ஓயோ நிறுவனம் திவாலாகிறதா? இன்சால்வென்சி நடவடிக்கை குறித்த விளக்கம் இதோ!

By YS TEAM TAMIL|7th Apr 2021
ஒயோ குழுமத்தின் துணை நிறுவனமான ஒயோ ஹோட்டல்ஸ் அண்ட் ஹோம்ஸ் நிறுவனத்திற்கு எதிராக இன்சால்வென்சி செயல்முறைக்கான மனுவை தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து ஒயோ முறையீடு செய்திருப்பது அதன் பிரத்யேக அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

Oyo குழுமத்தின் துணை நிறுவனமான ஒயோ ஹோட்டல்ஸ் அன்ட் ஹோம்ஸ் நிறுவனத்திற்கு (OHHPL), எதிராக ராகேஷ் யாதவ் எனும் கடன் கொடுத்தவர் அளித்த மனுவை, வர்த்தக இன்சால்வென்சி செயல்முறை நடவடிக்கையை தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் (NCLT) ஏற்றுக்கொண்டுள்ளதாக யுவர்ஸ்டோரிக்கு தெரிய வந்துள்ளது.


யுவர் ஸ்டோரியுடன் பகிர்ந்து கொண்டுள்ள பிரத்யேக அறிக்கையில், ரூ.16 லட்சம் தொகைக்காக, துணை நிறுவனமான OHHPL மீதான என்.சி.எல்.டி உத்தரவுக்கு எதிராக, தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்திருப்பதாக ஒயோ குழுமம் தெரிவித்துள்ளது.

பிரச்சனைக்குறிய ரூ.16 லட்சம் தொகையை, கோரியவருக்கு, பிரச்சனை எழுப்பப்பட்ட அமைப்பின் கீழ் (OHHPL அல்லாத வேறு அமைப்பு),வழங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

"ஒப்பந்த சர்ச்சை தொடர்பான ரூ.16 லட்சம் பிரச்சனைக்காக ஒயோ துணை நிறுவனம் OHHPL மீது, மேதகு என்.சி.எல்.டி மனுவை ஏற்றுக்கொண்டிருப்பதை கேள்விபட்டு வியப்பை அளிக்கிறது. இந்த பிரச்சனை துணை நிறுவனத்துடன் தொடர்புடையது கூட அல்ல. நாங்கள் முறையீடு செய்திருக்கிறோம். இந்த பிரச்சனை நீதிமன்றத்தில் இருப்பதால் மேற்கொண்டு எந்தத் தகவலும் தெரிவிக்க முடியாத நிலையில் இருக்கிறோம், என குழும செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Getting to know Ritesh Agarwal, Founder of OYO Hotels & Homes

நொடித்துப்போவது மற்றும் திவால் சட்டம் 2016 (IBC) கீழ், செயல்முறை கடன் கொடுத்தவர் அல்லது நிதி கடன்காரர், நிலுவைத்தொகை பிரச்சனை உள்ள என்.சி.எல்.டி முன் ஐபிசி கீழ் சிஐஆர்பி செயல்முறையை துவக்குவதற்காக மனு தாக்கல் செய்து வர்த்தக இன்சால்வன்சி செயல்முறையை (CIRP) துவக்கலாம். என்.சி.எல்.டி., இந்த மனுவை பரிசீலித்து நிலுவையில் இருந்தால், அதை ஏற்றுக்கொள்கிறது. அதன் பிறகு இன்சால்வென்சி செயல்முறை துவக்கப்படுகிறது.


இன்சால்வென்சி செயல்முறைக்கான, தற்காலிக தொழில்முறை தீர்வாளராக (ஆர்பி), Keyur J Shah & Associates ல் அங்கம் வகிக்கும் கேயூர் ஜகதீஷ்பாய் ஷா நியமிக்கப்பட்டுள்ளார். ஆபி, சொத்துகள் உள்ளிட்ட ஒயோ துணை நிறுவனத்தின்  OHHPL கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டு, அனைத்து கடன்தாரர்களிடம் இருந்தும் கோரிக்கையை வரவேற்று, கடன்தாரர்கள் குழுவை (CoC). அமைப்பார்.


ஒயோ ஹோட்டல்ஸ் அண்ட் ஹோம்ஸ் நிறுவனத்தின் கடன் தாரர்கள் ஏப்ரல் 15ம் தேதிக்குள் தங்கள் விவரங்களை சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த செயல்முறை செப்டம்பர் 27ம் தேதி முடித்து வைக்கப்படும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.


இதனை உறுதி படுத்தும் விதமாக ஒயோ நிறுவன நிறுவனர் ரிதேஷ் அகர்வால்,

“ஓயோ நிறுவனம் திவாலாகி உள்ளதாக பரவும் தகவலில் உண்மை இல்லை என்றும் இது தவறான தகவல்,” என்றும் பதிவிட்டுள்ளார்.

ஒயோ நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு சிக்கலான ஆண்டாக அமைந்தது. கொரோனா பாதிப்பு சூழலுக்கு முன்பாகவே, நிறுவனம் பெருமளவு ஆட்குறைப்பு செய்தது. மேலும் வருமான வரி சோதனைக்கும் உள்ளானது.  

கொரோனா பாதிப்புக்கு பின், நிறுவனம் ஊழியர் சம்பளக் குறைப்பு, பணி நிறுத்தம், பணி விலகல் உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொண்டது. எனுனிம், அண்மையில் நிறுவனம் பிரச்சனைகளில் இருந்து மீண்டு விட்டதாகவும், பொது பங்கு வெளியிட்டிற்கு தயாராவதாகவும் தெரிவித்தது.

அண்மையில் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஒயோ குழும நிறுவனர் மற்றும் சி.இ.ஓ, நிறுவனம் நிகர லாபத்தில் 100 சதவீத மீட்சியை எதிர்கொண்டிருப்பதாகவும், இந்தியாவில் EBIDTA லாபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

ஒயோ

மேலும், நிறுவனம் வருவாய் இழப்பை ஈடு செய்ய தொழில்நுட்பச் சேவைகளை வெண்டர்களுக்கு வழங்கத்துவங்கியுள்ளது. ஒயோ செக்யூர் எனும் பண பரிவர்த்தனை சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின், இந்த ஆண்டு மார்ச் வரை ஐபிசி செயல்முறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தீர்ப்பாயங்கள் மெய்நிகர் விசாரணையை நடத்தி வந்தன.


ஆங்கில கட்டுரையாளர்கள் சிந்து காஷ்யப்- டென்சின் பேமா