விபத்தில் முறிந்தது எலும்பு மட்டுமே... நம்பிக்கை அல்ல!

நீண்ட தூர பைக் பயணங்களில் ஆர்வம் கொண்ட பூஜா பஜாஜ் பைக் விபத்து நேர்ந்த பிறகு மன உறுதியுடன் விரைவாக மீண்டு, மீண்டும் பைக் ஓட்டத் துவங்கிய கதை!

10th Jan 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

வலிமை என்பது ஒருவரின் உடல் சார்ந்தது அல்ல. அது மனதின் உறுதித்தன்மையைக் குறிக்கிறது. இதற்குச் சரியான உதாரணம் பூஜா பஜாஜ். இவருக்கு பைக்கில் பயணம் செய்வதில் ஆர்வம் அதிகம்.


இவர் கடந்த ஜூன் மாதம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஸ்பிதி பள்ளத்தாக்கிற்கு குழுவாக பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பைக் பயணம் பன்னிரண்டு நாட்கள் திட்டமிடப்பட்டிருந்தது. பயணத்தின் பத்தாம் நாளில் பூஜா பயங்கர விபத்தில் சிக்கினார்.

1

இந்த விபத்தில் இவரது கழுத்தில் உள்ள காறை எலும்பின் (Clavicle) பல்வேறு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்த எலும்பின் ஒரு துண்டு மார்புப் பகுதியில் இடம் பெயர்ந்திருந்தது. இதனால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்துள்ளது. விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகில் மருத்துவமனை ஏதும் இல்லை. ஒவ்வொரு மணி நேரமும் கடந்து செல்கையில் பூஜாவின்ன் நிலைமை மேலும் மோசமாகிக் கொண்டே போனது.


விபத்து நடந்த இடத்திற்கு அருகாமையில் இருக்கும் மருத்துவமனை சண்டிகரில் இருந்தது. இது 48 மணி நேரப் பயணம். சாலைகள் மோசமாக இருந்தது. ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டிருந்தன. வானிலையும் மோசமாக இருந்தது. இதுபோன்ற காரணங்களால் மருத்துவமனையைச் சென்றடைய காலதாமதமானது.


பூஜா கடுமையான வலியில் துடித்துள்ளார். ஓரிரு நண்பர்களின் உதவியுடன் ஸ்பிதி பள்ளத்தாக்கில் இருந்து முதலில் சண்டிகருக்கும் பின்னர் அங்கிருந்து பெங்களூருவிற்கும் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையைச் சென்றடைய தாமதமானதால் அவரது நிலைமை மேலும் மோசமானது. பெங்களூருவில் அவருக்கு ஆறு நாட்களுக்குப் பிறகே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


கடுமையான வலியுடனும் வேதனையுடனும் அவதிப்பட்டுள்ளார் பூஜா. மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு வெற்றகரமாக முடிவடைந்தது.

”விபத்து நடந்த அனுபவம் மோசமாக இருந்தது. மோட்டார் சாகச முயற்சிகளை நிறுத்திக் கொள்ளுமாறு நண்பர்களும் உறவினர்களும் அறிவுறுத்தினர். ஆனால் அறுவை சிகிச்சை நடைபெற்ற அறைக்குள் செல்லும்போதுகூட விரைவாக குணமடைந்து மீண்டும் பைக் ஓட்டவேண்டும் என்றே எண்ணினேன்,” என்கிறார் பூஜா.

சற்றும் மனம் தளராத பூஜா அறுவை சிகிச்சை முடிந்த 26 நாட்களில் மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின்படி மீண்டும் பைக் ஓட்டத் தொடங்கியுள்ளார்.


இன்று அவரது தோள்பட்டையில் டைடானியம் தகடு, பல்வேறு ஸ்க்ரூ போன்றவை பொருத்தப்பட்டுள்ள நிலையில் மிகுந்தத் துணிச்சலுடனும் மன உறுதியுடன் பைக் ஓட்டுகிறார்.


ஒருவரது முயற்சியில் சிறிய பின்னடைவு ஏற்பட்டாலும் மனம் தளராமல் உறுதியுடன் செயல்பட்டால் வெற்றி வசப்படும் என்பதற்கு பூஜா பஜாஜ் போன்றோர் மிகச்சிறந்த உதாரணம்.


கட்டுரையாளர்: ஸ்ரீவித்யா

How has the coronavirus outbreak disrupted your life? And how are you dealing with it? Write to us or send us a video with subject line 'Coronavirus Disruption' to editorial@yourstory.com

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India