சிறிய தொடக்கம் + நம்பிக்கை + விடாமுயற்சி = பிரம்மாண்ட வெற்றி!

By YS TEAM TAMIL|26th Mar 2021
சிறியளவில் வணிக முயற்சியைத் தொடங்கி தடைகளைத் தகர்த்து தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்பட்டு பல கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனமாக மாற்றியுள்ள தொழில்முனைவோர்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியது உலக நியதி. இதில் யாரும் விதிவிலக்கு இல்லை.

ஆனால் இதை எதிர்கொள்ளும் விதம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலர் பிரச்சனைகளைக் கண்டு துவண்டு சோர்ந்து போய்விடுவார்கள்.


மேலும், சிலரோ பிரச்சனைகளை அசால்டாக எதிர்கொண்டு தீர்வை உருவாக்குவார்கள். முன்மாதிரியாக விளங்குவார்கள். மற்றவர்களுக்கும் வழிகாட்டுவார்கள். வெற்றி என்பது முதல் முயற்சியிலேயே கிடைத்துவிடாது. வெற்றிக்கு மிக அருகில் சென்று மனமுடைந்து கைவிட்டவர்கள் பலர். தொடர் முயற்சியும் மன உறுதியும் விரைவில் மீண்டெழும் திறனும் பெரும்பாலானோருக்குக் கைகொடுத்துள்ளதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

1

அவ்வாறு சிறியளவில் வணிக முயற்சியைத் தொடங்கி எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு விடாமுயற்சியுடன் பல கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனமாக மாற்றியுள்ள 3 தொழில்முனைவரின் வெற்றிப் பயணத்தை தொகுத்து வழங்குகிறது எஸ்எம்பிஸ்டோரி.

பியூஷ் சோமனி, நிறுவனர், சிஎம்டி மற்றும் சிஇஓ – ESDS Software Solution

பியூஷ் சோமனி மகாராஷ்டிராவில் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தார். சராசரியாக படிக்கும் மாணவராகவே இருந்தார். இவரது அப்பா வங்கி அதிகாரி. எனவே இவரது குடும்பத்தினர் அடிக்கடி வெவ்வேறு இடங்களுக்கு மாற்றலாகி வந்தனர்.


1989ம் ஆண்டு நாசிக்கில் செட்டில் ஆனார்கள். 1999-ம் ஆண்டு பொறியியல் படிப்பிற்காக புனே சென்றார். பட்டப்படிப்பு முடித்ததும் தொழில் தொடங்க குடும்பத்தினர் ஊக்குவித்தனர். ஆனால் அவர் ஏற்கவில்லை. மும்பையில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வேலையில் சேர்ந்தார். குறைந்த சம்பளமே கிடைத்தது. மும்பையில் தங்கியிருந்து செலவுகளை சமாளிக்க அந்தத் தொகை போதுமானதாக இல்லை.

2

ஐடி துறையில் பணியில் சேர நாசிக் சென்றார். 2003-ம் ஆண்டு நவம்பர் மாதம் பியூஷ் தனது நண்பர்கள் ஏழு பேருடன் சேர்ந்து சிறியளவில் வெப் ஹோஸ்டிங் சப்போர்ட் பிசினஸ் தொடங்கத் தீர்மானித்தார். அப்போது அவருக்கு 23 வயது. அலுவலக அறை எடுத்து செயல்படும் அளவிற்கு பணம் இல்லை.


பியூஷின் பார்ட்னர்களில் ஒருவரின் அம்மா மழலையர் பள்ளி நடத்தி வந்தார். குழந்தைகள் பள்ளி நேரம் முடிந்து சென்ற பிறகு பள்ளி இடத்தை பயன்படுத்திக்கொள்ள அவர் அனுமதித்தார்.


பியூஷும் அவரது நண்பர்களும் சில கம்ப்யூட்டர்களைக் கொண்டு வந்து மழலையர் பள்ளி செயல்பட்ட இடத்தில் வேலையைத் தொடங்கினார்கள். பியூஷின் அப்பா இணைய இணைப்பிற்காக 25,000 ரூபாய் கொடுத்துள்ளார்.

இப்படித்தான் தொடங்கியது பியூஷின் பிசினஸ். 2005-ம் ஆண்டு ESDS Software Solution என்கிற பெயரில் வணிகத்தைப் பதிவு செய்தார். தற்போது இந்நிறுவனம் டேட்டா மையம் மற்றும் க்ளௌட் ஹோஸ்டிங் சர்வீஸ் புரொவைடராக 850 ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது. 160 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது.

பி ரவீந்திரா ரெட்டி மற்றும் கே சத்யநாராயண ரெட்டி, இணை நிறுவனர்கள் - MTAR Technologies

பிரிசிஷன் என்ஜினியரிங் நிறுவனமான MTAR Technologies 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நண்பர்களான பி ரவீந்திரா ரெட்டி மற்றும் கே சத்யநாராயண ரெட்டி இருவரும் இந்நிறுவனத்தை நிறுவியுள்ளனர்.

3

இந்நிறுவனத்தின் முதல் பிராஜெக்ட் அணு உலை கோர்களுக்கான கூலண்ட் சானல் அசெம்பிளி தயாரிப்பு. அந்த சமயத்தில் அணு ஆற்றல் துறை கேட்டதற்கு இணங்க இந்தத் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பிராஜெக்டிற்கான மாநில அரசு தலைமையில் இயங்கி வந்த HMT Ltd நிறுவனத்தையே அணு ஆற்றல் துறை முதலில் அணுகியுள்ளது. ஆனால் இந்தப் பணி மிகவும் சிக்கலானது என்று கூறி அந்நிறுவனம் மறுத்துள்ளது. எனவே இந்த நண்பர்கள் சவாலை ஏற்கத் தயாரானார்கள். சிறிய வொர்க்‌ஷாப் ஒன்றில் நான்கு இயந்திரங்களுடன் MTAR Technologies தொடங்கினார்கள்.

ஓராண்டில் ரவீந்திராவின் சகோதரர் பிஜே ரெட்டி நிதி சம்பந்தப்பட்ட பணிகளைக் கையாள நிறுவனத்தில் இணைந்துகொண்டார்.


இன்று இந்நிறுவனம் இஸ்ரோ, நியூக்ளியர் பவர் கார்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், டிஃபென்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷன் போன்ற உள்நாட்டு கிளையண்டுகளுக்கும் ப்ளூம் எனர்ஜி, Dassault Aviation, Elbit Systems போன்ற வெளிநாட்டு கிளையண்டுகளுக்கும் சேவையளிக்கிறது.

”2020 நிதியாண்டில் எங்கள் வருவாய் 213.8 கோடி ரூபாய். ஆர்டர் அளவு 345 கோடி ரூபாய். மொத்த லாபம் 66.2 சதவீதம்,” என்கிறார் ரவீந்திர ரெட்டியின் மகனும் நிர்வாக இயக்குநருமான ஸ்ரீனிவாச ரெட்டி.

சச்சின் கர்பந்தா, சிஇஓ – லக்‌ஷிதா ஃபேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்

சச்சின் கர்பந்தா, சுனீத் கர்பந்தா இருவரும் சகோதரர்கள். 1995-ம் ஆண்டு படிப்பை முடித்ததும் ஏற்றுமதி வணிகத்தில் களமிறங்கினார்கள். இவர்கள் பெண்களுக்கான ஆடைகளை தயாரித்து உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்ததுடன் அமெரிக்க சந்தைக்கு விற்பனை செய்யத் தொடங்கினார்கள்.

4

இப்படியே மூன்றாண்டுகள் வரை தொடர்ந்தனர்.

“தயாரிப்பிலும் சாம்பிள் உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தோம். கூடுதலாக மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் இறுதி வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இல்லை. இதனால் இடைவெளி உருவானது,” என்றார் சச்சின்.

சகோதரர்கள் இருவரும் எப்போதும் தொழிற்சாலையில் இருந்தபடியே தயாரிப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார்கள். இதனால் சந்தையில் என்ன விற்பனையாகிறது என்பது இவர்களுக்குத் தெரியாமல் போனது.


இதனால் இவர்கள் வணிகத்தை நிறுத்திக்கொள்ள வேண்டிய சூழல் உருவானது. இருப்பினும் இது மற்றொரு பயணத்திற்கு வழிவகுத்தது.

விற்பனை இவர்களது பலவீனமாக இருந்தபோதும் தயாரிப்பு இவர்களது பலம். 2002-ம் ஆண்டு நொய்டாவின் செக்டார் 18-ல் ஒரு இடத்தை தொழிற்சாலையாக மாற்றினார்கள். பெண்களுக்கான ஷர்ட் மற்றும் ட்யூனிக்ஸ் விற்பனை செய்யத் தொடங்கினார்கள்.

நேரடியாக வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்க இது உதவியது. அவர்களது கருத்துக்களை கேட்டறிந்து அவ்வப்போதைய போக்குகளையும் சந்தை தேவைகளையும் சிறப்பாகப் புரிந்துகொள்ளமுடிந்தது.

இப்படி உருவானதுதான் ஃப்யூஷன்வேர் பிராண்ட் Lakshita Fashions Pvt Ltd. ஒரே ஒரு ஸ்டோர் தொடங்கப்பட்டு வட இந்தியாவில் மிகப்பிரபல ஆடை பிராண்டாக உருவானது. கடந்த நிதியாண்டில் 180 கோடி ரூபாய் டர்ன்ஓவரை எட்டியுள்ளது.

ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கௌஷல் | தமிழில்: ஸ்ரீவித்யா