Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

'பணியிடத்தில் பெண்கள் பங்கேற்பில் முன்னேற்றம்' - அவ்தார்-செர்மவுண்ட் ஆய்வில் தகவல்!

இந்தியாவில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் பிரதிநித்துவம் 36.6 சதவீதமாக இருப்பதும், துவக்க நிலையில் 40 சதவீதமாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

'பணியிடத்தில் பெண்கள் பங்கேற்பில் முன்னேற்றம்' - அவ்தார்-செர்மவுண்ட் ஆய்வில் தகவல்!

Saturday September 28, 2024 , 4 min Read

இந்தியாவில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் பிரதிநித்துவம் 36.6 சதவீதமாக இருப்பதும், துவக்க நிலையில் 40 சதவீதமாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வங்கி மற்றும் நிதிச்சேவைகள் துறையில் பெண்கள் 24.5 சதவீதம் நிர்வாக பணிகளில் உள்ளது மற்றும் நுகர்வோர் துறையில் 21.5 சதவீத பெண்கள் தலைமை பதவியில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

பணியிட கலாச்சார ஆலோசனை வழங்கும் முன்னணி நிறுவனமான 'அவ்தார்', Seramount நிறுவனத்துடன் இணைந்து நடத்திய ஆய்வின் அடிப்படையிலான இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நிறுவனங்கள் (BCWI) பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 9வது ஆண்டாக இந்த பட்டியல் வெளியாகிறது.

இந்தியாவில் பணியிட கலாச்சாரம் சார்ந்த ஆய்வாக அமையும் இந்த பட்டியலில், முதல் முறையாக துறை வாரியான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், வளரும் நிறுவனங்கள் எனும் புதிய பிரிவு இடம்பெற்றுள்ளது.

women

கார்ப்பரேட்டில் பெண்கள் பிரதிநிதித்துவம்

  • இந்தியாவில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் பிரதிநித்துவம் 36.6 சதவீதமாக இருப்பதும், துவக்க நிலையில் 40 சதவீதமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
  • தொழில்முறை சேவைகள் துறை அதிக பட்சமாக 46 சதவீத பெண்களை கொண்டுள்ளன.
  • உற்பத்தி துறை 20 சதவீதம் கொண்டுள்ளது.
  • நிர்வாக பணிகளில் பெண்கள் பங்கேற்பு 28.4 சதவீதமாக உள்ளது.

துறை வாரியாக பெண்கள் சதவீதம்

துறைகளை கருத்தில் கொள்ளும் போது, ஐடி துறை அதிகபட்சமாக பெண்களுக்கான பணியிட வாய்ப்பை அளிக்கும் துறையாக விளங்குகிறது.

  • 24% பெண்கள் ஐடி துறையில் பணிபுரிகின்றனர்.
  • வங்கி மற்றும் நிதிச்சேவை துறை 11 % ஆக உள்ளது. மருந்தகம், ஊடகம், விருந்தோம்பல் ஆகிய துறைகளில் குறைவான நிறுவனங்களே பட்டியலில் உள்ளன.
  • வங்கி மற்றும் நிதிச்சேவைகள் துறையில் பெண்கள் 24.5 சதவீதம் நிர்வாக பணிகளில் உள்ளனர்.
  • நுகர்வோர் துறையில் 21.5 சதவீத பெண்கள் தலைமை பதவியில் இருப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய நிறுவனங்களுக்கான பட்டியலும் (MICI), வெளியிடப்பட்டுள்ளது.

"பணியிடத்தில் பெண்கள் பங்கேற்பில், தனித்தன்மையான, முரணான, முக்கிய கட்டத்தில் இருக்கிறோம். பெண் ஊழியர்கள் எண்ணிக்கை அளவில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறோம். வளைந்து கொடுக்கும் தன்மை, பலன்களிலும், முன்னேறியுள்ளோம். ஆனால், தலைமை பணிகளில் பெண்கள் உள்ளிட்ட வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதில் பின் தங்கியிருக்கிறோம். பெண்களுக்கான பணியிட பாதுகாப்பு மேம்பட வலியுறுத்தும் நிலை உள்ளது,” என அவ்தார் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர்.செளந்தர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
Saundarya Rajesh

ஆய்வு செயல்முறை மற்றும் முக்கிய தகவல்கள் வருமாறு:

ஆய்வு செயல்முறை

இந்த ஆண்டுக்கான ஆய்வு பிப்ரவரி மாதம் துவங்கி, ஜூலை மாதம் வரை மேற்கொள்ளப்பட்டது. ஏழு பிரிவுகளில், 300க்கும் மேற்பட்ட கேள்விகள் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பங்கேற்க ஒப்புக்கொண்ட 361 வர்த்தக நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு பிரிவுகளில் கேள்விகளுக்கான பதில்கள் அடிப்படையில் நிறுவனங்கள் மதிப்பிடப்பட்டன.

ஆட்டோமொபைல், ஐடி, ரசாயனம், பெரு நிறுவனங்கள், லாஜிஸ்டிக்ஸ், இ-காமர்ஸ், நிர்வாகம், விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு துறை நிறுவனங்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்தியாவில் குறைந்தபட்சம் 500 உழியர்கள் கொண்ட நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. முதல் முறையாக, 100 முதல் 500 ஊழியர்கள் கொண்ட வளரும் நிறுவனங்கள் பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டது.

ஊழியர்கள் தன்மை, பாதுகாப்பு அம்சம், விடுமுறை, நிறுவன கலாச்சாரம், பணி- வாழ்க்கை சமன், பாலின சமத்துவம் உள்ளிட்ட காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டன. பெண்களுக்கான சிறந்த நிறுவனங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன.

முன்னிலை துறைகள்

இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நிறுவனங்கள் கொண்ட துறைகளில்,  ஐடி துறை 24 சதவீதத்துடன் முன்னிலை அளிப்பது தெரிய வந்துள்ளது.

முதல் ஐந்து இடம் பிடித்த துறைகள் வருமாறு:

  • ஐ.டி – 24 %
  • வங்கி, நிதிச்சேவை, காப்பீடு- 11 %
  • உற்பத்தி - 9%
  • குலோபல் கேபபிலிட்டி மையங்கள்- 9%
  • ஐ.இ.டி.எஸ்- 8 %
  • தொழில்முறை சேவைகள், நுகர்வோர் துறை, மருந்தக துறை தலா 5 % பெற்றுள்ளன.
  • விருந்தோம்பல், பயன்பாடுகள், ரியல் எஸ்டேட், சில்லறை விற்பனை, பெரு நிறுவனங்கள் ஆகிய துறை நிறுவனங்கள் ஒரு சதவீதம் பெற்றுள்ளன.

நடுத்தர நிறுவனங்கள்

பெண்களுக்கான சிறந்த நிறுவனங்கள், ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை ஊழியர்கள் கொண்ட நடுத்தர நிறுவனங்களில் 50 சதவீதம் அமைந்துள்ளன.

மற்ற நிறுவன வகைகள் விவரம் வருமாரு:

  • 15 ஆயிரம் வரை ஊழியர்கள் – 20 %
  • 30 ஆயிரம் ஊழியர்களுக்கு மேல்  - 17 %
  • 30 ஆயிரம் ஊழியர்கள் வரை- 7 %
  • ஆயிரம் ஊழியர்கள்- 6 %
  • பன்னாட்டு நிறுவனங்கள் 63 சதவீதமும், இந்திய நிறுவனங்கள் 37 சதவீதமாகவும் உள்ளன.

1991க்கு பிறகு உருவாக்கப்பட்ட நிறுவனங்கள், 33 சதவீதமாகவும், 2000 க்கு பிறகு உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் 31 சதவீதமாகவும் உள்ளன. 2010 க்கு பின் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் 10 சதவீதம் உள்ளன.

2024ல் சிறந்த நிறுவனங்கள் – பெண்கள்

  • மொத்த ஊழியர்கள்: 24,40,121
  • பெண் ஊழியர்கள்:  8,92,527.

பெண்களுக்கு சிறந்த நிறுவனங்கள் – முன்னணி பட்டியல்

  • அசன்சர்
  • ஏஎக்ஸ்.ஏ எக்ஸ்.எல் இந்தியா பிஸ்னஸ்
  • பார்க்லேஸ் இந்தியா
  • கைரன் ஆயில் அண்ட் கேஸ் வேதாந்தா லிட்
  • சிட்டிபாங்க்
  • ஐபிஎம் இந்தியா
  • கேபிஎம்ஜி
  • லியர் கார்ப்
  • டெக் மகிந்திரா

பெண்களுக்கு சிறந்த நிறுவனங்கள்

அப்பாட் இந்தியா, அக்சன்சர் சொல்யூஷன்ஸ், எச்.சி.எல்,டெக், ஆஸ்பயர் சிஸ்டம், இன்போசிஸ், பேயர், பார்லேஸ், ஐபிஎம், எச்.பி, பயோகான், கெல்லாக், எல்.அண்ட் டி உள்ளிட்ட நிறுவனங்கள்.

ஐடி துறையில் ஆஸ்பயர் சிஸ்டம், எச்.சி.எல் டெக், எச்.பி, ஐ.பி.எம், விப்ரோ, யு.எஸ்டி, டெக் மகிந்திரா, இன்போசிஸ், இன்போபீன், மாஸ்டர்கார்டு, குவால்காம் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.

வங்கி, நிதிச்சேவை துறை

ஆக்யூட்டி நாலெட்ஜ் பாட்னர்ஸ்

ஆதிய பிர்லா கேபிடல்

பார்க்லேசஸ்

சிட்டிபாங்க்

கிரிசில் உள்ளிட்டவை.

உற்பத்தி துறை

BASF இந்தியா

பாஷ் இந்தியா

டோ கெமிகல்ஸ்

ஹீரோ மோட்டார்

ஜேஎஸ்.டபிள்யூ ஸ்டீல் உள்ளிட்டவை

தொழில்முறை சேவைகள்

அக்சன்சர் சொல்யூஷன்ஸ்

இண்டிஜின் லிட்

கேபிஎம்ஜி

நீல்சன்

பிடபிள்யூசி

மருந்தகம், சில்லறை விற்பனை, பெரு நிறுவனங்கள், தொலைத்தொடர்பு, ஊடகம், ஆட்டோ, விருந்தோம்பல், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளுக்கான நிறுவனங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

புதிதாக அறிமுகம் ஆகியுள்ள வளரும் நிறுவனங்கள் பட்டியலில் Aurigene Oncology, கிரெடபில், என்விரோகேர் லேப்ஸ், ஜெயண்ட் ஈகிள் குலொபல் கேபபிலிட்டி செண்டர், கிரண்ட்போ பம்ப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அனைவரையும் உள்ளடக்கிய நிறுவனங்கள் பிரிவில், ஆக்சன்சர் சொல்யூஷன்ஸ், சிட்டி பாங்க், கேபிஎம்ஜி, ஐபிஎம், இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.


Edited by Induja Raghunathan