ஆர்வம், தயக்கமின்மை, சீரான தன்மை: தமிழ்நாடு ஸ்டோரி விழாவில் உள்ளடக்க துறையில் வெற்றி பெற மதன் கவுரி பகிர்ந்த வழிகள்!
7.5 மில்லியன் சந்தாதாரர்களை யூடியூபில் கொண்ட மற்றும் mCholas நிறுவனர் மதன் கவுரி, தூத்துக்குடியில் இருந்து பயணத்தை துவக்கி, முன்னணி டிஜிட்டல் செல்வாக்காளராக உயர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட விரும்புகிறவர்களுக்கு, யூடியூபர் மதன் கவுரி சொல்லும் அறிவுரை நேரடியானது. சென்னையில் யுவர்ஸ்டோரி நடத்திய 'TamilNadu Story' நிகழ்ச்சியில்
“உங்களுக்குத் தேவையானது தயக்கமின்மை மட்டும் தான். அந்த அச்சத்தை தூக்கி வீசி விட்டு தொடர்ச்சியாக செயல்பட்டால் நீங்கள் வெற்றியாளர்.”
உள்ளடக்க உருவாக்கத்தில் உண்மையான ஈடுபாடும் ஆர்வமும் இருக்க வேண்டும், பண்த்திற்காக மட்டும் ஈடுபடக்கூடாது என்கிறார்.
"நீங்கள் விரும்பும் ஒன்றை செய்தால் வர்த்தகம் எத்தனை மோசமானதாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் நேசிக்கும் ஒன்றை செய்யும் போது, காலப்போக்கில் வர்த்தகம் உயரும்,” என்கிறார் உறுதியாக.
யுவர்ஸ்டோரியின் தமிழ்நாடு ஸ்டோரி 2024 நிகழ்ச்சியில் பேசிய, 7.5 மில்லியன் சந்தாதாரர்களை யூடியூபில் கொண்ட மற்றும் mCholas நிறுவனர் மதன் கவுரி, தூத்துக்குடியில் இருந்து பயணத்தை துவக்கி, முன்னணி டிஜிட்டல் செல்வாக்காளராக உயர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
மதன் கவுரி பயணத்தில் முக்கியத் தருணம், 2016ல் இந்தியாவில் ஜியோ அறிமுகமானது. அப்போது, அமெரிக்காவில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் அவர் மேற்படிப்பு படித்துக்கொண்டிருந்தார். இந்தியாவில் இணைய வசதியில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்த ஜியோ உள்ளடக்க உருவாக்குனர்களுக்கு பெரும் வாய்ப்புகளை திறந்துவிட்டது.
இதை உணர்ந்த மதன் கவுரி, டிஜிட்டல் பரப்பு முழுவதும் மாறி வரும் புரிதலோடு இந்தியா திரும்பினார். இந்த முடிவு அவரது எதிர்கால பாதையை வகுத்தது. இரண்டாவது முக்கியத் தருணம் கோவிட் பாதிப்பின் போது நிகழ்ந்தது. பொது முடக்கத்தின் போது அவரால், அரசு முடிவுகள், தொடர்பாக உடனடி தகவல்களை அளிக்க முடிந்தது. சரியான தகவல்களை, உடனடியாக அளிக்க முடிந்ததது ஆதரவை அதிகரிக்கச் செய்தது, என்கிறார்.
விலக்கப்பட்ட தலைப்புகளை எடுத்துக்கொண்டதும் கவனத்தை ஈர்த்தது.
"விலக்கப்பட்ட விஷயங்களை பேசியதும் பிரபலமாக்கியது. மற்றவர்கள் செய்யாததை செய்யும் போது, மக்கள் ஆர்வம் கொள்கின்றனர், என்கிறார். இந்த துணிச்சலான தன்மை மேலும் பரவலாக மக்களை சென்றடைய உதவியது.
அவரது வீடியோக்களில் அதிகம் பார்க்கப்பட்டது, பல கலாச்சாரங்களில் விலக்கப்பட்ட தலைப்பாக இருக்கும் மாதவிலக்கு தொடர்பான வீடியோ.
"ஆண்கள் மற்றும் ஆண் சந்தாதாரர்கள் நிறைந்த ஒரு துறையில், இந்த வீடியோ புதிய ஆதரவை பெற்றது. சரியான உள்ளட்டகம் நுகர இல்லை, என நினைத்த மக்கள் தொகையின் பாதி பிரிவினர் இந்த தலைப்பை பேச ஒருவர் இருக்கிறார் என புரிந்து கொண்டது,” என்று விளக்கம் தருகிறார்.
உள்ளடக்க உருவாக்கம் அல்லது எந்த வர்த்தகமாக இருந்தாலும் முற்போக்காக இருக்கும் வரை பிரச்சனை இல்லை. ஆனால், எதையேனும் பிற்போக்காக செய்தால் சிக்கல் தான், என்கிறார்.
Edited by Induja Raghunathan