மத்திய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் உட்பட ஏழு பெண் அமைச்சர்கள்!
முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி , மாநில அமைச்சர் பார்தி பவார், மீனாட்சி லேகி, சாத்வி நிரஞ்சன் ஜோதி, பிரதிமா பூமிக் மற்றும் தர்ஷனா ஜர்தோஷ் ஆகியோர் 18வது மக்களவையில் இடம்பெறவில்லை.
18வது லோக்சபாவில் புதிய அமைச்சர்கள் குழுவில் இரண்டு கேபினட் அமைச்சர்கள் உட்பட ஏழு பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் நிர்மலா சீதாராமனும் ஒருத்தர். கடந்த ஜூன் 5ஆம் தேதி கலைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவில் 10 பெண் அமைச்சர்கள் இருந்தனர்.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். தனிப்பெரும் கட்சியாக பெரும்பான்மையுடன் வர முடியாத பாஜக இந்த முறை நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. விரிவாக்கப்பட்ட அமைச்சரவைக்கு தலைமை தாங்கினார் பிரதமர் மோடி.
ஞாயிற்றுக்கிழமை மாலை, பிரதமர் நரேந்திர மோடியுடன் 71 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சரவையில் புதிய பெண் அமைச்சர்களாக முன்னாள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அப்னா தளம் எம்பி அனுப்ரியா படேல் மற்றும் பாஜக எம்பிக்கள் ஷோபா கரந்த்லாஜே, நிமுபென் பாம்பானியா, ரக்ஷா கட்சே, சாவித்ரி தாக்கூர் மற்றும் அன்னபூர்ணா தேவி ஆகியோர் பதவியேற்றனர். சீதாராமன் மற்றும் தேவி ஆகியோர் மத்திய அமைச்சரவையில் உள்ளனர், மீதமுள்ள பெண்கள் மாநில அமைச்சர்களாக பதவியேற்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மாநில அமைச்சர் பார்தி பவார், மீனாட்சி லேகி, சாத்வி நிரஞ்சன் ஜோதி, பிரதிமா பூமிக் மற்றும் தர்ஷனா ஜர்தோஷ் ஆகியோர் 18வது மக்களவையில் இடம்பெறவில்லை. காரணம் அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானி தோல்வி கண்டார். தண்டோரியில் பார்தி பவார் தோல்வி அடைந்தார். ஜோதி, ஜர்தோஷ், லேகி, பூமிக் ஆகியோர் பாஜகவால் அமைச்சர் பொறுப்புக்குப் பரிந்துரைக்கப்படவில்லை.
2014ல் மோடியின் முதல் பதவிக் காலத்தில் எட்டு அமைச்சர்கள் பதவி வகித்தனர், இரண்டாவது தவணையில் 6 பெண் அமைச்சர்கள் பதவியேற்றனர், 17வது மக்களவை கலைக்கப்பட்ட நேரத்தில் 10 பெண் அமைச்சர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.