Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

'தீபாவளி பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி' - கட்டுப்பாடுகள் என்னென்ன?

தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் என மாநில சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது.

'தீபாவளி பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி' - கட்டுப்பாடுகள் என்னென்ன?

Wednesday November 01, 2023 , 2 min Read

தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் என மாநில சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது.

தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு பலகாரங்கள், புதுபடங்களின் ரிலீஸ் என எல்லாம் இருந்தாலும், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நம் அனைவரது நினைவுக்கும் வருவது பட்டாசுகள் தான். தீபாவளிக்கு முதல் நாள் இரவில் இருந்தே பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதற்கு ஏற்றார் ஆண்டுதோறும் விதவிதமான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துகொண்டிருக்கின்றன.

diwali crackers

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாள் முழுவதும் வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மாசு பெரும் அளவில் பாதிக்கப்படுகிறது. இதனால் உச்சநீதிமன்றம் பட்டாசு வெடிப்பதற்கு என சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, மாநில அரசுகளும் தங்களது மாநிலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுபாடு விதித்து வருகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை வருகிற 12ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. வழக்கமாக இந்த ஆண்டும் தமிழ்நாடு அரசு நேரக்கட்டுப்பாட்டை அறிவிக்குமா? அல்லது தளர்வுகள் ஏதாவது இருக்குமா? என மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே மாநில சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தீபாவளி அன்று காற்றின் தரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அனுமதி அளித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீவிபத்துகளால் காயமடைவோருக்கு சிகிச்சை அளித்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தீபாவளிக்கு விடுப்பு எடுக்கக் கூடாது என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகள் சரவெடி போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றும், மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், வழிபாட்டுத் தலங்கள், குடிசைப் பகுதிகள் போன்ற இடங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் ஆண்டுதோறும் அறிவுறுதப்பட்டு வருகிறது.

2018ம் ஆண்டு முதல் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதால், இந்த ஆண்டாவது பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.