5 ஆண்டுகளில் லட்சாதிபதியாக ஓய்வு பெறுவது எப்படி? - 7 உத்திகள் இதோ!
அடுத்த 5 ஆண்டுகளில் உங்களை ஓர் லட்சாதிபதியாக ஓய்வு பெற வைக்கும் சில வியூகங்களையும் உத்திகளையும் இங்கே பார்ப்போம்.
ஐந்து ஆண்டுகளுக்கு பின் அலாரம் அடிக்காமல், வேலைக்கான டெட்லைன் இல்லாமல், பணத்தை பற்றிய கவலைகள் இல்லாமல் நிம்மதியாக தூங்கி எழுவதை கற்பனை செய்து பாருங்கள்.
பலருக்கு இப்படியான ஒரு கனவு நிறைந்த ஓய்வு என்பது தொலைதூரத்தில் இருக்கும் கானல் நீர் போல் தெரிகிறது. ஆனால், சிலர் இந்த இலக்கை மிக விரைவாகவும், அதேநேரம் நிறைய செல்வத்துடனும் அடைகிறார்கள்.
அதன் ரகசியம் என்ன? அவர்கள் எப்படி பல வருட உழைப்பு இல்லாமல், ஒரு சில வருடங்களில் லட்சக்ககணக்கில் பணத்தை சம்பாதிக்கிறார்கள்? இதற்கு பதில் ‘அதிர்ஷ்டம்’ என்றால், அதுதான் இல்லை. ஆனால் வியூகம், துணிச்சல், கட்டுப்பாடான செயல்திறன் ஆகியவை அதற்கான பதிலாக அமையும்.
அடுத்த 5 ஆண்டுகளில் உங்களை ஓர் லட்சாதிபதியாக ஓய்வு பெற வைக்கும் சில வியூகங்களையும் உத்திகளையும் இங்கே பார்ப்போம்...
5 ஆண்டுகளில் லட்சாதிபதியாக ஓய்வு பெறுவது எப்படி?
1. வளர்ச்சி மனநிலைக்கு மாறுதல்
லட்சாதிபதிகளின் பயணம் முதலில் அவர்களது மனதில் இருந்தே தொடங்குகிறது. வளர்ச்சி பற்றிய சிந்தனை அவர்களின் மனதில் தோன்ற வேண்டும்.
வளர்ச்சி மனப்பான்மையை ஏற்றுக்கொள்வது...
கற்றல்: சாதனையர்களை பற்றிய சிந்தனைகள் உங்களை சுற்றி இருக்கும்படி, புத்தங்களை படியுங்கள் அல்லது பாட்காஸ்ட் போன்றவற்றை கேட்டு கற்றுக் கொள்ளுங்கள்.
ரிஸ்க் எடுங்கள்: உங்கள் கம்ஃபோர்ட் ஜோனில் இருந்து வெளியே வந்து ரிஸ்க் எடுத்து புதிய வாய்ப்புகளை சோதனை செய்து பாருங்கள்.
மீண்டெழுங்கள்: ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம்தான், மாறாக பின்னடைவு கிடையாது. எனவே, விழுந்தாலும் மீண்டெழுங்கள்.
மனநிலை பற்றி பேசும் மைண்ட்செட் (Mindset) புத்தகத்தின் ஆசிரியர் கரோல் டுவெக் கூறுவது போல்,
“சரியான மனநிலையுடன், நீங்கள் உங்கள் திறன்களை வளர்த்துக்கொண்டால், உங்கள் எதிர்காலத்தை மாற்றலாம்.” கரோலின் கூற்று உண்மையும் கூட.
2. அதிக வருமானம் திறன்கொண்ட வேலைகளை தேடுவது:
சிறிய வேலைகள் 5 ஆண்டுகளில் பணக்காரர்களாக ஓய்வு பெற உங்களுக்கு உதவாது. அதற்கு, அதிக ஊதியம் தரும் திறன் நிறைந்த வேலைகள் தேவை. அதற்கான சில எடுத்துக்காட்டுகள் இதோ...
> டிஜிட்டல் மார்க்கெட்டிங்
> மென்பொருள் மேம்பாடு
> சேல்ஸ்
> பிசினெஸ் கன்சல்டிங்
மேற்கண்ட இந்த திறன்கள் உங்களின் சொந்த முயற்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுசெல்ல உதவுவதுடன் உங்களின் லாப பாதைக்கும் வழிகாட்டும். Udemy, Coursera போன்ற ஆன்லைன் பிளார்ட்பார்ம்கள் மூலமாக இந்த திறன்களை அனைவரும் எளிதாக கற்றுக்கொள்ளலாம்.
3. புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்
முதலீடுகளே செல்வத்தை வளர்ப்பதற்கான மூலம். எனவே, தீவிரமாக அதேநேரம் புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய ஆரம்பியுங்கள்.
ரியல் எஸ்டேட்: தனிநபர்கள் பெரிய அளவில் வருமானம் ஈட்ட உதவும் ரியல் எஸ்டேட் முதலீடான REIT போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள்.
பங்குச் சந்தை முதலீடு: அதிக வளர்ச்சி கொண்ட டெக்னலாஜி மற்றும் ஹெல்த்கேர் போன்ற துறைகளின் பங்குகளில் முதலீடுகளை செய்யுங்கள்.
பிசினெஸ் ஓனர்ஷிப்: நீண்ட நாள் நிலைக்கக்கூடிய பிசினஸ்களை கண்டறிந்து முதலீடு செய்யுங்கள் அல்லது அதனை கைப்பற்றுங்கள்.
50-30-20 விதியைப் பின்பற்றுங்கள்: உங்கள் வருமானத்தில் குறைந்தது 50 சதவீதத்தை அதிக வருமானம் தரும் வாய்ப்புகளில் முதலீடு செய்யுங்கள்.
4. நெட்வொர்க்கிங்கின் சக்தியைப் பயன்படுத்துங்கள்
மற்றவற்றை விட உங்களின் நெட்வொர்க் அல்லது சுற்றுவட்டாரமே உங்களின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும். உங்கள் நெட்வொர்க்கை வளர்த்துக் கொள்ள சில டிப்ஸ்..
பிசினெஸ் குரூப் மற்றும் மீட்அப் போன்ற சந்திப்புகளில் சேருங்கள். அதில் உள்ள அனுபவம் வாய்ந்த நிபுணர்களிடமிருந்து புதியவற்றை கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு வழிகாட்டி உங்களின் கடந்த கால தவறுகளில் இருந்து முன்னேற்றத்தை நோக்கி வழிநடத்த முடியும். எனவே, உங்களுக்கான வழிகாட்டிகளைத் தேடுங்கள்.
ஒத்த எண்ணம் கொண்ட நபர்களுடன் இணைந்து பிசினெஸை ஆரம்பியுங்கள்.
நினைவில் கொள்ளுங்கள். உங்கள் நெட்வொர்க்கே உங்களின் மதிப்பு. எனவே, நெட்வொர்க்கை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
5. உங்கள் வருமானத்தை ஆட்டோமேட் செய்தலும் அளவிடுதலும்
வருமானத்தை அளவிடுவது என்பது உங்களிடம் இருக்கும் வளத்தை அதிகரிக்காமல், உங்கள் வருவாயை அதிகரிப்பதாகும். இந்த முறையே, விரைவாக ஓய்வு பெறுவதற்கான ரகசியமும்கூட. அதற்கான சில வழிகள் இங்கே...
அதிக ஆட்கள் வளம் இல்லாமல், வருமானம் பெற்றுத் தரக்கூடிய ஆன்லைன் படிப்புகள், யூடியூப் சேனல்கள் போன்றவற்றை தொடங்குகள்.
உங்கள் பிசினஸ் வளரும்போது உங்களுக்கான நேரத்தை மிச்சப்படுத்த அதற்கேற்ற நிபுணர்களை நியமியுங்கள்.
டெக்னாலஜியை பயன்படுத்துங்கள்: Zapier, Mailchimp அல்லது AI போன்ற கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் வேலையை தானியங்குபடுத்துங்கள். இந்த முறைகளால் நீங்கள் வேலை செய்யாதபோதும் உங்களின் வருமானம் வளரும்.
6. தேவையற்ற செலவுகளை குறைக்கவும்
செல்வத்தை விரைவாக அதிகரிப்பதற்கு சில தியாகங்களை செய்வது அவசியம்.
ஒவ்வொரு பைசாவையும் கண்காணித்து பட்ஜெட் போட உதவும் ஆப்களான Mint அல்லது YNAB போன்றவற்றை பயன்படுத்தவும்.
தேவையற்ற ஆடம்பரங்களை குறைத்தல் மிக முக்கியமான ஒன்று. சேமிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவையும் முதலீடு செய்யுங்கள்.
இப்படி 5 ஆண்டுகள் சிக்கனமாக வாழ்வதன் மூலம் உங்கள் வாழ்நாள் முழுவதும் நிதி சுதந்திரமாக இருக்க முடியும். எனவே, சிக்கனமாக இருக்க முயற்சியுங்கள்.
7. உங்கள் இலக்கில் கவனம் செலுத்துங்கள்
கவனச்சிதறலே வெற்றியின் எதிரி. எனவே, தெளிவான, செயல்படுத்தக்கூடிய கவனச்சிதறல் அற்ற திட்டங்களை உருவாக்குங்கள்.
மைல்கல்லை அமைக்கவும்: நீங்கள் அமைத்த 5 ஆண்டு இலக்குகளை மாத மற்றும் வார இலக்குகளாக மாற்றுங்கள்.
முன்னேற்றத்தை ஆய்வு செய்யுங்கள்: எந்த உத்தி வேலை செய்கிறது என்பதை ஆய்வு செய்து அதற்கேற்ப செயல்படவும்.
வெற்றியைக் கற்பனை செய்யுங்கள். அதேநேரம், நீங்கள் ஏன் இதையெல்லாம் செய்கிறீர்கள் என்பதை உங்களுக்கே நினைவூட்ட நாட்குறிப்பு ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களின் வெற்றிக்கான கற்பனையை அதிகரிக்க செய்யும்.
ஐந்து ஆண்டுகளில் லட்சாதிபதியாக ஓய்வு பெறுவது என்பது வெறும் கற்பனையல்ல. அதை அடைய விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது ஓர் உறுதியான இலக்கு.
மேலே சொன்ன நடைமுறைகளை செயல்படுத்துவதன் மூலமாக 4 ஆண்டுகளில் நீங்கள் விரும்பும் நிதி சுதந்திரத்தை அடைய முடியும்.
எனவே, இன்றே மேலே சொன்னவற்றை கடைபிடிக்க தொடங்குங்கள். நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது, ஒவ்வொரு கணமும் முக்கியமானது. உங்கள் கனவு வாழ்க்கை காத்திருக்கிறது. அதை நனவாக்க வேண்டிய நேரம் இது.
மூலம்: சானியா அகமது கான்
Edited by Induja Raghunathan