2021ல் 9,000 புதிய வேலைவாய்ப்பு - EY நிறுவனம் அறிவிப்பு!
Ernst & young நிறுவனம் 2021ம் ஆண்டில் இந்தியாவில் 9 ஆயிரம் புதிய பணியாளர்களை சேர்க்கப் போவதாக அறிவித்துள்ளது.
உலகளாவிய தொழில்முறை சேவை அமைப்பான Ernst & Young (EY) நிறுவனம் 2021ம் ஆண்டில் இந்தியாவில் 9 ஆயிரம் புதிய ஊழியர்களை சேர்க்கப் போவதாக அறிவித்துள்ளது.
உலகளாவிய விநியோக மையங்கள் உட்பட அனைத்து உறுப்பு நிறுவனங்களிலும் பல்வேறு தொழில்நுட்பப் பிரிவுகளில் பணியமர்த்தப்பட உள்ளனர் என EY தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த பணியமர்த்தல்கள் STEM பின்னணியிலிருந்தும் (STEM என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய பகுதிகளை ஒருங்கிணைக்கும் கற்றல் அணுகுமுறை), செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், இணைய பாதுகாப்பு, பகுப்பாய்வு மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பணிசேர்க்கையான நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"டிஜிட்டல் தளத்துக்கான வேகம் பல்வேறு மடங்கு அதிகரித்து வருவதால், வளர்ந்து வரும் தொழில்நுட்பத் திறன்களை வலுப்படுத்தி வருகிறோம். மேலும் வரும் ஆண்டில் எங்கள் பணியமர்த்தல் முயற்சிகளை கணிசமாக தீவிரப்படுத்துகிறோம். தொழில்நுட்பம், தரவு (DATA) ஆகியவற்றில் தைரியமாக முதலீடு செய்கிறோம். அதேநேரத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறோம்," என்று EY இந்தியாவின் பார்ட்னர் மற்றும் ஆலோசனை பயிற்சி தலைவரான ரோஹன் சச்ச்தேவ் கூறினார்.
இந்தியாவில் உள்ள அனைத்து உறுப்பு நிறுவனங்களிலும் 50,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்களில் 36 சதவீதம் பேர் STEM பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்றும் EY நிறுவனம் தெரிவித்துள்ளது.
"இன்று, எங்கள் வாடிக்கையாளர்கள், அரசு மற்றும் தனியார் வணிகங்களில், தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தை மேற்கொள்கின்றனர், இந்த பயணத்தில் நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிக்கிறோம்,” என்று சச்ச்தேவ் தெரிவித்துள்ளார்.
EY இந்தியாவின் பார்ட்னர் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைத் தலைவர் மகேஷ் மகிஜா கூறுகையில்,
இந்தியாவில் EY புதிய டிஜிட்டல் தனியுரிமக் கருவிகள் மற்றும் தீர்வுகளின் பரந்த அளவிலான வளர்ச்சியை உருவாக்கி வருகிறது என்றார்.
முன்னதாக நவம்பர் 2020 இல், EY இந்தியா, மேம்பாட்டு மற்றும் மறுசீரமைப்புத்
தளமான ஸ்பாட்மென்டர் டெக்னாலஜிஸை அறிவிக்கப்படாத தொகைக்கு வாங்கியதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தகவல்: பிடிஐ| தொகுப்பு: மலையரசு