Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கடந்த 5 வருடத்தில் சம்பளம் மட்டும் 80 ஆயிரம் கோடி: இரண்டாம் இடத்தைப் பிடித்த சுந்தர் பிச்சை!

முதலிடம் யார் தெரியுமா?!

கடந்த 5 வருடத்தில் சம்பளம் மட்டும் 80 ஆயிரம் கோடி: இரண்டாம் இடத்தைப் பிடித்த சுந்தர் பிச்சை!

Monday June 14, 2021 , 1 min Read

புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அமெரிக்காவில் அதிக அளவு சம்பளம் பெறும் டெக் நிறுவன சி.இ.ஓக்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் முதல் இடத்தை பிடித்திருப்பவர் யார் என்றால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மார்க் ஜக்கர்பெர்க். இவர் இந்திய மதிப்பில் 4.17 இலட்சம் கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். கடந்த, 2012 முதல் 2020 வரையில் பங்குகள் மற்றும் பணமாக இந்தத் தொகை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவருக்கு அடுத்த இடத்தை பிடித்திருப்பது இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு பெருமை அளிக்கக்கூடிய ஒரு நபர். ஆம், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுந்தர் பிச்சை தான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

முதலில் கூகுள், அதனைத் தொடர்ந்து அதன் ஆரம்ப நிறுவனமான ஆல்பாபெட் ஆகியவற்றின் சி.இ.ஓ-வாக இருந்து சுந்தர் பிச்சை 80 ஆயிரம் கோடியை சம்பளமாக பெற்றுள்ளார் என்கிறது நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி. கடந்த 2015 முதல் 2020 வரையான 5 ஆண்டுகளில் இந்த தொகையை சம்பளமாக, பங்குகள், இழப்பீடுகள், பணம் என்ற வகையில் பெற்றுள்ளார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுந்தர் பிச்சை!

2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்து, கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவையின் உருவாக்கத்திற்கும் முன்னேற்றத்துக்கும் பெரும் பங்கு வகித்தவர் சுந்தர் பிச்சை. அப்படி படிப்படியாக முன்னேறி 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ என்ற பதவியை பெற்றார். கூகுள் நிறுவன சி.இ.ஓவாக கடந்த 2015ம் ஆண்டு முதல் இந்த பொறுப்பை சுந்தர் பிச்சை வகித்து வருகிறார்.


தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு கூகுள் தாய் நிறுவனமாக ஆல்பபெட்டின் இயக்குநர் குழு உறுப்பினராக சேர்ந்த சுந்தர் பிச்சை தற்போது அதற்கு சிஇஓ-வாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


சுந்தர் பிச்சை தலைமையின் கீழ் கூகுள் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன நுட்பங்கள் அடிப்படையில் புதிய சேவைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தொகுப்பு: மலையரசு