இளையோர் தினத்தை முன்னிட்டு குறும்படப் போட்டி அறிவிப்பு - ரூ.50,000 வெல்ல அரிய வாய்ப்பு!
இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம் இளையோர்களால் வழிநடத்தப்பட்டு வரும் இலாப நோக்கற்ற அமைப்பு சார்பில் குறும்பட திருவிழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்.
'டிரஸ்ட் ஃபார் யூத் அண்ட் சைல்டு லீடர்ஷிப்' (TYCL) என்ற இளைஞர்களால் வழிநடத்தப்படும் லாபநோக்கமற்ற அமைப்பு சார்பில் குறும்பட திருவிழா அறிவிக்கப்பட்டுள்ளது.
TYCL என்றால் என்ன?
டிரஸ்ட் ஃபார் யூத் அண்ட் சைல்டு லீடர்ஷிப் (TYCL), 2018 முதல் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபையின் (UN-ECOSOC) சிறப்பு ஆலோசனை அந்தஸ்து பெற்று இயங்கிவரும் இலாப நோக்கமற்ற அமைப்பாகும்.
இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம் பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, பங்கேற்கக் கூடிய மற்றும் புதுமையான தலைமைத்துவ வழிமுறைகள் மூலம் இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் அவர்களின் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த அமைப்பு 2030ம் ஆண்டுக்குள் இளைஞர்கள் தற்கொலையே இல்லை என்ற நிலையை உருவாக்குவது, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் சுற்றுச்சூழலுக்கு எதிரான சுரண்டல்களை தடுப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
TYCL இளைஞர்களைக் கொண்டு இயங்கக்கூடிய அமைப்பாக இருப்பதால், பல்வேறு திட்டங்கள் மூலமாக இளைஞர்களிடையே சமூக மாற்றத்தைக் கொண்டு வர முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச இளைஞர் தினத்தை கொண்டாடி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச இளைஞர்கள் தினம் ஆகஸ்ட் 1ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு உழைக்கும் இளைஞர்களை கெளரவிக்கும் விதமாக பரிசுத் தொகையுடன் கூடிய குறும்பட விழாவை அறிவித்துள்ளது.
குறும்பட திருவிழா:
ட்ரஸ்ட் ஃபார் யூத் அண்ட் சைல்டு லீடர்ஷிப் (TYCL) சர்வதேச இளையோர் தினத்தை, நம் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த செயல்படும் இளைஞர்களை அங்கீகரித்து ஊக்குவிப்பதன் மூலம் கொண்டாடி வருகிறது.
அவ்வகையில், இந்த ஆண்டு சர்வதேச இளையோர் தினத்தை "குறும்பட திருவிழா" நடத்தி இளைஞர்களை அங்கிகரிப்பத்தன் மூலம் கொண்டாட இருக்கிறது.
இதற்கான பரிசுத் தொகையாக முதல் பரிசாக ரூ.50,000/, இரண்டாம் பரிசாக ரூ.30,000/, மூன்றாம் பரிசாக ரூ.20,000/ வழங்கப்பட உள்ளது.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
• 14 முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.
இடம்:
• ஆடிட்டோரியம், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க கடைசி நாள் - ஆகஸ்ட் 10, 2023
- நீதிபதிகளின் முதற்கட்ட தேர்வு - ஆகஸ்ட் 12, 2023
- போட்டி நடைபெறும் இடம் - 26 ஆகஸ்ட் 2023
போட்டி தீம்கள்:
இளைஞர்கள் தற்கொலை தடுப்பு குறிப்புடன் கூடிய
• டிஜிட்டல் மன நலம்
• மன ஆரோக்கியம்
• துஷ்பிரயோகம் மற்றும் தற்கொலை
• வேலையின்மை
• LGBTQA+ மற்றும் தற்கொலை தடுப்பு
• ஊனமுற்ற நபர்கள் மற்றும் தற்கொலை தடுப்பு
காலநிலை நடவடிக்கையில் இளைஞர்கள் பங்களிப்பு குறித்து,
• சுத்தமான நீர் & சுகாதாரம்
• பசுமை எரிசக்திக்கான அணுகல் மற்றும் மலிவு
• கடல் அரிப்பு மற்றும் காலநிலை மாற்றம்
பாலின சமத்துவம் குறித்து,
• பாலினம் சார்ந்த வன்முறை
• பாலின ஸ்டீரியோடைப்கள் & பாலினம்
• முடிவெடுப்பதில் சமத்துவம்
• நீதிக்கான பெண்களுக்கு சமமான அணுகல்
• பாலின சமத்துவம்
பதிவு கட்டணம்: ரூ. 200/-
குறும்பட திருவிழாவின் நோக்கம்:
• இளம் திறமையாளர்கள் தங்கள் படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை வெளிப்படுத்த ஊக்குவிக்க ஆடியோவிஷுவல் கலை வடிவத்தின் மூலம் சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது.
• இளைஞர்களின் தற்கொலை தடுப்பு, முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
மனநலம் மற்றும் எதிர்கொள்ளும் மனநலப் பிரச்சினைகளின் யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது.
• பாலின சமத்துவம் மற்றும் சமத்துவம் பற்றி உணர்தல்.
• இளைஞர்களிடையே சுற்றுச்சூழலுக்கு ஆதரவான நடத்தையை ஊக்குவித்தல் மற்றும் உருவாக்குதல்.
• ஒரு தனிநபராக எடுக்கக்கூடிய படிகளைப் பற்றி அவர்கள் உணரும் வாய்ப்பு.
• ஆரோக்கியமான விவாதத்தை உருவாக்கி நுண்ணறிவு மற்றும் முன்னோக்குகளை வழங்குதல்.
• பரந்த பார்வையாளர்களிடையே இளைஞர்களின் குரல்களைப் பெருக்குதல்.
• சமூகத்திற்காக தொடர்ந்து பணியாற்ற இளைஞர்களுக்கு ஆதரவு அமைப்பை வழங்குதல்.
சமர்ப்பிக்கும் வடிவம்
1.குறும்படத்தின் தன்மை குறைந்த பட்சம் 1080p (பிக்சல்) என்ற அளவில் இருக்க வேண்டும்.
2.குறும்படம் MP4 அல்லது MKV என்ற வடிவத்தில் இருக்க வேண்டும் (விருப்பமான காணோளி விகிதம் 16:9).
குறும்படங்களை சமர்ப்பிப்பது எப்படி?
குறும்படங்கள் www.tycl.org.in என்ற இணையதள முகவரியில் சமர்பிக்கலாம்.
தபால் வழியாக ஒருங்கிணைப்பாளர், சர்வதேச இளையோர் தினம்'23, எண்.17, பூக்கார வீதி, முத்தியால்பேட், . புதுச்சேரி - 605 003. என்ற முகவரியில் சமர்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு - +91 9092859858 / +91 9944428898, 0413-2224243 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
இந்த குறும்பட விழாவில் யுவர்ஸ்டோரி தமிழ் மீடியா பார்ட்னராக உள்ளது.