Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'வானமே எல்லை' - 26 ஏழை மாணவர்களின் கனவை நினைவாக்கிய விமானப் பயணம்!

ரெயின்ட்ராப்ஸ் என்ற சமூக அமைப்பு ஏழை எளிய மாணவர்களின் விமான பயண கனவை நனவாக்கியுள்ளது.

'வானமே எல்லை' - 26 ஏழை மாணவர்களின் கனவை நினைவாக்கிய விமானப் பயணம்!

Saturday December 17, 2022 , 2 min Read

’ரெயின்ட்ராப்ஸ்’ என்ற சமூக அமைப்பு ஏழை எளிய மாணவர்களின் விமானப் பயண கனவை நனவாக்கியுள்ளது.

ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு:

ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். இந்த அமைப்பு ஊடகங்கள் மற்றும் பல்வேறு கலை சார்ந்த நிகழ்சிகள் வாயிலாக சமூக விழிப்புணர்வு கருத்துக்களை மக்கள் நெஞ்சங்களில் விதைத்து வருகிறது.

இந்த சமூக அமைப்பின் நல்லெண்ணத் தூதராக ஆஸ்கார் வென்ற இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரியும் இசையமைப்பாளருமான ஏ.ஆர். ரெஹானா உள்ளார். 

Vaname Yellai

ஏழை மாணவர்களின் விமான பயணம்:

ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு அண்மையில் சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் நடத்திய ஆய்வு மூலமாக, அங்கு வசிக்கும் பல குழந்தைகளுக்கு தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்பது என்ற ஆசையுடன் இருப்பதைக் கண்டறிந்தனர்.

அத்தகைய குழந்தைகளின் கனவை நனவாக்க ரெயின்ட்ராப்ஸ் அமைப்பானது, சத்யபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து ’வானமே எல்லை’ என்ற ஒரு நாள் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இதற்காக சேவாலயா, ஆனந்தம், செஸ் உள்ளிட்ட இல்லங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 26 குழந்தைகள், இன்று காலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில்  அழைத்செல்லப்பட்டு, மீண்டும் கோவையில் இருந்து சென்னைக்கு ரயிலில் திரும்பினர். இதில், ஒரு பார்வை மாற்றுத்திறனாளி மாணவரும் ஒரு திருநங்கை மாணவியும் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை டூ கோவை பயணம்:

சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்திறங்கிய மாணவ மாணவியரை கோவை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் முருகன், வருவாய் பிரிவு அதிகாரி பூமா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Vaname Yellai

இது குறித்து ரெயின் ட்ராப்ஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால் கூறுகையில்,

இந்த நிகழ்ச்சியின் மூலமாக இளம் சிறார்கள் தமிழகத்தின் முக்கிய நகரமாக விளங்கும் கோவைக்கு சென்று வருவதுடன், அவர்களுடைய வாழ்நாள் கனவாக உள்ள விமானப் பயண அனுபவத்தை தர முடிந்தது. இதன் மூலம் வளரும் தலைமுறை குழந்தைகளின் மனதில் நம்பிக்கை தீபத்தை ஏற்றிட இயலும். இந்த பயணம் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு, உலகின் உயரத்தை அறிமுகம் செய்து வைப்பதுடன், மனித நல்லியல்புகளை அடையாளம் காட்டும் என்று ரெயின்ட்ராப்ஸ் நம்பிக்கை கொள்கிறது. இந்த பயணம் கொடுக்கும் அனுபவம் எதிர்கால வாழ்வில் குழந்தைகள் மென்மேலும் சிறக்க பெரும் உந்து சக்தியாக இருக்கும்,” எனத் தெரிவித்தார்.

பின்னர், கோவை அறிவியல் மையம், ஜி டி நாயுடு அருங்காட்சியகம் மற்றும் ஐ லவ் கோவை ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்து மாணவ மாணவியர் மகிழ்ந்தனர். இந்த விமானப் பயணத்தை சிறார்கள் வாழ்நாள் முழுவதும் நினைவுகூறத்தக்க வகையில் இயற்கை அறிவியல் ஆய்வாளரும் மாநில திட்டக்குழு உறுப்பினருமான சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், பிரபல பாடகர்களும் சின்னத்திரை நட்சத்திரங்களுமான சிவாங்கி, சாம் விஷால், ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் குழந்தைகளுடன் பயணித்து மகிழ்ந்தனர்.