்லா லைக், இருப்பிடம் மாற்று வசதி.

5. குவேக் குவேக்- Quack Quack (2014 முதல் உள்ளது)

இரண்டு அடுக்கு சரி பார்த்தலை பின்பற்றுகின்றனர். உங்கள் போன் எண் மற்றும் ஃபேஸ்புக் அறிமுகம்.

  • இந்த தளத்தில், உண்மையான அறிமுக சித்திரங்களை காணலாம்.
  • பொருத்தமானவர்களுடன் சேட் செய்ய கட்டணம் செலுத்த வேண்டும்.

Quack Quack டவுன்லோடு செய்ய.

6. வூ - Woo (2014 முதல் உள்ளது)

ஆன்லைன் டேட்டிங் உலகில் பெண்கள் பாதுகாப்பாகவும், வசதியாகும் உணரும் வகையில் அவர்களை முதலில் முன்னிறுத்தும் செயலி இது.

  • வூ போன் அம்சம்: பெண்களுக்கு மட்டுமான வசதி. தங்கள் எண் அல்லது தனிப்பட்ட விவரங்களை அளிக்காமல், செயலியில் இருந்து பெண்கள் போனில் அழைக்கலாம்.
  • வூ ரகசியம்: பெண்களின் தனிப்பட்ட தகவல்கள் ( பெயர், இருப்பிடம்) ரகசியமாகவே இருக்கும். 
  • வூ சேம் : இண்டிரெஸ்ட் டேக்ஸ் மூலம் ஒரே ஆர்வம் கொண்டவர்களை கண்டறியலாம்.
  • வூ ஆன்சர்: சுவாரஸ்ய கேள்விகளுக்கு வேடிக்கை பதில் அளித்து, வேகமாக கண்டறியப்படலாம்.
  • வூ பிளஸ்: கூடுதல் அம்சங்கள் கொண்ட கட்டணச்சேவை.

Woo டவுன்லோடு செய்ய

7. ட்ருலி மேட்லி- TrulyMadly (2014 முதல் உள்ளது)

  • ரகசிய வழி: நீங்கள் லைக் செய்தவுடன் மட்டும் சேட் செய்யலாம். இதன் பொருள், உங்கள் அறிமுக சித்திரம் இருக்கும் ஆனால் கூடுதல் விவரங்கள் தெரியாது.
  • நம்பிகை மதிப்பெண்: ஃபேஸ்புக், லிங்க்டுஇன், போன் எண் உள்ளிட்ட பல தரவுகளை சரிப்பார்த்து நம்பிக்கை மதிப்பெண் அளிக்கப்படுகிறது.
  • பரிந்துரை: நம்பிகை மதிப்பெண்ணை அதிகரிக்க, நண்பர்கள் பரிந்துரையை கோரலாம்.
  • ஸ்பார்க்ஸ்: பதிலுக்கு லைக் செய்யப்பட காத்திருக்காமல் யாருடன் வேண்டுனாமாலும் சேட் செய்யலாம்.
  • பாதுகாப்பு: அறிமுக சித்திரங்களை யாரும் ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது.

கட்டணச்சேவை:  பொருத்தம் காண்பதற்கான வினாடி வினா உள்ளிட்ட கூடுதல் அம்சங்கள்

TrulyMadly டவுன்லோடு செய்ய.

8. காபி மீட்ஸ் பேகல் -  Coffee Meets Bagel (2015 முதல்)

உண்மையான டேட்டை கண்டறிய ஒரு நாளுக்கு குறிப்பிட்ட பொருத்தங்கள் மட்டுமே.

  • ஒவ்வொரு பகலிலும் தேர்வு செய்த பொருத்தங்கள். – ஒருவருடன் உரையாடி அறிந்து கொள்ள 24 மணி நேரம்.
  • உங்கள் உரையாடல் எட்டு நாட்களுக்குப்பின் மறைந்து விடும்.
  • பல்வேறு வகைகளில் வடிகட்டும் ஸ்மார்ட் பில்டர்

Coffee Meets Bagel டவுன்லோடு செய்ய.

 9. ஐசல்- Aisle (2015 முதல் உள்ளது)

இந்திய தனியர்களுக்கானது.

  • போலி உறுப்பினர்களை நீக்க, நீண்ட சரி பார்க்கும் செயல்முறை.
  • சரி பார்க்கும் காலம்- 1-2 நாட்கள்

இதில் சில தொழிநுட்ப குறைகளை எதிர்கொண்டேன்.

கட்டணச்சேவை- ஸ்மார்ட் பில்டர்.

Aisle டவுன்லோடு செய்ய.

10. பம்பில்- Bumble (2018 முதல் உள்ளது)

டேட்டிங், சமூக உறவு மற்றும் வலைப்பின்னலை அளிக்கிறது,

  • பெண்கள் தான் முதல் நகர்வை மேற்கொள்ள வேண்டும்.
  • முன்னுரிமை அடிப்படையில் பொருத்தம்.
  • உண்மையான அறிமுக சித்திரங்கள்

கட்டணச்சேவை: அதிக பொருத்தம்

Bumble டவுன்லோடி செய்ய

11. கோகாகா- GoGaga( 2018 முதல் உள்ளது)

ஃபேஸ்புக் மூலம் இரு முறை லாகின்.

  • போலி பக்கம் மூலம் நுழைந்தால், எந்த உண்மையான பொருத்தமும் இருக்காது.
  • உங்கள் ஃபேஸ்புக் நட்பு வட்டம் அடிப்படையில் அறிமுக சித்திரம்
  • ஃபேஸ்புக் நண்பர்கள் அடிப்படையில் பொருத்தங்கள்.
  • யாருடனும் உரையாடும் முன் நண்பர்களின் சரி பார்த்தை கோரலாம். பொலி உறுப்பினர்களை களைய உதவும் அம்சம் இது.
  • மேட்ச்மேக்கர் மோடு:  தனியாக இருக்கும் நண்பர்களை இணைத்து வைக்கலாம்.
  • ஸ்பின் ஏ வீல்- ஏ.ஐ சார்ந்த சேவை.

கட்டணச்சேவை இல்லை

GoGaga டவுன்லோடு செய்ய.


கட்டுரையாளர்: சம்ப்ரிதி ராய் | தமிழில்-சைபர்சிம்மன்


(பொறுப்பு துறப்பு : யுவர்ஸ்டோரியின் மை ஸ்டோர் பகுதியில் பகிரப்பட்ட பயனர் உருவாக்கிய கட்டுரை இது. இதில் உள்ள கருத்துகள் அதை எழுதியவருடையது, யுவர்ஸ்டோரியின் பார்வை அல்ல.)