GenZ ஊழியர்கள் அலுவலகத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள்? - அறிக்கையில் சுவாரசிய தகவல்!
GenAI வேகமாக Gen Z ஊழியர்களின் பணியிட பிரதானமாக மாறி வருகிறது, கிட்டத்தட்ட நான்கு ஊழியர்களில் மூன்று பேர் ஏற்கனவே தங்கள் பணிகளில் அதை இணைத்துக்கொண்டுள்ளனர்.
Gen Z ஊழியர்கள் என்று தற்காலத்தில் தொழில்நுட்ப உலகில் ஸ்டைலாக அழைக்கப்படும் தற்கால புதிய தலைமுறை பணியாளர்கள் பணியின் கடினப்பாடுகளிலிருந்து விடுபட வழிகாட்டியாக மேலாளரை அணுகாமல் ஜெனரேட்டிவ் செயற்கை அறிவை நாடுகிறார்கள் என்று அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
GenAI வேகமாக Gen Z ஊழியர்களின் பணியிட பிரதானமாக மாறி வருகிறது, கிட்டத்தட்ட நான்கு ஊழியர்களில் மூன்று பேர் ஏற்கனவே தங்கள் பணிகளில் அதை இணைத்துக் கொண்டுள்ளனர்.
காரணம் ஜெனரேட்டிவ் செயற்கை அறிவு அணுகக்கூடியதாக உள்ளது, அதனிடம் பாரபட்சமில்லை என்று இந்த புதிய தலைமுறைப் பணியாளர்கள் கருதுகிறார்கள், என்கிறது இந்த ஆய்வறிக்கை.
Gen Z இன் 56% பேர், பணியிடத்தில் கடினமான பணியை எதிர்கொள்ளும் போது, GenAI-ஐ நம்புகின்றனரே தவிர மேலாளரை அணுகுவதில்லை என்கிறது இந்த அறிக்கை. ஜென் ஏஐ எல்லா நேரங்களிலும் கிடைக்கிறது என்று கருத்துக் கணிப்பில் 66% பேர் தெரிவிக்க, செயற்கை அறிவு பாரபட்சமற்ற ஆலோசனை வழங்குவதாக 56% பேர் தெரிவிக்க, சென்சிட்டிவ் ஆன விஷயங்களை உரையாடும் போது அந்தரங்கத்தைப் பாதுகாக்கிறது என்று 49% பேரும் கருத்து தெரிவித்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“The GenAI Gap: GenZ & the Modern Workplace” என்ற தலைப்பில் அப்கிரேட் என்டெர்பிரைசஸ் இந்தக் கருத்துக் கணிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது பல்வேறு பின்னணியில் உள்ள 3,512 ஜெனரேஷன் இசட் வல்லுநர்கள் மற்றும் 1,128 மனிதவளத் தலைவர்களின் நுண்ணோக்கின் அடிப்படையில் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
ஜென் இசட் என்று அழைக்கப்படும் 90கே கிட்ஸ், 2கே கிட்ஸ் ஆன இப்போதைய பணியாளர்களில் நான்கில் மூன்று பேர் செயற்கை நுண்ணறிவையே நாடுகின்றனர். இது புதிய சாத்தியங்களை வழங்குவதாக 77% பேர் தெரிவித்தனர்.
இருப்பினும், இவர்கள் GenAI ஐ தேர்ந்தெடுத்த முறையில் பயன்படுத்த முனைகின்றனர். பெரும்பாலும் அவற்றின் பயன்பாட்டை விவேகமாக வைத்திருக்கின்றனர். நான்கில் ஒரு பகுதியினர் தங்கள் GenAI பயன்பாட்டை பயனடையக்கூடிய சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். மற்ற கால்பகுதியினர் தங்களைப் பற்றி கருத்துக்களைத் தவிர்ப்பதற்காக அதை மறைத்து வைத்திருக்கிறார்கள்.
GenZ ஊழியர்களில் 54% பேர் தற்போதுள்ள வழிகாட்டுதல்கள் போதுமானதாக இல்லை என்று கருதுகின்றனர், மேலும், 52% பேர் பயிற்சி புதுப்பிப்புகள் குறித்து உறுதியாக தெரியவில்லை என்கின்றனர்.
இப்போதுள்ள பணிச்சூழல் போக்குகள் குறித்து கருத்து தெரிவித்த upGrad Enterprise-ன் CEO ஸ்ரீகாந்த் ஐயங்கார்,
“இந்த அறிக்கையை வடிவமைப்பதில் எங்கள் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தியுள்ளோம், தற்போதைய தொழில்நுட்பப் பரப்பில் ஆழமான பார்வையை வழங்குகிறோம் - GenZ பணியாளர்கள் AIஐ எவ்வாறு தழுவுகிறார்கள் என்பதை மட்டும் எடுத்துக்காட்டுகிறது. நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளை நிறுவுதல் மற்றும் இலக்கு பயிற்சியை செயல்படுத்துவதற்கான அவசரத் தேவையையும் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.“