'விண்வெளி என்பது பணக்காரர்களுக்கு மட்டுமல்ல, இந்தக் கட்டுக்கதையை உடைக்க வேண்டும்' - அக்னிகுல் இணை நிறுவனர் ஸ்ரீநாத் ரவிச்சந்திரன்!
விண்வெளி பலரையும் கவர்ந்த ஒரு விஷயமாகும். குறிப்பாக இளையோர்கள் இது குறித்து உற்சாகத்துடன் திகழ்கிறார்கள், என்று தமிழ்நாடு ஸ்டோரி 2024 இல் அக்னிகுல் காஸ்மோஸின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் கூறினார்.
அக்னிகுல் காஸ்மாஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் சி.இ.ஓ.வுமான ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் விண்வெளி என்பது பணக்காரர்களுக்கான இடம் என்பன போன்ற கட்டுக்கதைகளை உடைத்தெறிவது அவசியம், என்கிறார்.
விண்வெளி பலரையும் கவர்ந்த ஒரு விஷயமாகும். குறிப்பாக இளையோர்கள் இது குறித்து உற்சாகத்துடன் திகழ்கிறார்கள், என்று தமிழ்நாடு ஸ்டோரி 2024 இல் அக்னிகுல் காஸ்மோஸின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் கூறினார்.
யுவர்ஸ்டோரி தளத்தின் முக்கிய நிகழ்வான Tamil Nadu Story 2024-ல் கலந்து கொண்டு பேசினார் ஸ்ரீநாத் ரவிச்சந்திரன்.
"அமெரிக்காவில் விண்வெளிப்பயணத்திற்கான அனைத்து பெரிய ஸ்டார்ட்-அப் கதைகளுமே கோடீஸ்வரர்கள் அல்லது ஏற்கனவே கோடீஸ்வரர்களாக இருந்தவர்கள் அல்லது அவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்களால் இயக்கப்படுவது போல் தெரிகிறது. உதாரணமாக எலான் மஸ்க், ஜெஃப் பெசாஸ் போன்றவர்களைச் சொல்லலாம். இந்தியாவில் எங்களைப் போன்றவர்களுக்கு அவ்வளவு பெரிய வசதி இல்லை. நான் விண்வெளி ஆர்வலராக வளர்ந்தேன். சென்னையில் இருந்து விண்வெளிக்கு செல்லக்கூடிய உண்மையான ராக்கெட்டை உருவாக்கியது ஒரு கனவு நனவான கதையாகும்."
ராக்கெட்டை ஏவியது இப்போது நினைத்தால் கூட சர்ரியலாக உள்ளது. சில வேளைகளில் அந்த வீடியோவை இரவு நேரங்களில் போட்டுப் பார்க்கும் போது உண்மையில் அது நடந்தது போலவே தோன்றவில்லை. இன்றைக்கு 10-15 பேர் என்னிடம் வந்து விண்வெளியில் ஏதாவது ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு சிறிய அளவில் இதற்கான பொருளாதார-சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளோம், இது ஒரு பேருணர்வைத் தருகிறது, என்றார் ஸ்ரீநாத்.
ஐஐடி-மெட்ராஸில் உள்ள ஸ்டார்ட்அப் ஆன 'அக்னிகுல் காஸ்மோஸ்',ரவிச்சந்திரன் மற்றும் மொயின் எஸ்பிஎம் ஆகியோரால் 2017 இல் நிறுவப்பட்டது. நான்கு தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு மே 30 ஆம் தேதி அக்னிகுல் அதன் ஏவு வாகனமான அக்னிபான் SOrTeD என்ற ஏவுகணையின் வெற்றிகரமான ஏவுதல் மூலம் வரலாறு படைத்தது. இது உலகின் முதல் 3டி பிரிண்டட், செமி-கிரையோஜெனிக் இஞ்ஜின் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்னிகுல் தவிர, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், பிக்ஸெல், துருவா ஸ்பேஸ் மற்றும் பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ் ஆகியவை விண்வெளி ஏவுதல்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் ஆகிய இரண்டிலும் புதுமைகளைச் செய்யும் சில ஸ்டார்ட்அப்களாகும்.
ஸ்ரீநாத் மேலும் கூறுகையில்,
“எங்கள் குழு எந்த மனித குறுக்கீடு அற்ற ராக்கெட் என்ஜின் முழுவதையும் ஒரே ஷாட்டில் அச்சிடும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. ஒரு வகையில் இது தானியங்கி இயந்திரம் தயாரிப்பது போன்றது,” என்றார்.
அக்னிகுல் ஸ்பேஸ்டெக் நிறுவனம் மல்டி-மிஷன் சோதனைத் திட்டத்தைக் கொண்டிருப்பதால் வாகன மட்டத்தில் யோசித்தால் அடுத்த 10 பயணங்களுக்கு நிலைத்திருக்கும்.
உலகெங்கிலும் உள்ள விண்வெளி நிறுவனங்கள் மில்லியன் கணக்கான டாலர்களைச் சேமிக்க ராக்கெட்டுகளுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணை வாகனங்களைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் பெசோஸ் தலைமையிலான ப்ளூ ஆரிஜின் போன்ற தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனங்கள் முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுதள வாகனங்களை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.