'ஃபோர்ப்ஸ் அமெரிக்க பணக்காரர்கள்’ பட்டியலில் 7 இந்திய-அமெரிக்கர்கள்!

By YS TEAM TAMIL|9th Sep 2020
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள ’பணக்கார அமெரிக்கர்கள்’ பட்டியலில் 7 இந்திய அமெரிக்கர்கள் இடம் பெற்றுள்ளனர். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளார்.


ஃபோர்ப்ஸ் 2020-ன் அமெரிக்காவின் 400 பணக்காரர்கள் பட்டியலில், 179 பில்லியன் டாலர் சொத்துடன் 56 வயதான பெசோஸ் முதலிடத்தில் உள்ளார். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த இடத்தைப் பிடித்துள்ளார் பெசோஸ். பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், 111 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்றுநோய் பொருளாதாரத்தில் பேரழிவைத் தரும் இவ்வேளையில், இதை மீறி அமெரிக்காவின் பணக்காரர்கள் தங்கள் செல்வம் பெருகுவதைக் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தொற்றுநோய் பொருட்டல்ல: இப்பட்டியலில் உள்ள அமெரிக்காவின் 400 பணக்காரர்கள், சுமார் 3.2 டிரில்லியன் டாலர் மதிப்புடையவர்களாக உள்ளனர். இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட 240 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்கேட்டையும் தாண்டி, இந்த இக்கட்டான சூழலிலும் மெகா சொத்துக்கள் குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது,” என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

பட்டியலில் உள்ள ஏழு இந்திய-அமெரிக்கர்கள்-

சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ZScaler தலைமை நிர்வாக அதிகாரி ஜெய் சவுத்ரி, சிம்பொனி டெக்னாலஜி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ரோமேஷ் வாத்வானி, Online home goods retailer-ன் இணை மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வேஃபேர் நிராஜ் ஷா, சிலிக்கான் வேலி வென்ச்சர் கேப்பிடல் நிறுவனமான Khosla Ventures நிறுவனர் வினோத் கோஸ்லா, Sherpalo Ventures நிர்வாக பங்குதாரர் கவிதர்க் ராம் ஸ்ரீராம், விமான நிறுவன மூத்த தொழிலதிபர் ராகேஷ் கங்வால் மற்றும் Workday தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் அனீல் பூஸ்ரி ஆகியோர் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய அமெரிக்கர்கள் ஆகும்.

ZScaler தலைமை நிர்வாக அதிகாரி ஜெய் சவுத்ரி

61 வயதான ஜெய் சவுத்ரி 6.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பட்டியலில் 85வது இடத்தில் உள்ளார். அவர் 2008ல் ZScaler எனும் நிறுவனத்தை நிறுவினார் மற்றும் இந்நிறுவனம் மார்ச் 2018ல் பொது நிறுவனம் ஆகியது.

1996ல், சவுத்ரி மற்றும் அவரது மனைவி ஜோதி இருவரும் தங்கள் பணியை விட்டுவிட்டு, தங்களின் சொந்த சேமிப்பில் சைபர் செக்யூரிட்டி ஐடி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக ZScaler தொடங்கி, இந்த அளவிற்கு வளர்ந்துள்ளனர் என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

Symphony Technology Group நிறுவனர் மற்றும் தலைவர் ரோமேஷ் வாத்வானி: 73 வயதான வாத்வானி இந்த பட்டியலில் 238வது இடத்தில் உள்ளார் மற்றும் இவரது நிகர மதிப்பு 3.4 பில்லியன் டாலர்கள் ஆகும். அவரது சிம்பொனி தொழில்நுட்பக் குழுமம், ஆண்டு வருமானமாக $2.5 பில்லியனைக் கொண்டுவருகிறது. மேலும் வாத்வானி தனது ஒன்பது நிறுவனங்களையும் SymphonyAI மையமாக 2017ல் ஒன்று இணைத்தார்.


ஐஐடி மற்றும் கார்னகி மெல்லனின் முன்னாள் மாணவரான ரோமேஷ் வாத்வானி தனது சகோதரர் சுனில் உடன் இணைந்து மும்பை பல்கலைக்கழகத்தில் ‘Wadhwani Institute of Artificial Intelligence’ தொடங்கி அதில் $30 மில்லியன் முதலீடு செய்துள்ளனர்.

Indian Americans

ஜெய் சவுத்ரி, ரோமேஷ் வாத்வானி, நிராஜ் ஷா

299வது இடத்தில், 46 வயதான வேஃபேர் நிராஜ் ஷா, 2.8 பில்லியன் டாலர் சொத்துடன் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஷா ஒரு பில்லியனரான ஸ்டீவ் கோனைனுடன் 2002ல் இணைந்து வணிகத்தைத் தொடங்கினார். இப்போது 18 மில்லியனுக்கும் அதிகமான தயாரிப்புகளை வழங்கும் Wayfair, 2019 ஆம் ஆண்டில் 9.1 பில்லியன் டாலர் நிகர வருவாயை ஈட்டியுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 35 சதவீதம் அதிகரித்துள்ளது.


Khosla Ventures நிறுவனர் வினோத் கோஸ்லா: 65 வயதான கோஸ்லா 2.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 353வது இடத்தில் உள்ளார். 1982 ஆம் ஆண்டில் கோஸ்லா, கணினி வன்பொருள் நிறுவனமான ‘சன் மைக்ரோசிஸ்டம்ஸை’ இணைநிறுவனராக தொடங்கினார். அதற்கு முன்பு, அவர் வென்ச்சர் கேப்பிடல் நிறுவனம் ஒன்றில் 18 ஆண்டுகள் பணியாற்றினார்.

செயற்கை நுண்ணறிவு; இசை மற்றும் ரேடியாலஜி துறையில் உள்ள பாரம்பரியத் தொழில்களை மாற்றும் என்று தான் நம்புவதாக 2019ல் கோஸ்லா தெரிவித்துள்ளார்.

359வது இடத்தில் இருப்பவர் கவிதர்க் ராம் ஸ்ரீராம். இவர் $2.3 பில்லியன் நிகர மதிப்புடன் பட்டியலில் இருக்கும் இந்திய அமெரிக்கர். ஆரம்பகால கூகிள் பங்குதாரரான ஸ்ரீராம், தனது பெரும்பாலான பங்குகளை விற்றுவிட்டார், ஆனால் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் குழுவில் இன்னும் இருக்கிறார்.


இந்தியாவில் பிறந்த ஸ்ரீராம் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் கணிதம் பயின்றார். அவர் ஆன்லைன் அழைப்பிதழ் சேவை பேப்பர்லெஸ் போஸ்ட், ஆன்லைன் மனிதவள சேவை வழங்குநர் கஸ்டோ மற்றும் மொபைல் விளம்பர நிறுவனமான இன்மோபி ஆகிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் பங்குவகிக்கிறார்.


67 வயதான கங்வால் இந்த பட்டியலில் 359வது இடத்தில் உள்ளார் மற்றும் அவரின் சொத்து மதிப்பு 2.3 பில்லியன் டாலர்கள். சந்தைப் பங்கின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, மற்றும் பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோவின் தாய் அமைப்பான InterGlobe Aviation-ல் இருந்து கங்வால் தனது வருவாயை ஈட்டினார்.

”2006ல் ராகுல் பாட்டியாவுடன் இண்டிகோவை டெல்லிக்கு வெளியே தலைமையிடமாகக் கொண்டு ஒரே ஒரு விமானத்துடன் இணைந்து தொடங்கினார் கங்வால்.”

359வது இடத்தில் 2.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அனீல் பூஸ்ரி உள்ளார். PeopleSoft நிறுவனர் டேவ் டஃபீல்டுடன் இணைந்து நிறுவிய வணிக மென்பொருள் நிறுவனமான Workday- வின் தலைமை நிர்வாக அதிகாரியாக பூஸ்ரி உள்ளார். 2008 முதல் ஃபோர்ப்ஸ் பட்டியலில் பூஸ்ரி ஆறு முறை இடம் பெற்றுள்ளார்.

இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்தவர்கள்:

  • ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் 85 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்


  • பெர்க்ஷயர் ஹாத்வே தலைமை நிர்வாக அதிகாரி வாரன் பஃபெட் 73.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4வது இடத்தில் உள்ளார்.


  • மென்பொருள் ஜாம்பவான் நிறுவனமான ஆரக்கிளின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி லாரி எலிசனின் 72 பில்லியன் டாலர் புதிய மதிப்புடன் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.


  • இந்த பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2.59 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 339வது இடத்தில் உள்ளார்.


தகவல்: பிடிஐ

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.