Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

தமிழகத்தில் 112 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி!

அப்போலோ, காவேரி, ஃபோர்டிஸ் மலர் உட்பட பல பிரபல மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முழு பட்டியல் உள்ளே...

தமிழகத்தில் 112 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி!

Sunday April 05, 2020 , 2 min Read

கோவிட்-19 நெருக்கடியில், மருத்துவப் பரிசோதனை உபகரணங்கள் குறைவாகத்தான் கிடைக்கின்றன என்பது மிகப் பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கிறது. வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்களுக்கு தான் இந்தியாவில் இப்போது பிரதானமாகப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இருந்தபோதிலும், பத்து லட்சம் பேரில் எத்தனை பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது என்ற மதிப்பீட்டில் இது இன்னும் அதிகரிக்க வேண்டியுள்ளது.


கொரோனா பாதிப்புள்ள நோயாளிகள் பரிசோதனையில் கண்டறிந்தவுடன் அரசு பொது மருத்துவமனைகளில் வைத்து மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். ஆனால் நாளுக்கு நாள் இந்தியாவில் கோவிட் 19 நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் இடப்பற்றக்குறை மற்றும் சிகிச்சை கருவிகள் போதாமை ஏற்பட்டு விடும் என்ற அச்சம் இருந்தது.


அதே போல் தமிழகத்தில் கொரோனா நோய்தொற்றின் பரவல் அதிகரித்து வரும் நிலையில், 112 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொடர்பான சிகிச்சைகள் பெறலாம் என அரசின் சுகாதார நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

hospital

மாநில சுகாதார அமைச்சகம் மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ள பட்டியலில் 26 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 112 தனியார் மருத்துவமனைகள் கோவிட்-19 சிகிச்சை அளிக்க அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதில்,

“கொரோனா தொற்று டெஸ்டில் பாசிடிவ் வந்தவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் மேல் கூறிய 112 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம். சிகிச்சைக்கான செலவுகளை நோயாளிகளே ஏற்றுக் கொள்ளவேண்டும்,” என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும், தேவையான வசதிகளை தயார் நிலையில் வைக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையிலும், மக்கள் பலரும் தாங்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள விரும்புவதாக கூறியதன் அடிப்படையில் தமிழக அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை வழங்கும் அனுமதியை வழங்கியுள்ளது.


அதோடு கோவிட் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தால் அரசு மருத்துவமனைகளில் மட்டும் வைத்து சிகிச்சை மேற்கொள்வது கடினமாகி விடும் என்பதையும் மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட 112 தனியார் மருத்துவமனைகளின் பட்டியல்:


சென்னை:

Fortis Malar, Apollo hospitals, Rela Institute, Prashanth hospital (Velachery), Billroth hospitals (Shenoy Nagar), CSI Kalyani GH, Kavery hospital, Child Trust hospital and Voluntary Health Service (Taramani)


மதுரை:

Rahavendhar hospital, Saravana hospital, Preethi hospital, Devadoss hospital, Lakshmana hospital, Guru hospital,


கோவை:

G.Kuppusamy Naidu hospital, Sri Ramakrishna hospital, KG Hospital, Kongunad hospital, Kovai Medical Center, Karpakam hospital


மற்ற மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனை பட்டியல் கீழே:


list-1
list-2
list-3
list-4



இதனிடையே மருத்துவப் பரிசோதனைத் திறனை மேம்படுத்துவதற்காக அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் - நுண்ணுயிரித் தொழில்நுட்ப ஆய்வு நிலையம் (CSIR-IMTECH)  ஆகியவை இணைந்து கோவிட் - 19 மருத்துவப் பரிசோதனை வசதியை அதிகரித்துள்ளன.


அரசின் அங்கீகாரம் பெற்ற அனைத்து ஆய்வகங்களையும் இதில் ஈடுபடுத்துவது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டுள்ள முயற்சியால், நோய் தாக்குதல் இருக்குமோ என்ற சந்தேகத்துக்குரிய நபர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.